தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமலுக்கான கதையில் நடிக்கும் விஷால்!

இயக்குனர் மிஷ்கின், கமலுக்காக எழுதிய கதை, துப்பறிவாளன். அதில், கமல் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால், தற்போது, அப்படத்தில் நடிக்க விஷாலை ஒப்பந்தம் செய்துள்ள மிஷ்கின், 'இதற்கு முன், பல உளவுத்துறை கதைகள் வந்திருந்த போதும், இது, புது மாதிரியானதாக இருக்கும்...' என்று கூறுகிறார். இப்படத்தை, ஹாலிவுட் பாணியில், பிரமாண்டமாக படமாக்குவதோடு, சண்டை காட்சிகளை, உயரமான கட்டடங்களில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

- சினிமா பொன்னையா

ரசிகர்களுக்காக வாயைக் கட்டும் தமன்னா!

'என் உடல் எடையை, 55 கிலோவுக்குள் வைத்துள்ளேன்...' என்று கூறும் தமன்னா, 'என் விருப்ப உணவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்; சில சமயம், மற்றவர்கள் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடும் போது, அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால், அப்போது, என் மனக்கண்ணில் ரசிகர்களின் முகம் வரும். நான் இப்படி, 'ஸ்லிம்'மாக, அழகாக இருப்பதால் தானே, அவர்கள் என்னை ரசிக்கின்றனர். நான், 'வெயிட்' போட்டு விட்டால் ரசிக்க மாட்டார்கள் என்பதை நினைத்துக் கொள்வேன். ரசிகர்களா, சாப்பாடா என்று பார்க்கையில், சாப்பாட்டை தள்ளி வைத்து விடுகிறேன்...' என்கிறார். உள்ளதைக் கொண்டு தான் ஊராள வேண்டும்!

— எலீசா

பிரபல கதாநாயகிகளுக்கு குறி வைக்கும் சந்தானம்!

காமெடியனாக இருந்த சந்தானம், கதாநாயகனாகி விட்டபோதும், அவருடன், 'டூயட்' பாடுவதற்கு, முன்னணி நடிகைகள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த, ரெஜினாவை, செல்வராகவன் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்திற்கு ஜோடி சேர்த்துள்ளார். அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருக்கும், ரொமான்டிக் படத்திற்கு, ஒரு முன்னணி நடிகையை பிடித்தே தீருவது என்று நயன்தாரா மற்றும் காஜல்அகர்வால் போன்ற சில நடிகைகளின் பெயரை, அவரது காதில் கிசுகிசுத்திருக்கிறார் சந்தானம்.

— சி.பொ.,

தனுஷின் நீண்ட கால ஆசை!

சமீபகாலமாக, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என, பன்முகம் கொண்டவராக, வலம் வருகிறார், நடிகர் தனுஷ். இந்நிலையில், அஜித்தின் ஒரு படத்திலேனும், பின்னணி பாட வேண்டும் என்ற ஆசை, தனுஷுக்கு ஏற்பட்டுள்ளது. இதை, தற்போது, அஜித்தின், 57வது படத்திற்கு இசையமைத்து வரும், தன் உறவினரான இசையமைப்பாளர் அனிருத்திடம் தெரிவித்துள்ள தனுஷ், 'என் நீண்டகால ஆசையை விரைவில் நிறைவேற்று...' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

— சி.பொ.,

மம்மூட்டிக்கு வில்லனாகும் ஆர்யா!

சமீபகாலமாக, ஆர்யா நடிக்கும் அனைத்து படங்களுமே, தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது, கடம்பன் படத்தில் நடித்து வந்தாலும், முன்னணி கதாநாயகர்களின் படங்களில், வில்லனாக நடிக்க, முயற்சி எடுத்து வந்தார். இதன் விளைவாக, தற்போது, மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும், தி கிரேட் பாதர் என்ற படத்தில், வில்லன் வேடம் கிடைத்துள்ளது. இப்படத்தில், கொடூரமான வில்லனாக நடிக்கும் ஆர்யா, தன் கெட்டப்பை முழுமையாக மாற்றி நடிக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தளபதி நடிகருடன் இணைந்துள்ள மாஜி நடிகையின் வாரிசு, அந்த படத்தில் தான் மட்டுமே நாயகி என்று நினைத்திருந்தார். ஆனால், அப்படத்திற்கு மேலும் இரண்டு நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளனர். அதனால், நடிகைக்கு, நடிகருடன் டூயட் பாடும் வேலை மட்டுமே படத்தில் உள்ளது. இதனால் ஏற்பட்ட கடுப்பில், மேற்படி நடிகைகள், ஸ்பாட்டில் தன்னிடம் பேச வந்தாலே, முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்கிறார் நடிகை.

வம்பு நடிகருடன், அம்மா வேடத்தில் நடித்துள்ள சிவாஜி கேர்ள், அப்படத்தில் நடிப்பதற்காக, சென்னை வந்தபோது, சில அபிமான நரைமுடி தயாரிப்பாளர்களுடன், 'மீட்டிங்' போட்டுள்ளார். அப்போது, அப்படத்திற்கு புதிய படங்கள் சம்பந்தமாக, பிள்ளையார் சுழியிட்ட நடிகை, அவர்களை, தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வரவழைத்து, சிறப்பு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

சினி துளிகள்!

* விஜய்யுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் தான் நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார்.

* டிரிபிள் ஏ என்ற படத்தில், அம்மா வேடத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, 'இனிமேல் கதாநாயகி, 'இமேஜ்' பற்றி கவலைப்படப் போவதில்லை...' என்கிறார்.

* 'முன்னணி கதாநாயகன் படமாக இருந்தாலும், என் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்...' என்கிறார், நித்யாமேனன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us