sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 24, 2017

Google News

PUBLISHED ON : செப் 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, 'கொம்பு வைத்த சிங்கமடா...' என்ற ஆல்பத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய ஜி.வி.பிரகாஷ், பின், ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமான போராட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது, விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு, கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இதேபோன்று, அதிரடியாக சில சேவைகளை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!

சுந்தர்.சி இயக்கிய, கலகலப்பு படத்தில் நடித்த ஓவியா, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், முதல் பாகத்தில், குத்துப்பாட்டு நடிகைகள் ரேஞ்சுக்கு வரிந்து கட்டி ஆட்டம் போட்டவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பின், தன் இமேஜ் உயர்ந்திருப்பதாக கருதி, 'கலகலப்பு படத்தின் முதல் பாகத்தை போன்று, இரண்டாவது பாகத்தில், கவர்ச்சிகரமாக நடித்து, 'இமேஜை' கெடுத்துக்கொள்ள மாட்டேன்...' என்கிறார். உள்ளதைக் கொண்டு ஊராள வேண்டும்!

எலீசா

நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்!

திருமணம் முடிந்து, 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் நடிக்க துவங்கியுள்ள மலையாள நடிகை, மஞ்சு வாரியர், ஹவ் ஓல்டு ஆர் யு என்ற மலையாள படத்திற்கு பின், பிசியாகி விட்டார். இந்நிலையில், தற்போது, ஈரம் மற்றும் குற்றம் - 23 உட்பட சில படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும், திரில்லர் படத்தின் மூலம், தமிழுக்கு வருகிறார் மஞ்சுவாரியர். ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல சேரும்!

எலீசா

தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், பகத் பாசில். தற்போது, இவர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள, வேலைக்காரன் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சில படங்களுக்கு அவரை வில்லனாக நடிக்க கேட்ட போது, 'இனி, கதாநாயகனாக தான் நடிப்பேன்; அதற்கான கதையும் தயாராகி விட்டது...' என்று சொல்லி, வில்லன் வேடங்களை மறுத்துள்ளார்.

சி.பொ.,

கதையின் நாயகியான தன்ஷிகா!

கபாலி படத்தில், ரஜினியின் மகளாக நடித்த, தன்ஷிகா, தொடர்ந்து, எங்க அம்மா ராணி மற்றும் உரு என, சில படங்களில் நாயகியாக நடித்தவர், தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும், குழலி என்ற படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம், தெலுங்கில், வாலுஜடா என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், இப்படத்தின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

— எலீசா

எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!

இசை படத்திற்கு பின், படம் இயக்குவதை ஓரங்கட்டி, முழு நேர நடிகராகி விட்ட எஸ்.ஜே.சூர்யா, தற்போது, விஜய்யின், மெர்சல் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழில் வெளியான, போகன் படத்தின் தெலுங்கு ரீ - மேக்கிலும், வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

ஜெயமான நடிகருடன், காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்த, அங்காடித் தெரு நடிகைக்கு காதல் கசந்து விட்டது. அதனால், நடிகரை விட்டு விலகி விட்ட நடிகை, மறுபடியும், நடிப்பில் முழு வீச்சில் இறங்கியிருக்கிறார். அத்துடன், தன் அபிமான இயக்குனர்கள் சிலரை சந்தித்து, மறுபடியும், தான் காமக்கொடூர அவதாரமெடுக்க தயாராகி விட்டதாக சொல்லி, கமர்ஷியல் கதைகளில் நடிக்க தயாராகி வருகிறார்.

மைனாவிற்கு பின் பிசியான இசையமைப்பாளருக்கும், கதாநாயகன் ஆசை தலைதுாக்கியது. அதற்காக, தன் உடல் எடையை குறைத்து, களமிறங்க தயாரானார். ஆனால், ஏற்கனவே நடிகரான சில இசையமைப்பாளர்களின் மார்க்கெட், தற்போது டல்லடிப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்து, 'ஒருவேளை தானும் நடிகராகி தோற்று விட்டால், இருக்கிற மரியாதையும் போய் விடும்...' என்று சுதாரித்தவர், நடிப்பு ஆசைக்கு முழுக்குப் போட்டு விட்டார்.

சினி துளிகள்!

* 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' பாடல் ஹிட்டடித்தை தொடர்ந்து, தான் இசையமைக்கும் படங்களில், அவ்வப்போது பாடி வருகிறார், டி.இமான்.

* பிரபாஸ் நாயகனாக நடிக்கும், சாஹோ படத்தில், நெகடிவ் ரோலில் நடிக்கிறார், இந்தி நடிகை, மந்திரா பேடி.

* தெலுங்கில் படங்கள் குறைந்து விட்டதால், மறுபடியும், தமிழில் புதிய படங்களில் பிசியாகிறார், நடிகை, அஞ்சலி.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us