தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நார்வே' திரைப்பட விருது!

நார்வே தலைநகர் ஆஸ்லோவில், எட்டாவது, நார்வே திரைப்பட விருது விழா, வருகிற ஏப்., 27ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில், தர்மதுரை படத்தில் நடித்த விஜயசேதுபதி மற்றும் தாரைத் தப்பட்டை படத்தில் நடித்த வரலட்சுமிக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. மேலும், சிறந்த இயக்குனருக்கான விருதை, விசாரணை படத்தை இயக்கிய, வெற்றிமாறன் பெறுகிறார்.

சினிமா பொன்னையா.

ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!

பாகுபலி சரித்திர படத்தை, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய, ராஜமவுலி, தற்போது, அப்படத்தின், இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். ஏப்ரலில், அப்படம் ரிலீசாக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்து, மகாபாரதத்தை, புது வடிவத்தில் பிரமாண்டமாக எடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

சி.பொ.,

தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!

வேலையில்லா பட்டதாரி படத்தில், அமலாபால் நடித்த போதே, அவருக்குள் ஒரு பாடகி இருப்பதை கண்டுபிடித்த அப்பட இசையமைப்பாளர் அனிருத், அவரை ஒரு பாடல் பாட சொன்னார்; அப்போது, அதற்கு உடன்படவில்லை, அமலாபால். ஆனால், தற்போது, மலையாளத்தில், ஜெயராமுடன் நடித்து வரும், அச்சயான்ஸ் என்ற படத்தில், ஒரு பாஸ்ட் பீட் பாடல் பாட இருக்கிறார். ஆடிக்கு அடைப்பட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே!

எலீசா

மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!

கடந்த, 35 ஆண்டுகளாக, தன் ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக செயல்படுத்தி வருபவர், கமல்ஹாசன். இந்நிலையில், சமீபகாலமாக, அரசியல் ரீதியான கருத்துகளை, தன், 'டுவிட்டரில்' வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை; ஓட்டு அரசியல் செய்யாமல், மக்களுக்காக, அவர்களுக்கு நல்லது நடப்பதற்கான அரசியல் செய்ய போகிறேன்.அதற்காக, என் நற்பணி மன்றம், எப்போதும் குரல் கொடுக்கும். முக்கியமாக, ஒரு மனிதனாக இருந்து, ஜாதி - மதம் பார்க்காமல், அனைத்து மக்களுக்காகவும் போராடுவேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா.

கறுப்புப் பூனை!

தல மற்றும் தளபதி நடிகர்கள் சேர்ந்து, முன்பு ஒரு படத்தில் நடித்தனர். அதையடுத்து, அவர்களை மறுபடியும் இணைத்து படமெடுக்க, மங்காத்தா பட இயக்குனர் முயற்சி எடுத்தார்; ஆனால், அது 'ஒர்க் - அவுட்'டாகவில்லை. இந்நிலையில், தற்போது, உச்ச நடிகர் படத்தை இயக்கி வரும் பிரமாண்டம், அடுத்து இயக்கும் படத்தில், மேற்படி நடிகர்கள் நடிப்பதற்கான உடன்படிக்கை, சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.

இரண்டெழுத்து படத்தில் நடித்த போது தான், வம்பு நடிகருக்கும், பப்ளிமாஸ் நடிகைக்குமிடையே, காதல் பூத்தது; ஆனால், மகளின் மார்க்கெட் சூடு பிடிக்கிற நேரத்தில், காதல் கத்திரிக்காய் என்று விழுந்ததால், கடுப்பான நடிகையின் தாய்குலம், வம்புக்காரரிடமிருந்து, மகளை லாவகமாக பிரித்து, மறுபடியும் படங்களில் நடிக்க வைத்தார். ஆனால், தற்போது, பப்ளிமாஸ் நடிகையின் மார்க்கெட், வீழ்ச்சி கண்டிருப்பதால், மகளின் காதலுக்கு, கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இதனால், மேற்படி காதல் ஜோடி, அடிக்கடி தனிமையில் சந்தித்து, மீண்டும், காதல் வளர்க்க துவங்கியுள்ளனர்.

ஆரம்ப காலகட்டத்தில், பல படங்களில் இணைந்து நடித்த சூப்பர் நடிகரையும், உலக நடிகரையும், மறுபடியும் இணைக்க, சிலர் திட்டமிட்டனர். அப்போது, 'நாங்கள் மீண்டும் இணைய வேண்டுமென்றால், அதற்கேற்ற கதை வேண்டும்; அதோடு, மிகப்பெரிய பட்ஜெட்டில், படம் செய்ய வேண்டும். அது, இப்போதைய சூழலில் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை...' என்று கூறி வந்தார், உலக நடிகர். இந்நிலையில், ஏற்கனவே, இந்த நடிகர்களை வைத்து, படங்கள் இயக்கியுள்ள மணியானவர், அடுத்தபடியாக, சூப்பர் - உலக நடிகர்களை வைத்து, படம் செய்ய தன்னிடம் கதையிருப்பதாக சொல்லியிருக்கிறார். கதை கேட்ட மேற்படி நடிகர்களும் திருப்தியடைந்து விட்டனர்; அதனால், அவர்கள் இணையும் படத்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கலாம்.

வம்பு மற்றும் நடன சூறாவளியுடன் காதல் கொண்டு, பின், அவர்கள் தனக்கு செட்டாக மாட்டார்கள் என்று காதலை முறித்த தாரா நடிகை, அதன்பின், இளவட்ட இயக்குனருடன், மூன்றாவது காதலை வளர்த்து வருகிறார். ஆனால், இந்த காதலுக்குள்ளும், பழைய காதலர்களால் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார் நடிகை

- இந்த நான்கு கருப்புப் பூனை தகவல்கள் சம்பந்தமாக இன்னொரு சுவாரஸ்ய தகவல், இடம் பெற்றுள்ள, 'கறுப்புப்பூனை' விஷயங்களும் சும்மா... காதில் பூச்சுற்றும் சமாசாரங்கள்.

ஏப்ரல் 1ம் தேதி வருதுங்களே... அதான்!

ஹி...ஹி...


சினி துளிகள்!

* கவுதம் மேனனின், துருவநட்சத்திரம் படத்தில், விக்ரம் நாயகனாக நடிக்க, வில்லனாக நடிக்கிறார், பார்த்திபன்.

* சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில், நான்கு வயது சிறுமிக்கு, தாயாக நடிக்கிறார், த்ரிஷா.

* விதார்த் நடித்தள்ள, ஒரு கிடாயின் கருணை படத்தில், 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ரவீனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

* சோனியா அகர்வால் நடிக்கும், அகல்யா என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என, ஐந்து மொழிகளில் தயாராகிறது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us