sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 21, 2016

Google News

PUBLISHED ON : ஆக 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலியுடன் நடிக்கும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பின், மெகா பட்ஜெட் பட கதாநாயகனாகி விட்ட சந்தானம், புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா இயக்கும் படத்தில் புலியுடன் நடிக்கிறார். இப்படத்தில், சந்தானம், புலியுடன் மோதும் காட்சிகளில், புலியை, 'கிராபிக்ஸ்' வடிவில் காண்பிப்பதற்காக, 'கிராபிக்ஸ்' பணிகள் அமெரிக்க மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில், நடக்கிறது. இக்கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே, நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

— சினிமா பொன்னையா

சிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், மூன்று விதமான, கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, இப்படம், தன் திரை வாழ்வில், மைல் கல்லாக அமையும் என்கிறார். அத்துடன், இப்படத்தில், 90 கிலோ எடையில் தோன்றியிருப்பதுடன், தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் சில புதுமைகளை செய்து, தன் கெட்டப்பை பக்காவாக மாற்ற வேண்டும் என்பதற்காக, சில ஹாலிவுட், மேக் - அப் மற்றும் ஹேர் ஸ்டைல் டெக்னீஷியன்களை, கோலிவுட்டுக்கு வரவழைத்துள்ளார்.

சி.பொ.,

சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜயசேதுபதி!

சிவகார்த்திகேயனும், விஜயசேதுபதியும் தொழில்முறை போட்டியாளர்கள் என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், அவர்களோ நெருக்கமான நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும், ஒருவரது படத்தை, மற்றவர் பார்த்து விமர்சனம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன், பெண் வேடத்தில் நடித்துள்ள, ரெமோ படத்தின் டீசரைப் பார்த்த விஜயசேதுபதி, உடனே சிவகார்த்திகேயனுக்கு போன் போட்டு, 'நீங்க சூப்பர் பிகர் சார்...' என்று கலாய்த்துள்ளார்.

சி.பொ.,

த்ரிஷா வாய்ப்பை தட்டிப்பறித்த நயன்தாரா!

த்ரிஷா - நயன்தாராவுக்கு இடையிலான தொழில் போட்டி, நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக, முன்னணி கதாநாயகர்களோடு மட்டுமல்லாமல், 'சோலோ' கதாநாயகியாகவும் நயன்தாரா நடிப்பதை பார்த்த த்ரிஷா, நாயகி படத்தில், 'சோலோ' கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து, தற்போது, மோகினி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த, சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால், மீண்டும், இப்படத்தில் நடிக்க, கடுமையான முயற்சி எடுத்தார் த்ரிஷா. ஆனால், தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா, சாமி - 2 பட வாய்ப்பை, கைப்பற்றி விட்டார். இதனால், நயன்தாரா மீது, செம கடுப்பில் இருக்கிறார், த்ரிஷா.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சுள்ளான் நடிகரும், மெரினா நடிகரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய போதும், பின்னர், அவர்களது நட்பில் கீறல் விழுந்தது. இதனால், மெரினா நடிகருக்கு போட்டியாக கருதப்படும் நடிகர்களை வளர்த்து விடுவதில் அக்கறை காட்டுகிறார், சுள்ளான். இருப்பினும், கீறல் விழுந்த நட்பை சரி செய்ய துவங்கியிருக்கும் மெரினா நடிகர், சுள்ளான் தன்னை கண்டுகொள்ளாத போதும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு ஆஜராகி, வலுக்கட்டாயமாக அவரிடம் பேசி, தன் அன்பை பரிமாறி வருகிறார்; ஆனாலும் சுள்ளானிடமிருந்து பெரிதாக, 'ரியாக் ஷன்' இல்லை. மெரினாவை எதிரியாகவே பார்க்கிறார்.

பையா நடிகைக்கு, தொடர் வாய்ப்பளித்த சில இயக்குனர்கள் வீழ்ந்து கிடப்பதால், தற்போது, ஏதாவது தயாரிப்பாளரை பிடித்து தந்து உதவுமாறு, நடிகையிடம் உதவிக்கரம் நீட்டுகின்றனர். ஆனால், நடிகையோ, ஒரு காலத்தில் அவர்கள் அழைக்கும் போதெல்லாம் ஆஜராகி வந்தவர், தற்போது அவர்களின் தொல்லை தாங்காமல், தன் மொபைல் போன் எண்களை மாற்றி, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டார்.

சினி துளிகள்

* நீண்டகாலமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும், முடிஞ்சா இவனை புடி ஆடியோ விழாவில் கலந்து கொண்டனர்.

* பிரபுதேவாவுடன், தேவி படத்தில், இரு வேடங்களில் நடிக்கிறார், தமன்னா.

அவ்ளோதான்






      Dinamalar
      Follow us