sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 26, 2017

Google News

PUBLISHED ON : நவ 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோபோக்களின் காதல் கதையில், 2.0!

சிவாஜி மற்றும் எந்திரன் படங்களை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி மூன்றாவது முறையாக நடித்துள்ள படம், 2.0. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அனிமேஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர், ஷங்கர் கூறுகையில், 'எந்திரன் படத்தில், பெண்ணின் மீது ஒரு மிஷினுக்கு ஏற்பட்ட காதலை படமாக்கினேன்; ஆனால், 2.0 படத்தில், மிஷினுக்கும், மிஷினுக்கும் இடையிலான காதலை படமாக்கியுள்ளேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!

இந்தி நடிகை பிபாஷா பாசு, தன் காதலர் கரண் சிங்கை காதல் மணம் புரிந்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து, ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருப்பது, பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மீடியாக்களை சந்தித்த பிபாஷா பாசு, 'நான், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆணுறை விளம்பரத்தில் நடிக்கவில்லை. இந்தியாவில் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் நடித்தேன்...' என்று கூறியுள்ளார். வக்குச் சிக்காய் மாட்டிக்கொள்வது!

எலீசா

மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா!

பிரேமம் படத்தில் நடித்து, பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், கொடி படத்தில் தனுஷுடன் நடித்தார். அதன்பின், படங்கள் ஏதும் அவருக்கு இல்லை. இருப்பினும், தொடர்ந்து முயற்சி எடுத்தவருக்கு, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சான்ஸ் கிடைத்துள்ளது. இப்படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கும் அனுபமா, தொடர்ந்து தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, பட வாய்ப்புகளுக்காக, மேலும் சில இயக்குனர்களை சந்தித்து, பட வேட்டை நடத்தி வருகிறார். அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்!

எலீசா

பிரபுதேவாவின் மோனோ ஆக்டிங்!

இந்தி சினிமாவில் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்த பிரபுதேவாவுக்கு, சில படங்கள் அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால், மீண்டும் நடிகராகி விட்டார். அவ்வகையில், தேவி படத்தில், தன் செகண்ட் இன்னிங்சை துவங்கிய அவர், தற்போது, யங் மங் சங், மெர்குரி மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், மெர்குரி படத்தில், படம் முழுக்க டயலாக் பேசாமல், கமலின், பேசும் படம் பாணியில் மோனோ ஆக்டிங் செய்து நடித்துள்ளவர், இதுபோன்று மாறுபட்ட கேரக்டரில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாக கூறுகிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

விஸ்வரூபம் பட நாயகியை, உலக நாயகனுக்கு பின் யாருமே ஆதரிக்கவில்லை. காரணம், 'நான் உச்ச நடிகருடனேயே நடித்து விட்டேன்...' என்று கூறி, தன்னை தேடி வந்த, 'பட்ஜெட்' படாதிபதிகளிடம் எக்கச்சக்கமாக, 'பில்டப்' கொடுத்து பேசியதால், அம்மணியை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, இப்போது இறங்கி சென்று வாய்ப்பு கேட்பதோடு, 'வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்...' என்று கூறி வருகிறார்.

சமீபகாலமாக, தாய்க்குலத்தின் துணை இல்லாமல், அவுட்டோர்களுக்கு தனித்து சென்று வரும் மூனுஷா நடிகை, தன்னைச் சுற்றி போட்டு வைத்திருந்த வேலியை அப்புறப்படுத்தி, பார்ட்டிகளுக்கு விஜயம் செய்யத் துவங்கியுள்ளார். ஆனபோதும், மப்பு அயிட்டங்களில் இறங்க தயங்கி நிற்கிறார். ஆனால், அம்மணியின் கோலிவுட் நண்பர்களோ, அவருக்கு ஊற்றிக்கொடுத்து போதை பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சினி துளிகள்!

* மோகினி படத்தில், இரு வேடங்களில் நடித்திருக்கிறார், த்ரிஷா.

* விஸ்வரூபம் பட நாயகி பூஜாகுமார், தன் உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாகியுள்ளார்.

* 'வாட்ஸ் - ஆப்'ன்ற படத்தில், எம்.ஜி.ஆரின் பேரன், வி.ராமச்சந்திரன் நாயகனாக நடிக்கிறார். இவர், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின், தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us