PUBLISHED ON : மே 27, 2018

கம்யூனிசம் பேசும் விஜயசேதுபதி!
வித்தியாசமான கதைகளை முன்னிறுத்தி நடித்து வந்த விஜயசேதுபதி, தற்போது, சமூக நோக்கமுள்ள கதைகளிலும் ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக, காதல் மற்றும் காமெடி கதைகளிலும் சமூக பார்வை வேண்டும் என்று இயக்குனர்களிடம், தன் கருத்தை வெளிப்படுத்துபவர், புறம்போக்கு படத்தை அடுத்து, மீண்டும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் சமூக நோக்கமுள்ள, கம்யூனிச கதையில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கேரக்டரை மாற்றும் தமன்னா!
படப்பிடிப்பு தளங்களில் எந்நேரமும் ஜாலியாக இருக்கும் தமன்னா, சமீபகாலமாக அமைதியாக காணப்படுகிறார். காரணம் கேட்டால், 'சில இயக்குனர்களிடம் மெச்சூரிட்டியான வேடம் கேட்கிறேன்; ஆனால், அவர்களோ, எனக்கு ஜாலியான வேடங்கள்தான் செட்டாகும் என்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில் நான் ஜாலியாக விளையாடுவதைப் பார்த்து, அப்படி முடிவு செய்து விட்டனர். அதனால்தான் சீரியசான பெண்ணாக என்னை வெளிப்படுத்த அமைதியாக இருக்கிறேன்...' என்கிறார். கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது!
— எலீசா
வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக பேசிய காஜல் அகர்வால்!
வாரிசு நடிகர்கள் தான் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியும் என்று நிலவி வரும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், காஜல் அகர்வால். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், 'வாரிசு நடிகர் மற்றும் நடிகையருக்குத் தான் சினிமாவில் எளிதில், 'என்ட்ரி' கிடைக்கும் என்றாலும், திறமை இருந்தால் மட்டுமே நீடிக்க முடியும். விஜய், சூர்யா மற்றும் தனுஷ் என, பல வாரிசு நடிகர்களும் தங்களது தனித்திறமையால் மட்டுமே ஜெயித்தவர்கள்...' என்கிறார். காரணம் இன்றி காரியம் இல்லை!
— எலீசா
சமந்தா வேண்டுகோள்!
திருமணத்திற்கு முன் தன்னை ரசிகர்கள் டுவிட்டரில் எவ்வளவு கிண்டல் செய்தாலும், அதற்கு தமாஷாக பதில் கொடுத்து வந்தார் சமந்தா. ஆனால், திருமணத்திற்கு பின், ரசிகர்கள் தன்னை கிண்டல் செய்வதை அவர் விரும்பவில்லை. அதனால், தன் முந்தைய கிளாமர் போட்டோக்களை, சில குறும்புக்கார ரசிகர்கள் மீண்டும் பதிவிடுவதை விரும்பாதவர், 'திருமணத்திற்கு பின், என் சினிமா பாதை மாறியிருக்கிறது; அதனால், பழைய போட்டோக்களை பதிவிடுவது மற்றும் கிண்டல் செய்வதை தொடர வேண்டாம்...' என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். கூத்துக்கு புகுந்தவன் கொட்டுக்கு அஞ்சித் தீருமா?
— எலீசா
ரஜினி ரசிகையாகும் ஜோதிகா!
தற்போது, செக்கச்சிவந்த வானம் மற்றும் காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்தபடியாக, மோகன்லால் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்கான, ரஜினி செல்வி என்ற படத்தில், ரஜினி ரசிகையாக நடிக்கிறார். மலையாள படத்தில், மோகன்லாலின் ரசிகையாக நடித்திருந்த மஞ்சுவாரியாரின் கதாபாத்திரத்தில், ரஜினி ரசிகையாக நடிக்கிறார், ஜோதிகா. அதிலும் இது புதுமை, இதிலும் அது புதுமை!
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
மெட்ராஸ் பட இயக்குனர், தற்போது, மெகா இயக்குனராகி விட்டதால், தொடர்ந்து அவரிடம், 'சான்ஸ்' கேட்டு வந்தார். மெட்ராஸ் பட நடிகை. ஆனால், அவரோ, நடிகையை அலைய வைத்து, சுற்றலில் விட்டார். அதனால், 'பெரிய ஆள் ஆனதும், பழசையும், பழகினவர்களையும் மறந்து விட்டார்...' என்று அவரை வசை பாடி, வேறு சில வளர்ந்து வரும் இயக்குனர்களிடம் தஞ்சமடைந்துள்ளார் நடிகை.
சினி துளிகள்!
* நர்மதா படத்திற்காக, 8 கிலோ எடை குறைந்துள்ளார் அட்டகத்தி, நந்திதா.
* விஜய் நடித்த, தெறி படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில், நாயகியாக நடிக்கிறார், கேத்ரின் தெரசா.
அவ்ளோதான்!
