தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ராக்' ஸ்டாரான எஸ்.ஜே.சூர்யா!



இசை படத்தை இயக்கி, நடித்த எஸ்.ஜே.சூர்யா, அதையடுத்து, முழுநேர நடிகராகி விட்டார். தொடர்ந்து, வை ராஜா வை மற்றும் இறைவி படங்களில் நடித்தவர், தற்போது, செல்வராகவன் இயக்கியுள்ள, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நாயகனாக நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்தை பார்த்த செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு, 'ராக் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்; அதை, வரவேற்றுள்ளார், எஸ்.ஜே.சூர்யா.

— சினிமா பொன்னையா

கவர்ச்சி கதாபாத்திரத்தில் அமலாபால்!



தனுஷ் நடிக்கும், வடசென்னை படத்தில், அமலாபால் மீனவ பெண்ணாக நடிப்பதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறன், அதை மறுக்கிறார். 'அப்படத்தில், இதுவரை நடிக்காத, ஒரு வித்தியாசமான வடசென்னை பெண்ணாக நடிக்கிறார், அமலாபால். அக்கதாபாத்திரம், ஓரளவு கவர்ச்சியா கவும் இருக்கும்...' என்கிறார். முதல் மடைக்கு எரு போடு; கடை மடைக்கு வரப்புப் போடு!

— எலீசா.

'ஸ்லிம்' நடிகையாகும் லட்சுமிமேனன்!



அதிக உயரம் கொண்டவர், கும்கி நாயகி லட்சுமிமேனன். அவரது உயரத்தை காரணம் காட்டியே, சிலர் அவரை ஓரங்கட்டுவதால், தற்போது தன்னை உயரமாக காட்டும் காலணிகள் அணிவதை தவிர்க்க துவங்கியுள்ளார். அத்துடன், தன் உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்'மாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல்!

— எலீசா

வில்லனான, ஜோக்கர் பட நாயகன்!



ஜோக்கர் படத்தில், நாயகனாக நடித்த குரு சோமசுந்தரம், அடுத்த படியாக, கதாநாயகன் வேடம் கிடைக்காததால், யாக்கை என்ற படத்தில், வில்லனாக நடிக்கிறார். ஜோக்கர் படத்தில், எந்தளவுக்கு, சமூக நோக்கமுள்ள வேடத்தில் நடித்தாரோ, அதற்கு எதிர்மறையாக, இப்படத்தில், சமூக விரோத செயல்களை செய்யும், அதிரடி வில்லனாக நடிக்கிறார்.

— சி.பொ.,

கவுதம்மேனன் வேடத்தில் இந்தி நடிகர்!



சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர் தான், கவுதம்மேனன். ஆனால், எதிர்பாராதவிதமாக, இயக்குனராகி விட்டார். இந்நிலையில், சில படங்களில், 'கெஸ்ட்' கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் அவரை, அதர்வா நடிக்கும், இமைக்கா நொடிகள் படத்தில், வில்லனாக நடிக்க அழைத்த போது, மறுத்து விட்டார். அதனால், தற்போது, அவ்வேடத்தில், பாலிவுட் நடிகர், அனுராக் காஷ்யப் நடிக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை



மெரினா பட நடிகருடன், இரண்டு படங்களில் நடித்துள்ள ஸ்ரீ நடிகை, மீண்டும் அவருடன் நடிக்க கல்லெறிந்து வருகிறார். ஆனால், நடிகரோ, மேல்தட்டு நடிகைகளின் வளையத்திற்குள் சென்று விட்டதால், அம்மணியின் தொடர்புக்கு அப்பால் உள்ளார். இருப்பினும், பழகிய, பசுமையான நினைவுகளை, எடுத்துக் கூறி, நடிகரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்த வாரிசு நடிகை, தற்போது, சொந்தமாக முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அதனால், 'அவுட்டோர்'களுக்கு, 'சோலோ'வாக சென்று வரும் நடிகை, நாயகர்களுடன், மணிக்கணக்கில் அரட்டையில் ஈடுபடுகிறார். அத்துடன், 'அவுட்டோர்'களில் நடக்கும், நள்ளிரவு விழாக்களில், கலந்து, குத்தாட்டமாடி, அனைவரையும் திணறடிக்கிறார்.

சினி துளிகள்!



* பைரவா படத்தில், கல்லூரி மாணவியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

* மாவீரன் கிட்டு படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us