தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போலீஸ் வேடத்தில் நயன்தாரா!

மாயா படத்தில், 'சோலோ' கதாநாயகியாக நடித்த நயன்தாரா, தற்போது, டோரா என்ற படத்தில், த்ரில் கதையில் நடித்து வருகிறார். இதையடுத்து, இமைக்கா நொடிகள் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம், அதிரடி ஆக் ஷன் கதாநாயகியாக உருவெடுக்கும் நயன்தாராவுக்கு, சில மாதங்களாக, சண்டை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

— சினிமா பொன்னையா

ரஜினியை பாட வைக்கும் சந்தோஷ் நாராயணன்!

ரஜினியின், கபாலி படத்துக்கு இசையமைத்த, சந்தோஷ் நாராயணன், சிங்கப்பூர் மற்றும் மலேஷியா உள்ளிட்ட சில வெளிநாடுகளில், வரும் டிசம்பர் மாதம், 'லைவ் மியூசிக் கான்சர்ட்' என்ற நிகழ்ச்சி நடத்தப் போகிறார். இந்நிகழ்ச்சியில், கபாலி படத்தில் இடம் பெற்ற, 'நெருப்புடா... நெருங்குடா...' என்ற பாடலை, ரஜினியை பாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு, ரஜினியும், தனக்கு சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளில், ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், கண்டிப்பாக பாடுவதாக, சம்மதம் தெரிவித்துள்ளார்.

— சி.பொ.,

சமுத்திரகனியின் ஆர்வம்!

சாட்டை படத்தில், பள்ளி ஆசிரியராக நடித்த சமுத்திரகனி, அதன் பின், அப்பா படத்திலும், மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கதையை, இயக்கி நடித்தார். அவ்விரண்டு படங்களுமே, அவருக்கு வெற்றியை கொடுத்ததை அடுத்து, தற்போது, மீன் என்ற படத்தில், மாணவர்கள் கதையில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன்பின், இன்றைய கல்வி நிலை குறித்த ஒரு கதையை, அவர் தயார் செய்து வருகிறார்.

— சி.பொ.,

வேகமாக வளரும் மலையாள நடிகை!

மலையாளத்தில், ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தில் நடித்தவர், மஞ்சிமா மோகன்; அவரை, தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இயக்கி வரும், அச்சம் என்பது மடமையடா படத்தில், இரண்டு மொழிக்கும் நாயகியாக்கினார் கவுதம் மேனன். ஆனால், அப்படமே இன்னும் வெளிவராத நிலையில், விக்ரம் பிரபுவுடன், முடிசூடா மன்னன் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், தற்போது, ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, இரண்டு தமிழ் படங்களில் நடிக்க, பேச்சுவார்த்தையில் உள்ளார். அதிஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!

— எலீசா

பாலா படத்தில் நடிக்க தயங்கிய ஹீரோக்கள்!

பாரதிராஜாவின் கனவு படமான, குற்றப்பரம்பரை படத்தைப் போன்று, குற்றப்பத்திரிகை என்றொரு, சரித்திர படத்தை இயக்க இருந்தார், இயக்குனர் பாலா. அதில் நடிக்க, விஷால், ஆர்யா, ராணா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களிடமும், பேச்சுவார்த்தை நடத்தினார்; ஆனால், தாரைத்தப்பட்டை படத்தின் அதிர்ச்சி தோல்வி காரணமாக, அவரது படத்தில் நடிக்க, மேற்படி நடிகர்கள், தயக்கம் காட்டுகின்றனர். அதனால், அப்படத்தை கிடப்பில் போட்டு, சாட்டை படத்தில் நடித்த யுவன் மற்றும் சூப்பர் சிங்கர் பாடகி பிரகதியை ஜோடி சேர்த்து, பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை இயக்க இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சமீபகாலமாக, இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லும் போதே, ஏகப்பட்ட காட்சிகளை கத்தரித்து விடும், சுள்ளான் நடிகர், மைனா பட இயக்குனரின் இயக்கத்தில், தான் நடித்த படத்தை பார்த்து, தனக்கான காட்சிகள், குறைவாக இருந்ததைக் கண்டு கொதித்து விட்டார். அத்துடன், இயக்குனரை, தன் அருகே உட்கார வைத்து, மேற்படி படத்தில், மற்ற நடிகர்கள் நடித்த பல காட்சிகளை கத்தரித்து விட்டார். இதனால், இயக்குனருக்கும், நடிகருக்குமிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

வம்புக்கார நடிகர், நவரசநாயகனின் பாணியில், இயக்குனர்களை டென்ஷன் செய்வது, தொடர்கதையாகி விட்டது. அப்படி, அவர் மூன்று வேடத்தில் நடித்து வரும் படத்தில், அதிக அலம்பல் செய்ததால், தற்போது, அவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை, 'டூப்' வைத்தே படமாக்கி வருகின்றனர். அவ்வகையில், 'நடிகரை விட, அவரது வேடத்தில், 'டூப்' நடிகர் நடித்த காட்சிகள் தான் அதிகம்...' என்று அப்படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.

சினி துளிகள்!

* கவுதம்மேனனின், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்து, ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

* தமிழ் மற்றும் தெலுங்கு என, இரண்டு மொழிகளிலும் பின்னணி பாடி வருகிறார், சிம்பு.

* சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில், ஸ்ருதிஹாசனின் அம்மாவாக நடிக்கிறார், ராதிகா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us