PUBLISHED ON : டிச 18, 2016

அமெரிக்க ஸ்டுடியோவில் விஜய் படப்பிடிப்பு!
தற்போது, பரதன் இயக்கி வரும், பைரவா படத்தில், இரு வேடங்களில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக தன்னை வைத்து, தெறி படத்தை இயக்கிய, அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, அமெரிக்காவில் உள்ள, 'வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ'வில் நடைபெற இருக்கிறது.
-- சினிமா பொன்னையா.
ராகுல்ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி கண்காட்சி!
ஹன்சிகா மற்றும் சமந்தா போன்ற நடிகைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் ஏழைகளுக்கு, மருத்துவ செலவுகள் செய்து வரும் நிலையில், விலங்குகள் நலனில், அக்கறை காட்டி வருகிறார் த்ரிஷா. இந்நிலையில், புத்தகம் மற்றும் தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்த ராகுல்ப்ரீத் சிங், பாலியல் கொடுமையால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் விதமாக, உடற்பயிற்சி கண்காட்சி நடத்துகிறார்.
-- எலீசா
பாடகரான அரவிந்த்சாமி!
ரோஜா புகழ் அரவிந்த்சாமி, இதுவரை, எந்த படத்திலும், பின்னணி பாடியதில்லை. ஆனால், சமீபகாலமாக, நான் கடவுள் பட ராஜேந்திரன் போன்ற நடிகர்களே பாடி வருவதால், போகன் படத்தில், அரவிந்த் சாமியையும், ஒரு பாடலை, பாட வைத்துள்ளனர். இப்பாடல், 'ஹிட்' டானால், விஜய், சிம்பு மற்றும் தனுஷ் பாணியில், அரவிந்த்சாமியும் தொடர்ந்து, தான் நடிக்கும் படங்களில், பின்னணி பாட உள்ளார்.
-- சி.பொ.,
திருமணத்தை விரும்பாத சாய்பல்லவி!
பிரேமம் பட நாயகி சாய் பல்லவிக்கு, திருமண ஆசை, சுத்தமாக இல்லை. அதுபற்றி அவர் கூறும் போது,'திருமணம் என்பது, வாழ்க்கைக்கு தேவையானது தான்; ஆனால், என்ன காரணமோ, எனக்கு அதில் இஷ்டமில்லை. எப்போதுமே, என் பெற்றோருடன் இருந்து, அவர்களுக்கு உறுதுணையாக வாழவே விரும்புகிறேன்...' என்கிறார்.
-- எலீசா
கராத்தேயில், 'பிரவுன் பெல்ட்' வாங்கிய சந்தானம்!
சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து, தற்போது, கண்ணா லட்டு தின்னா ஆசையா படத்தை இயக்கிய, மணிகண்டன் இயக்கத்தில், ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில், ஆக் ஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார், காமெடி நடிகர் சந்தானம். மேலும், இப்படத்தில், கராத்தே சண்டை காட்சியும் உள்ளது. ஏற்கனவே, கராத்தேயில், 'பிரவுன் பெல்ட்' வாங்கியுள்ள சந்தானம், அக்காட்சியில், 'டூப்' இல்லாமல், 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ளார்.
-- சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
இதுவரை, தன் மகளுக்கு, பலத்த கட்டுக்காவல் போட்டிருந்தார், மாஜி நடிகை. ஆனால், தற்போது, மகளின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதோடு, மேல்தட்டு புள்ளிகளுடன், அவர் நட்பு வளர்த்தால் தான், இந்த இடத்தை தக்க வைக்க முடியும் என்பதால், கட்டுக்காவலை தளர்த்தி விட்டார். அத்துடன், எந்நேரமும், மகளுடன் நிழல் போல் தொடர்ந்த மாஜி, தற்போது, அவரை, தனியாக அனுப்பி, பழக விட்டு வருகிறார்.
மூன்றாவது காதலர் படம் இயக்க, மறைமுக தயாரிப்பாளராக இருந்து வரும் தாரா நடிகை, தன் காதலர் வெளியில் செல்லும் போது, எம்மாதிரியான உடைகளை அணிய வேண்டும்; எம்மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி கூட, தானே முடிவெடுக்கிறார். அந்த அளவுக்கு, காதலரை, முழுக்க முழுக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், அம்மணியின் கட்டுப்பாட்டில் சிக்கி, சுதந்திரத்தை இழந்துள்ளார், இயக்குனர்.
பையா நடிகைக்கு, பெரிதாக மார்க்கெட் இல்லை என்பதால், கதாநாயகர்களை அரவணைத்து சென்றால் தான், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், சென்னை வரும் போதெல்லாம், தான் தங்கும் ஓட்டல் அறைக்கு, 'மெகா' நடிகர்களை அழைத்து, விருந்து உபசரிப்பு நடத்துகிறார். அவர்கள் போதை பிரியர் என்றால், விடிய விடிய, சரக்கை ஊற்றிக் கொடுத்து, குத்தாட்டமாடி, அவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
சகுனி பட நடிகை, நடித்த படங்கள் எதுவும் ஓடாததால், அவர் மீது, ராசி இல்லாத நடிகை முத்திரை விழுந்து விட்டது. இருப்பினும், விடாமுயற்சியாக மீண்டும், தமிழில், இரண்டு படங்களில் நடித்து வரும் நடிகை, அப்படங்கள் வெற்றி பெற்று, தமிழில் பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக, சமீபத்தில், சில பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று, சிறப்பு பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தியுள்ளார். இதில், நடிகையின் நல விரும்பிகள் சிலரும், கலந்து கொண்டுள்ளனர்.
சினி துளிகள்!
* தர்மதுரை படத்தை தொடர்ந்து, மீண்டும், விஜய சேதுபதியுடன், ஒரு படத்தில் நடிக்க, பேசி வருகிறார் தமன்னா.
* எத்தனை பெரிய காட்சியாக இருந்தாலும், 'சிங்கிள் டேக்'கில் ஓ.கே., செய்து கொடுக்கிறார் நயன்தாரா.
* பாபிசிம்ஹாவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்த, பாம்புசட்டை படம், ரிலீசுக்கு தயாராகி விட்டது.
* தமிழில், எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரணிதா.
அவ்ளோதான்!
