PUBLISHED ON : பிப் 14, 2016

அ நிறம் | அளவு
காதல் பிரதேசம்!
காதல் ஒரு கனவுப் பிரதேசம்...
அதில் சுற்றும்போது
வெளி உலகு தெரிவதில்லை!
காதல் ஒரு பூந்தோட்டத் தீவு...
அதில் நடக்கும்போது
நறுமண வாசம் தான்!
காதல் ஒரு மர்மக் கூடாரம்...
அதில் உலவும்போது
பயநடுக்கம் மலரும் தான்!
காதல் ஒரு போர்க்களம்...
அதில் புகும்போது
போராட்ட வேதனைகள் தான்!
காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்...
அதில் ஆடும்போது
மறைந்து காணாமல் போவது தான்!
காதல் நினைவுகள் ஒரு கல்லறை...
அதில் நுழைந்து விட்டால்
மீள முடியாதுதான்!
காதல் ஒரு கண்ணீர்க் குளம்...
அதில் விழுந்து விட்டால்
மூழ்கிப் போவோம் தான்!
என்றாலும் காதல் காதல் தான்
காதல் போயின் சாதல் இல்லை
ஆதலால், நற்காதல் செய்வீர்!
— கே.என்.ராமகிருஷ்ணன், சென்னை.
