PUBLISHED ON : செப் 30, 2018

'மல்டி ஹீரோ' படம் இயக்கும் தனுஷ்!
ராஜ்கிரண் - ரேவதி நடிப்பில், பவர் பாண்டி படத்தை இயக்கிய, தனுஷ், தன் இரண்டாவது படத்தை இயக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். மாமனார், ரஜினி நடித்து வெளியான, காலா படத்தைப் போலவே, இதுவும் நெல்லை தமிழ் பேசும் கதை கரு கொண்டது. இப்படத்தில், சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
சமந்தாவின் புதிய அவதாரம்!
சினிமாவில் நடிக்க வந்து எட்டு ஆண்டுகளான சமந்தாவுக்கு, தமிழ், தெலுங்கில் பாடகி சின்மயிதான், 'டப்பிங்' கொடுத்து வந்தார். தற்போது, தனக்குத்தானே, 'டப்பிங்' பேசத் துவங்கியுள்ளார், சமந்தா. 'பிரதியுஷா' என்ற சேவை அமைப்பு மூலம் சமூக சேவை செய்து வரும் அவர், அடுத்தபடியாக, 'தன் திரைப்பட நிறுவனம் மூலம், சமூக நோக்கமுள்ள படங்களை தயாரித்து, தேசிய அளவிலான விருதுகளை அள்ள வேண்டும் என்பது தான், எதிர்கால திட்டம்...' என்கிறார். ஆசைக்கு இல்லை, அளவென்ற எல்லை!
— எலீசா
அதிர்ச்சி கொடுத்த, ஸ்ரேயா!
திருமணத்திற்கு பின், கேரக்டர் நடிகையாக களமிறங்கியுள்ள ஸ்ரேயா, தன் இணைய பக்கத்தில், புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து, 'எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. ஒரு தெலுங்கு படத்திற்காக இப்படியொரு காட்சியில் நடித்துள்ளேன்... என்று விளக்கம் கொடுத்துள்ள ஸ்ரேயா, என்னைப் பொறுத்தவரை கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால், சரக்கு அடித்தபடி நடிப்பதில் கூட தவறில்லை...' என்றும் கூறியுள்ளார். இன்னமும் கெடுகிறேன், பந்தயம் என்ன என்றது போல்!
— எலீசா
அம்மா நடிகையான, தேவயானி!
ஏற்கனவே அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வந்த தேவயானிக்கு, அதன்பின், முதிர்ச்சியான வேடங்களை தவிர்த்தார். ஆனால், அவரது சம காலத்து நடிகையான சிம்ரன், மீண்டும் களமிறங்கி, வில்லியாக வரிந்து கட்டி வருவதை அடுத்து, தேவயானியும் அடுத்த ரவுண்டுக்கு, கோதாவில் குதித்திருக்கிறார்.
நடிகர் தினேஷ் நடித்துள்ள, களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார். இதையடுத்து, கதையில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால், இதைவிட முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயார், என்று கோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஊதின சங்கு ஊதினால், விடிகிறபோது விடியட்டும்!
— எலீசா
ஊழலுக்கு எதிராக மீண்டும், இந்தியன் தாத்தா!
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த, இந்தியன் படம், ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது. அதே போல், விரைவில் தயாராகயிருக்கும், இந்தியன் - 2 படமும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிரான கதையில் தான் உருவாகிறது. முதல் பாகத்தில் கமல் நடித்த, தாத்தா கேரக்டரை, இன்னும் வயதானவராக காண்பிக்க போவதாக கூறுகிறார், ஷங்கர். இந்த படத்திலும், வர்மக்கலை மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கிறாராம், இந்தியன் தாத்தா. ஆனபோதும், இந்த முறை, அவர் தண்டனை கொடுப்பது, 'டெக்னிக்கல்' ரீதியாக மாறுபட்ட பாணியில் இடம்பெறும் என்றும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* வாசனை காமெடியன் நாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரமுடியாத நிலையில் சிக்கியுள்ளன. இதனால், 'காமெடியனாக நடித்த போது, வாரத்திற்கு ஒரு படம் வெளியானது. இப்போது, ஆண்டுக்கு ஒரு படம் வெளியாவதே சிரமமாகி விட்டது. இப்படியே போனால், ரசிகர்கள் என்னை மறந்து விடுவர் போலிருக்கே...' என்று புலம்பித் திரிகிறார், நடிகர்.
'ஏம்பா சந்தானம், 'குபீர்' குப்பத்துல கொசு மருந்து அடிக்க சொன்னேனே... இன்னுமா கிளம்பல...' என்றார், சுகாதார ஆய்வாளர்.
* ஜெயமான நடிகருடன் இணைந்துள்ள, 'இனிப்பு கடை' நடிகை, இந்த படத்தில் ஒரு மழை சீனில் நடிக்கிறார். அதற்காக, கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, துளியும் தயங்காமல், 'ஓகே' சொன்ன நடிகை, மேல்தட்டு நடிகர்களின் படங்களில், அயிட்டம் நடிகைகள் ரேஞ்சுக்கு, 'குத்து' நடிகையாகவும் நடிக்க, தான் தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
'காஜல் குட்டி, சீக்கிரம் வாம்மா. கசல் பாட்டு சொல்லித் தர, 'டீச்சர்' வந்துட்டாங்க. முதல்ல, அகர்வால் கடையில வாங்குன, 'ஸ்வீட்'டை கொடுத்து, ஆசிர்வாதம் வாங்கிக்க...' என்றார், அம்மா.
சினி துளிகள்!
* தினமும் பிரியாணி சாப்பிட்டாலும், என் உடம்பு வெயிட் போடாது. அதனால், 'நான், 'டயட்ல' இருந்ததே இல்லை...' என்கிறார், காஜல் அகர்வால்.
* நித்யா மேனன் மட்டுமே நடிக்கும், பிராணா என்ற படம், 24 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அவ்ளோதான்!
