
திருநங்கையான விக்ரம்!
படத்துக்கு படம், புதுமைகள் செய்து வரும் விக்ரம், தற்போது நடித்து வரும், இருமுகன் படத்தில், திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன், எத்தனையோ நடிகர்கள், அம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதும், இதில், யாருடைய சாயலும் இல்லாத ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், இதற்காக திருநங்கைகளை நேரில் சந்தித்து, அவர்களது, 'பாடிலாங்குவேஜை' உள்வாங்கி, நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
— சினிமா பொன்னையா
நயன்தாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சமந்தா!
மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் நூறாவது படத்தில், தற்போது, நடித்து வருகிறார். இதையடுத்து, சிரஞ்சீவியின், 150வது படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம், விஜய் நடித்த, கத்தி படத்தின் ரீ - மேக் என்பதால், தமிழில், கத்தி படத்தில் நடித்த சமந்தா, சிரஞ்சீவியை சந்தித்து, 'கத்தி தமிழ் படத்தில் நடித்த நான் தான் தெலுங்கிலும் நடிப்பேன்...' என்று அடம்பிடித்து, அவ்வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இதனால், அப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்த நயன்தாரா, சிரஞ்சீவி பட வாய்ப்பை இழந்து விட்டார். உன்னைப் பிடி, என்னைப் பிடி... உலகாத்தாள் தலையைப் பிடி!
— எலீசா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - ராதிகா ஆப்தே!
அவ்வப்போது, ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து ஸ்ருதிஹாசன் கலக்கி வருவதைப் போன்று, கபாலி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள, ராதிகா ஆப்தேவும், ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்து, இந்திய இளசுகளை அதிர வைத்து வருகிறார். போகிற போது பொறி தட்டினதை போல!
— எலீசா
திருநெல்வேலி கதைக்களத்தில் நடிக்கும் விஜய்!
கமல் நடித்த, பாபநாசம் படம் திருநெல்வேலி கதைக்களத்தில் உருவானதை அடுத்து, தற்போது, பரதன் இயக்கத்தில் விஜயின், 60வது படமும், திருநெல்வேலியில் நடக்கும் கதையில் படமாகி வருகிறது. இப்படத்தில் ஜெகபதிபாபு, மைம் கோபி, டேனியேல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன் மற்றும் சரத் லோகித்ஸ்வா என, ஐந்து வில்லன்கள், விஜயுடன் மோதுகின்றனர். மேலும், முதன்முறையாக நெல்லை
தமிழ் பேசி நடிப்பதால், முறையாக பயிற்சி எடுத்து, நடித்து வருகிறார், விஜய்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
களவாணி நடிகரின் மார்க்கெட், சுத்தமாக குடை சாய்ந்து விட்டது. அதனால், ஒண்ணே கால் கோடி சம்பளம் கேட்டு வந்தவர், தற்போது, 40 லட்சத்துக்கு நடிக்கவும், தயாராகி விட்டார். அத்துடன், ஒரு படத்தில் வில்லனாகவும் நடிப்பவர், கதாநாயகன் இமேஜை விட்டு விடக்கூடாது என்பதற்காக, தன் அபிமான இயக்குனர் சிலரிடம், தன்னை வைத்து மீண்டும் படம் இயக்குமாறு, நடையாய் நடந்து வருகிறார்.
'தமிழ் நடிகைகளை புறக்கணிக்கின்றனர்...' என்று புலம்பி வரும் ஸ்ரீ நடிகைக்கு, சமீபத்தில், ஒரு ஆடியோ விழாவில் ஆறுதல் கூறினார், சுமார் மூஞ்சி குமாரு. விளைவு, இப்போது அடிக்கடி நடிகருக்கு போன் போட்டு ஆதரவு கேட்கிறார் நடிகை. இந்த சேதி, ரம்மி நடிகையின் காதுக்கு செல்ல, தன்னை தவிர, வேறு எந்த நடிகையையும், நடிகரின் பாசறைக்குள் வரவிடக் கூடாது என்பதற்காக, மேற்படி நடிகைக்கு சிபாரிசு செய்ய, நடிகருக்கு தடை போட்டுள்ளார்.
அட்டகத்தி படத்தில் நடித்த, நான்கெழுத்து நடிகை ஒப்பந்தமான புதிய படங்கள், கிடப்பில் கிடப்பதால், அடுத்தபடியாக புதிய படங்களை கைப்பற்ற, சில இயக்குனர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தி வருகிறார். மேலும், படங்களில் நடிக்கும் போது, துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை, சந்திப்புகளின்போது, 'அயிட்டம்' நடிகைகளே அதிர்ச்சியடையும் வகையில், ஆபாச உடை தரித்து சென்று, சம்பந்தப்பட்டவர்களை கிறங்கடித்து வருகிறார்.
சினி துளிகள்
* கிராமிய கதைகளாக நடித்து வரும் விமலுக்கு, நகர பின்னணி கொண்ட கதைகளில் நடிப்பதில், ஆர்வம் அதிகரித்துள்ளது.
* வந்தாமல படத்தில் நடித்த ஸ்ரீ பிரியங்கா, தற்போது, சாரல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
* பெங்களூரு நடிகையான நந்திதா, கன்னட படங்களில் நடிக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
அவ்ளோதான்!

