தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.வி.எம்., தயாரிக்கும் 'முதல் இடம்!'

காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் என பல சுவை கலந்த கலவையில் உருவாகும் ஏ.வி.எம்.,மின், 'முதல் இடம்' படத்தில், மைனா விதார்த் நாயகனாக நடிக்க, கவிதா நாயர் என்ற கேரள நடிகை, நாயகியாக இறக்குமதியாகிறார். இப்படம், ஏ.வி.எம்., நிறுவனம் தயாரிக்கும் 175வது படம். — சினிமா பொன்னையா.

நீது சந்திரா நம்பிக்கை!

ஆதிபகவன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துவரும் நீது சந்திராவுக்கு, ஏற்கனவே நடித்த யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களை விட, இந்த படம் தமிழில் நிலையான இடத்தை பிடித்துத் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னையில் குடியேற வீடு பார்த்து வரும் நீது, அடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு குறி வைப்பதாக சொல்கிறார். ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்ற கதை! — எலீசா.

ஹனியை டென்ஷனாக்கிய திவ்யா ஸ்பந்தனாஸ்!

சிங்கம் புலி படத்தில், இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஜீவாவுக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனாஸ், ஹனிரோஸ் இருவரும் நடிக்கின்றனர். ஆனால், படத்தில் தான் மட்டுமே முதன்மை நாயகி என்று செய்தி பரப்பி வருகிறார் திவ்யா.

இதனால், டென்ஷனில் இருக்கும் ஹனிரோஸ், இதுபற்றி தன்னிடம் விசாரிக்கும் சினிமா நண்பர்களிடம், 'இரண்டு ஹீரோயின்களுக்குமே படத்தில் சம அளவு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமானால், இந்த உண்மையை ஜீவாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...' என்று திருப்பிவிட்டு வருகிறார். அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்! — எலீசா.

இந்திக்கு செல்லும் பிருத்விராஜ்!

ராவணன் படத்திற்கு பிறகு, தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், தாய்மொழியான மலையாளத்திலேயே முழுநேர நடிகராகி விட்டார் பிருத்விராஜ். தற்போது, மல்லுசிங் என்ற மலையாள படத்தில், சீக்கியர் வேடத்தில் நடித்து வரும் பிருத்விராஜ், இதே படம் அடுத்து இந்தியிலும் ரீ-மேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து, அந்தப் படத்திலும் நடித்து, இந்தியிலும் ஒரு இடம் பிடிக்க திட்டமிட்டுள்ளார். — சி.பொ.,


அமலா பாலின் பஞ்ச் டயலாக்!

'மைனா' படத்தின் வெற்றியால், ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்திருக்கிறார் அமலா பால். இதனால், அமலாவின் கால்ஷீட்டுக்காக சில முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் படங்கள் கூட காத்திருக்கின்றன. இதுபற்றி அமலா கூறுகையில், 'இந்த வெற்றிக்காக நான் வருடக் கணக்கில் காத்திருந்தேன். இப்போது, நான் வெற்றி பெற்றிருப்பதால், சினிமா எனக்காக காத்திருக்கிறது...' என்கிறார். பொறுத்தால் அரசு ஆள்வார்; பொங்கினால் காடு ஆள்வார்! — எலீசா.

காமெடி இலாகா!

மற்ற முன்னணி காமெடியன்களைப் போன்று, சந்தானமும் தனக்கென்று ஒரு காமெடி இலாகாவை உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுக்கு, அவர் நடிக்கும் அத்தனை படங்களுமே ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் ரோல்கள்தான். அதனால், அதற்குரிய ஸ்கிரிப்டை இயக்குனர்களே எழுதி விடுவதால், இலாகா

ஆசையை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். — சி.பொ.,

அட்வைஸ் அஞ்சலி!

அங்காடித் தெரு அஞ்சலியிடம், யாராவது கதைக்கு அவசியமே இல்லாமல் கவர்ச்சி, முத்தக்காட்சி என்று வாயைத் திறந்தால், கடித்து குதறி விடுவதைப் போல் பார்க்கிறார். 'கதை வலுவில்லாத பட்சத்தில், எந்த மாதிரியான காட்சி வைத்தாலும் படம் ஓடாது. அப்படி ஓடுவதாக இருந்தால், நூற்றுக்கு தொண்ணூறு படங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே' என்று, கமர்ஷியல் டைரக்டர்களுக்கு அட்வைஸ் செய்தும் அனுப்புகிறார். கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. — எலீசா.

பாரம்பரிய இசைக் கருவிகளை பயன்படுத்திய இசையமைப்பாளர்!

கல்கி என்ற திருநங்கை, நாயகியாக நடிக்கும் படம் நர்த்தகி. விஜய் பத்மா இயக்கும் இப்படத்தின் கதையைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கதையில் அதிக ஈடுபாடாகி விட்டார். அதன் காரணமாக, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய பாடலில், மேலைநாட்டு இசை ஆதிக்கத்தை தவிர்த்து, முழுக்க முழுக்க இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி, உயிரோட்டமான இசையை கொடுத்துள்ளார். — சி.பொ.,

எங்கெங்கும் காதல் படத்தை, எம்.ஜி.ஆர்., நடித்த, அன்பே வா பட பாணியில், ஜனரஞ்சகமாக இயக்கி வருவதாக சொல்கிறார் பிரபுதேவா. தென்றல் தழுவும்போது ஏற்படும் பரவசத்தை இப்படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்லும் பிரபுதேவா, இப்படத்தில் ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்தபடியாக, தன் அண்ணனான ராஜு சுந்தரத்துக்கும் முக்கிய வேடம் கொடுத்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக கூறிவந்த செல்வராகவன், அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார். ஆனால், அந்த படத்துக்காக ஆண்ட்ரியாவிடம் வாங்கிய கால்ஷீட்டை வீணடித்து விடக்கூடாது என்பதற்காக, இரண்டாம் உலகம் என்ற பெயரில், இன்னொரு படத்தைத் துவங்குகிறார். இதில், தனுஷ் - ஆண்ட்ரியா ஜோடி சேருகின்றனர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us