sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரமாண்ட பட்ஜெட்டில் மோகன்லால் படம்!

பாகுபலி படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கி வரும், 2.0 படம், 400 கோடி பட்ஜெட்டில், தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தையே மிஞ்சும் வகையில், மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும், ராண்டமூலம் என்ற படம், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. மலையாள படமொன்று, இத்தனை கோடி பட்ஜெட்டில் தயாராவது, பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா கலைஞர்களை, ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா பொன்னையா.

நடிகைகள் செய்யும் வினோத பப்ளிசிட்டி!

இலியானா மற்றும் த்ரிஷா போன்ற நடிகைகள், தங்களது, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், தண்ணீருக்குள் நிற்பது போன்ற கவர்ச்சிகரமான, வீடியோக்களை வெளியிட்டு, பரபரப்பு கூட்டியதை தொடர்ந்து, ஹன்சிகா, தன் குத்தாட்ட, 'வீடியோ'வை வெளியிட்டார். தமன்னாவோ, தான் உடற்பயிற்சி செய்யும், 'வீடியோ'வை வெளியிட்டுள்ளார். இதற்கு, ஏராளமான ரசிகர்கள், 'லைக்' கொடுத்து வருகின்றனர். ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்!

எலீசா.

காஜல் அகர்வாலுக்கு பெரிய, 'ஷாக்!'

'ரொமான்டிக்' நாயகியாக, வலம் வந்த, காஜல் அகர்வால், தற்போது, கைதி நம்பர் -150 படத்தில், சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதனால், இதுவரை காஜலுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த இளவட்ட தெலுங்கு நடிகர்கள், முதிர்ந்த கதாநாயகனுடன், 'டூயட்' பாடியுள்ளதை காரணம் காட்டி, காஜலை தவிர்க்கின்றனர். இதனால், 'அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, இளம் கதாநாயகர்களின் அதிருப்திக்கு ஆளாகி விட்டேனே...' என்று, வருத்தப்படுகிறார். பேராசை பெரு நஷ்டம்!

சி.பொ.,

அஜித் மற்றும் நயன்தாரா பட்டியலில் ஜெய்!

கோலிவுட் நடிகர், நடிகைகளில் அஜித் மற்றும் நயன்தாரா இருவருமே தாங்கள் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அவர்களை தொடர்ந்து, இப்போது, ஜெய்யும், தன் படங்களின், 'ஆடியோ' நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அவரை, தயாரிப்பாளர்கள் அழைத்தால், 'நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது; இனி, மேற்கொண்டு விளம்பரம் செய்வது, உங்களது வேலை; அதற்கு என்னை அழைக்காதீர்கள்...' என்று, தன் நிலையை, உறுதியாக சொல்லி விடுகிறார்.

சி.பொ.,

விமலாராமனை அம்மனாக்கிய கேரளத்து ரசிகர்கள்!

தமிழகத்தில், குஷ்பு மற்றும் நக்மா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு, ரசிகர்கள் கோவில் கட்டியதை போன்று, கேரளாவில், நடிகை விமலாராமனை, அம்மனாக சித்தரித்து, அவரது ரசிகர்கள், அம்மன் உருவ புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதை வரவேற்றுள்ள விமலாராமனும், ரசிகர்களுக்கு, தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இவர், தமிழில், கே.பாலசந்தர் இயக்கிய, பொய் என்ற படத்தில், நாயகியாக நடித்தவர். எல்லாரும் தேங்காய் உடைத்தால், நான் சிரட்டையாவது உடைக்கலாம்!

எலீசா.

சபாஷ் நாயுடுவுக்கு எதிர்ப்பு!

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில், டாக்டர்கள், பணம் வசூலிப்பது போன்று நடித்து, டாக்டர்களின் எதிர்ப்புக்கு ஆளான கமல், விஸ்வரூபம் படத்தில் நடித்த போது, முஸ்லீம்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில், தற்போது, தன் படத்துக்கு, சபாஷ் நாயுடு என்று, ஜாதி பெயரில் தலைப்பு வைத்திருப்பதை தொடர்ந்து, இதற்கும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், 'எக்காரணம் கொண்டும் டைட்டில் மாற்றப்படாது...' என்று, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கமல்.

— சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

மாஜி நடிகையின் வாரிசு, முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பதோடு, தவிர்க்க முடியாத காரணங்களால், சிறிய ஓட்டல்களில், வசதி செய்து கொடுத்தால், டென்ஷன் அடைந்து, 'இம்மாதிரி இடங்களில் எல்லாம் தங்க முடியாது...' என்று கூறி, அவுட்டோரில் இருந்து சென்னைக்கு பறந்து விடுகிறார். இதனால், அம்மணி மீது, தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சினி துளிகள்!

* லிங்குசாமியின், சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

* அரவிந்த்சாமி நடிக்கும், சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில், அவரது மனைவியாக நடிக்கிறார், பூர்ணா.

* விதார்த் நடித்துள்ள, குரங்கு பொம்மை படத்தின், 'அனிமேட்டட்' போஸ்டரை, நடிகர் விஜயசேதுபதி, தன், 'பேஸ்புக்'கில் வெளியிட்டு உள்ளார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us