தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!

சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், ரஜினியின், காலா படத்தை அடுத்து, மலையாளத்தில் வெளியான, கட்டப்பனையிலே ரித்திக் ரோஷன் என்ற படத்தை, தமிழில் ரீ - மேக் செய்கிறார். விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பான, 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா, நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு, அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்று பெயர் வைத்துள்ளார்.

சினிமா பொன்னையா

அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!

அருவி படத்தில் நடித்தவர், அதிதி பாலன். அப்படத்தில் சிறப்பாக நடித்து, ரஜினி மற்றும் இயக்குனர் பாலா உட்பட பலரிடம் பாராட்டும் பெற்றார். இந்நிலையில், அருவி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக, நார்வே திரைப்பட விழாவில், அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுத்து கவுரவித்துள்ளனர். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்துள்ள அதிதி பாலன், தொடர்ந்து மாறுபட்ட கதைகளில் நடிக்க விரும்புவதாக சொல்லி, தீவிரமாக கதை கேட்டு வருகிறார். கரும்பு உள்ளபோதே ஆலை ஆட்டிக்கொள்!

எலீசா

உடலை வருத்த தயாராகும் சுனைனா!

சில ஆண்டுகளுக்கு பின், சமுத்திரகனியுடன், தொண்டன் படத்தில் நடித்த சுனைனா, இப்போது, விஜய் ஆண்டனியுடன், காளி படத்தில் நடிக்கிறார். ஆனால், இப்படத்தில் நாயகியாக இல்லாமல், மனசை தொடும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அதனால், 'இதுவரை கிளாமரால் ரசிகர்களை, 'அட்டாக்' செய்த நான், இனிமேல் நடிப்பால், 'அட்டாக்' செய்யப் போகிறேன்; உடலை வருத்தி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என, மாற்று சிந்தனை கொண்ட சில இயக்குனர்களுக்கு துாது விட்டுள்ளார். பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்!

எலீசா

விஜய்யின் சாதனை புத்தகம்!

நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, 'விஜய் ஜெயித்த கதை' என்றொரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சினிமாவில் விஜய் செய்த சாதனைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில்,பிரபலங்களின் சுயசரிதை புத்தகங்களுடன், விஜய்யின் புத்தகமும் இடம்பெற்று வருகிறது.

சி.பொ.

அஜித் படத்தில், குத்துப்பாட்டு!

அஜித்தின், விசுவாசம் படத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், தன் படங்களின் இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வரும் அஜித், விசுவாசம் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோரையும் பரிசீலனை செய்து வந்தவர், இப்போது, டி.இமானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திலும், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா...' பாடலைப் போன்று, ஒரு அதிரடியான குத்துப்பாட்டு இடம்பெறுகிறது.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

மெரினா நடிகருடன் சில படங்களில் நடித்துள்ள, ஸ்ரீ நடிகைக்கு, தற்போது, கைவசம் படங்கள் இல்லை. அத்துடன், 'சமயம் வரும்போது கை கொடுக்கிறேன்...' என்று நடிகைக்கு உத்தரவாதம் கொடுத்த மெரினா நடிகரும், சமீபகாலமாக முன்னணி நடிகையருடன் டூயட் பாடி வருவதால், மேற்படி நடிகையை கண்டுகொள்வதே இல்லை. இதனால், நடிகரை நம்பி மாதக்கணக்கில் கோலிவுட்டில் முகாமிட்டு வெறுத்துப்போன நடிகை, இப்போது, தன் தாய்மொழியான டோலிவுட்டுக்கு முகாமை மாற்றியுள்ளார்.

பையா நடிகையை அவரது அபிமான கதாநாயகர்களே கழற்றி விட்டு வருவதால், கடுப்பில் இருக்கிறார். அத்துடன், பழைய ஞாபகத்தில், சில கதாநாயகர்கள், வீக் எண்ட் பார்ட்டிகளுக்கு அழைத்தால், 'உங்களுடனான நட்பு எல்லாம் முடிந்து விட்டது...' என்று சொல்லி, அவர்களின் அழைப்பை, புறக்கணித்து விடுகிறார். அதேசமயம், சினிமாவில் கோலோச்ச வேண்டுமென்றால், பிரபலங்களின் அனுக்கிரகம் அவசியம் தேவை என்பதால், தற்போது, கதாநாயகியரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் ஆதரவை நாடியிருக்கிறார்.

சினி துளிகள்!

* ஒத்தைக்கு ஒத்தை படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார், ஸ்ரீதிவ்யா.

* ராட்சசன் படத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், அமலாபால்.

* விஜயசேதுபதிக்கு ஜோடியாக, கண்ணே கலைமானே படத்தில் நடிக்கிறார், தமன்னா.

* தனுஷ் இயக்கிய, பவர் பாண்டி படம், கன்னடத்தில் ரீ-மேக் ஆகிறது; அப்படத்தில், தமிழில் ரேவதி நடித்த வேடத்தில் நடிக்கிறார், சுகாசினி மணிரத்னம்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us