
ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ஒரு கோடி!
தமிழில், புத்தகம் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர், ராகுல் ப்ரீத் சிங். இரு படங்களுமே ஓடாததால், தோல்வி முகத்துடன், தெலுங்கிற்கு சென்ற அவர், தற்போது, அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அதனால், தமிழில் நடிக்கும் படங்களை, தெலுங்கில், ஓட வைக்க நினைக்கும் நடிகர்களின் கவனம், ராகுல் ப்ரீத் சிங் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில், தான் தயாரித்து, நடிக்கும், துப்பறிவாளன் படத்துக்கு, ராகுல் ப்ரீத் சிங் கேட்ட, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை தந்து, ஒப்பந்தம் செய்துள்ளார் விஷால்.
— சினிமா பொன்னையா
ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்!
கமல் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகி வரும், சபாஷ் நாயுடு என்ற படத்தில், கமலுக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க, இவர்களின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மனு நாராயணன், ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
— எலீசா
விஜய் படத்தில் அக் ஷய் குமார்!
ரஜினி நடித்து வரும், 2.௦0 படத்தில், வில்லனாக நடித்து வருபவர், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார். இவர், தமிழில் விஜய் நடித்த, துப்பாக்கி படத்தின், இந்தி ரீ- மேக்கான, ஹாலிடே படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்போது, விஜய் நடித்து வெளியாகியுள்ள, தெறி படத்தின், இந்தி ரீ -மேக்கிலும் நடிக்கயிருக்கிறார். அதனால், இந்தி ரீ -மேக் உரிமைக்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார், அக் ஷய் குமார்.
— சி.பொ.,
ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டின், முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, மல்யுத்த வீரர் ராக், கதாநாயகனாக நடிக்கும், பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். முதலில், இப்படத்தில் நாயகியாக நடிக்க முயற்சித்த பிரியங்கா சோப்ரா, வில்லி வேடத்துக்கு, முக்கியத்துவம் இருந்ததால், அக்கதாபாத்திரத்தில் நடிப்பதாக, கேட்டு வாங்கினார். எனினும், ராக்குடன் உதட்டு முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். அதனால், பே வாட்ச் ஹாலிவுட் படத்தை, உதட்டு முத்தக்காட்சி போஸ்டரை முன் வைத்து, இந்தியா முழுக்க வெளியிடுகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
டார்லிங் நடிகைக்கு, தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆசை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, 'எனக்கு சம்பளம் ஒரு பிரச்னையே இல்லை...' என்று கூறி, சில படங்களில், ஒப்பந்தமாகி வருகிறார். மேலும், அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, மேல்தட்டு கதாநாயகர்களுக்கும் கல்லெறிகிறார். இதனால், சில நடிகைகளுக்கும், டார்லிங் அம்மணிக்குமிடையே, தொழில் போட்டி சூடு பிடித்துள்ளது.
மேனன் நடிகை, 'இனிமே சினிமா தன்னை கை கழுவி விடும்...' என்று நினைத்திருந்த நேரத்தில், இரண்டு மெகா நடிகர்களின் படங்கள், வீட்டு கதவை தட்டியதால், உற்சாகமாகி விட்டார். அத்துடன், உடம்பில் பெரிய அளவில் கவர்ச்சி இல்லை என்பதால், 'ஷாட்ஸ்' அணிந்து, தொடை கவர்ச்சியையாவது காட்ட வேண்டும் என்று, புதிதாக, 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சி எடுத்து வரும் நடிகை, தன் ஆன்ட்டி தோற்றத்தை குறைத்து, இளமையாக ஜொலிக்க, சில ஆயுர்வேத சிகிச்சைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சினி துளிகள்!
* படப்பிடிப்பு தளங்களில், தன் அருகே அமரும் கதாநாயகர்களிடம், 'படபட'வென்று பேசி, அவர்களை காதுகளை பொத்தி, ஓட வைக்கிறார் நிக்கி கல்ராணி.
* விஜயசேதுபதியுடன் நடிக்கும், றெக்க படத்தில் காமெடி கலந்த கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.
அவ்ளோதான்!

