தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வேங்கை' தலைப்பில் இரண்டு படங்கள்!

ஹரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம் வேங்கை. ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே தாங்கள் பதிவு பண்ணி விட்டதாக சொல்லி, ஊலலலா படத்தை தயாரித்துள்ள நிறுவனம் தற்போது போர்க்கொடி பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தலைப்பை ஹரி விட்டுக் கொடுக்காவிடில், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. — சினிமா பொன்னையா.

உணவு கட்டுப்பாட்டில் தமன்னா!

உடல் கட்டை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார் தமன்னா. அதனால், தன் பேமிலி டாக்டர், பட்டியல் போட்டுக் கொடுத்த உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். நட்பு அடிப்படையில் யாராவது விருந்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் கூட, அவர்களை சந்தித்து, 'ஹாய்' மட்டுமே சொல்லும் தமன்னா, அங்கு பச்சை தண்ணீர் கூட அருந்துவதில்லை. சுவரை வைத்துக் கொண்டல்லவோ சித்திரம் எழுத வேண்டும்? — எலீசா.

டென்ஷனில் மேக்னா!

'நமீதா இடத்தை பிடிப்பேன்...' என்று கூறிய இந்திர விழா ஸ்ருதி காணாமல் போய்விட்டதால், 'நயன்தாரா இடத்தை பிடிக்கப் போவது நீதான்...' என்று யாராவது மேக்னாவிடம் சொன்னால், டென்ஷனாகி விடுகிறார். 'யார் இடத்தையும் பிடிக்க நான் வரவில்லை. எனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கவே முயற்சி எடுத்து வருகிறேன்...' என்று, சொன்னவர்களின் வாயை அடைத்து விடுகிறார். அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்! - எலீசா.

கதை எழுதும் மாதவன்!

கமல்ஹாசன் கதை எழுதி நடிப்பதைத் தொடர்ந்து, மாதவனுக்கும் கதை எழுதும் ஆசை ஏற்பட்டுள்ளது. தான் நடிப்பதற்காக சில கதைகளை எழுதி வைத்திருப்பவர், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தன் கதையைச் சொல்லி வருகிறார். 'இந்தக் கதையை வைத்து என்னை இயக்கினால், உடனே கால்ஷீட் தருகிறேன்...' என்றும் கூறுகிறார். — சி.பொ.,

சாக்லேட் இமேஜ் மாறுமா?

'இதுவரை நான் நடித்த படங்களில், பேராண்மை படமே திருப்தி தந்த படம்...' என்கிறார் ஜெயம் ரவி. இப்போது, அமீர் இயக்கத்தில் நடித்துள்ள ஆதிபகவன் படம், என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும். இதன்பிறகு, சாக்லேட் ஹீரோவாக பதிந்துள்ள என் இமேஜ் அடியோடு மாறி, என்னை ஆக்ஷன் ஹீரோ வரிசையில் கொண்டு சேர்க்கும்...' என்கிறார். — சி.பொ.,

சாந்தினியின் பீலிங்ஸ்!

சித்து +2 படத்தில் நடித்த சாந்தினியின் நடிப்பு, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காவிட்டாலும், கோடம்பாக்க டைரக்டர்கள் சிலரை கவர்ந்து விட்டது. அதனால், படம் திரைக்கு வந்த சில நாட்களிலேயே சாந்தினியிடம் கதை சொல்லி, அவரது பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், சாந்தினியோ, 'வந்த படங்களில் ஒன்று கூட பிரபல ஹீரோக்களின் படம் இல்லையே...' என்று, யாருக்கும் எந்த முடிவும் சொல்லாமல், 'பீல்' பண்ணிக் கொண்டிருக்கிறார். கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்! — எலீசா.

இயக்குனராகும் வில்லன்!

திடுதிப்பென்று பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் டவுனாகி விட்டது. அதனால், மீண்டும் தன் டூயட் மூவிஸ் சார்பில் படம் தயாரிக்க முடிவெடுத்துள்ள பிரகாஷ்ராஜ், மும்பையில் முகாம் போட்டு கதை விவாதம் நடத்தி வருகிறார். இனி, தான் தயாரிக்கும் அத்தனை படங்களையும் தானே இயக்கவும் முடிவெடுத்துள்ளார். — சினிமா பொன்னையா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us