தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரமாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா!

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படங்கள், எந்திரன் மற்றும் பாகுபலி. தற்போது, அதை விடவும், கூடுதல் பட்ஜெட்டில், பாகுபலி-2 மற்றும் எந்திரன் - 2 போன்ற படங்கள், தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில், தேனாண்டாள் பிலிம்சின், 100வது படமான, சங்கமித்ரா படத்தை 350 கோடி பட்ஜெட்டில் இயக்குகிறார், சுந்தர்.சி., இப்படத்தில் நடிக்க, சில பிரபல தென்னிந்திய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், சங்கமித்ரா படத்தை, இந்தியா, அமெரிக்கா, ஈரான் மற்றும் டென்மார்க் உட்பட, 11 நாடுகளில் படமாக்கயிருகிறார்.

— சினிமா பொன்னையா

அஜித்தின் அடுத்த கெட்டப்!

கவுதம்மேனன் இயக்கத்தில், என்னை அறிந்தால் படத்தில், புலனாய்வுதுறை போலீசாக நடித்த அஜித், அடுத்து, தான் நடிக்கயிருக்கும், 57வது படத்திலும், சர்வதேச குற்றப் புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார். மேலும், இப்படத்திலும், 'சால்ட் அண்ட் பெப்பர்' ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடிப்பவர், 10 கிலோ எடையையும் குறைத்துள்ளார்.

சி.பொ.,

ரஜினி ரசிகராக விக்ரம் பிரபு!

ஏற்கனவே, பல நடிகர்கள் ரஜினி ரசிகராக நடித்து விட்ட நிலையில், தற்போது, சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவும் ஒரு படத்தில் ரஜினி ரசிகராக நடிக்கிறார். அப்படத்திற்கு, கபாலி படத்தில், ரஜினி பேசும், 'நெருப்புடா...' என்ற, 'பஞ்ச்' வசனத்தையே தலைப்பாக்கியிருக்கும் விக்ரம் பிரபு, 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, இப்படத்தை தானே தயாரித்து, நடிக்கிறார்.

சி.பொ.,

வில்லியாக நடிக்கும் நதியா!

திருமணத்திற்கு பின், ஜெயம்ரவி நடித்த, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில், அம்மா வேடத்தில் ரீ - என்ட்ரி கொடுத்தவர், முன்னாள் கதாநாயகி நதியா. அதையடுத்து, சில படங்களில், அம்மாவாக நடித்தவர், தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில், ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும், வாஸ்கோடகாமா என்ற படத்தில், வில்லியாக நடிக்கிறார். இப்படத்தில் நதியாவை சொர்ணாக்கா ரேஞ்சுக்கு களமிறக்கியுள்ளார், இயக்குனர், முருகதாஸ். திக்குக் கெட்டு திசை மாறி போகிறது!

எலீசா

முழு நேர பாடகியாகும் ரம்யா நம்பீசன்!

பீட்சா படத்தின் வெற்றிக்கு பின், விஜயசேதுபதி முன்னணி நடிகராகி விட்டபோதும், அப்பட நாயகி ரம்யா நம்பீசனுக்கு சரியானபடி படங்கள் இல்லை. மீண்டும் விஜயசேதுபதியுடன் நடித்த, சேதுபதி படத்தின் ஹிட்டுக்கு பின், தாய்மொழியான மலையாள படங்களில் நடித்து வந்தவர், பாண்டிய நாடு படத்தில், 'பை... பை... பை... கலாச்சி பை...' என்ற பாடலை பாடினார். இப்பாடல் ஹிட் ஆனதால் தொடர்ந்து, டமால் டுமீல் உட்பட சில படங்களில் பாடியவர், சமீபத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், செம போத ஆகாத படத்துக்காகவும் ஒரு பாடலை பாடியுள்ளார். இதையடுத்து, பின்னணி பாடுவதில் தன், முழு நேரத்தையும் செலவிடப் போவதாக கூறுகிறார், ரம்யா நம்பீசன்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை

புயல் காமெடியன், மீண்டும் காமெடிக்கு அடிக்கல் நாட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில், முன்னணி கதாநாயகர்களுக்கு இருக்கிற தடபுடல் கவனிப்புகள் தனக்கும் இருக்க வேண்டும் என்கிறார். அத்துடன், வளர்ந்து வரும் காமெடியன்களை எதிரில் கண்டால், எக்குத்தப்பாக பேசி, அவர்களை ஏகத்துக்கு டென்ஷன் ஆக்குவதால்,புயலின் சேட்டை அதிகமாக இருப்பதாக கூறி, கடுப்பாகின்றனர்.

வாகை சூடவா பட நடிகையின், கோலிவுட் மார்க்கெட், சுத்தமாக 'அவுட்'டாகி விட்டதால், அண்டை மாநில மொழிப்படங்களில் நடிப்பதற்காக முகாமிட்டுள்ளார். தமிழில் துக்கடா கவர்ச்சிக்கே தடை போட்டவர், மற்ற மொழிகளில், படுகவர்ச்சி நடிகையாக உருவெடுத்துள்ளார். இதன் காரணமாக, அம்மணி முகாமிட்டுள்ள ஓட்டலுக்கு, ஏராளமான தயாரிப்பாளர்கள், 'விசிட்' அடிக்க துவங்கியுள்ளனர்.

சினி துளிகள்

* வடிவேலுவுக்காக, இம்சை அரசன் ௨௩ஆம் புலிகேசி படத்தின், 2ஆம் பாகத்தை தயார் செய்து வருகிறார், சிம்புதேவன்.

* தெலுங்கில், நாக சைதன்யா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் இனியா.

* விஜயசேதுபதி நடிப்பில், கே.விஆனந்த் இயக்கும் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், டி.ராஜேந்தர்.

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us