தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'3டி' தியேட்டர்களில் ரஜினியின், 2.0!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி - அக் ஷய்குமார் நடித்துள்ள படம், 2.0. ஜன., 25, 2018ல் திரைக்கு வரும் இப்படத்தின் பப்ளிசிட்டியை, உலக அளவில் நடக்கும் பலூன் திருவிழாக்களில் துவங்கியுள்ளனர். மேலும், இப்படம், '3டி' தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால், 300, '3டி' தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

— சினிமா பொன்னையா

மியா ஜார்ஜூக்கு 10 மில்லியன் ரசிகர்கள்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான, மோகன்லால், மம்மூட்டி மற்றும் பிருத்விராஜை விட, முன்னணி மலையாள நடிகையான, மியா ஜார்ஜை, முகநூலில், பத்து மில்லியன் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். இது, தனக்கு கிடைத்த பெருமையாக கூறுபவர், தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும், தினமும், முகநூலில் பகிர்ந்து வருகிறார். அத்துடன், ரசிகர்களின் கேள்விகளுக்கும், அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.

— எலீசா.

பெண் துறவியாக நடித்த கே.ஆர்.விஜயா!

நீண்ட இடைவேளைக்கு பின், மாய மோகினி என்ற படத்தில், பெண் துறவியாக நடித்துள்ளார், நடிகை, கே.ஆர்.விஜயா. நிஜத்தில் வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்த பெண்ணின் வேடம் என்றதும், அதைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து, அக்கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்,

கே.ஆர்.விஜயா.

— எலீசா

மகனை அறிமுகம் செய்யும் அம்பிகா!

கடந்த, 1980களில் தென்னிந்திய சினிமாவில், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், அம்பிகா. இதுவரை, 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது, 54 வயதாகும் அவர், 'கேரக்டர்' நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன் மகன் ராம் கேசவ்வை, சினிமாவில், கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்காக, தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம், கதை கேட்கும் படலத்தை துவங்கியிருக்கிறார்.

— எலீசா

கேரள நடிகர் சங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகையர் சங்கம்!

கேரள நடிகர் சங்கத்தில் நடந்த பொதுக்குழுவில், 'கேரளாவில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை...' என்று, கருத்து வெளியிட்டிருந்தனர். இதற்கு, நடிகை மஞ்சுவாரியர் தலைமையில் இயங்கி வரும், 'கலெக்டிவ் வுமன் இன் சினிமா' என்ற நடிகையர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'நடிக்க வாய்ப்பு தேடி வரும், புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்; ஆதிக்க மனம் படைத்தோரின், அதிகார துஷ்பிரயோகம் கேரளாவில் தான் அதிகம் உள்ளது...' என்று எதிர்குரல் கொடுத்துள்ளனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

டார்லிங் நடிகைக்கு, கோடம்பாக்கத்தில், பெரிய அளவில் கோலோச்ச வேண்டும் என்ற ஆசை மேலோங்கியதின் விளைவாக, இதுவரை, மூன்றாம் தட்டு நடிகர்களின் படங்களிலும் நடிக்க சம்மதித்தவர், தற்போது, அதற்கு தடா போட்டுள்ளார். அதேசமயம், தன்னை ஏறெடுத்தே பார்க்காத சில மேல்தட்டு நடிகர்களுக்கு, தொடர்ந்து கல்லெறிந்து வருகிறார். அவர்களுக்கு நெருக்கமான நபர்களை வைத்து, அவர்களை சந்திப்பதற்கான முயற்சிகளிலும், தீவிரம் காட்டி வருகிறார்.

தளபதி நடிகருடன் நடித்த படம், வாரிசு நடிகைக்கு, 'ஒர்க் - அவுட்'டாகவில்லை. அதனால், தற்போது, முன்னணி நடிகர்களின் படம் என்பதை விட, நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பி விட்டார். அத்துடன், மெரினா நடிகருடன், மீண்டும், 'டூயட்' பாட துரத்தி வருகிறார். ஆனால், நடிகரோ, 'தொடர்ச்சியாக ஒரே நடிகையுடன் நடித்தால், 'கிசுகிசு' பரவி விடும்...' என்று, நடிகைக்கு பிடி கொடுக்காமல், நழுவி வருகிறார்.

சினி துளிகள்!

* காலா படத்தின், ஹிந்தி பதிப்பில், தனக்கு தானே, 'டப்பிங்' பேசுகிறார், ரஜினி.

* துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய, கார்த்திக் நரேன், தற்போது, அரவிந்த்சாமி -சந்தீப் கிஷன் நடிப்பில், நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார்.

* 'கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும்...' என்று, ரொம்பவே ஆசைப்படுகிறார், நிக்கி கல்ராணி.

* தானா சேர்ந்த கூட்டம் படத்தில், மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.



அவ்ளோதான்!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us