தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரீ - மேக்' படத்தில், சமந்தா!

மிஸ் கிரானி என்ற பெயரில் வெளியான, கொரியன் மொழி படமொன்று, தெலுங்கில், 'ரீ - மேக்' ஆகிறது. இந்த படம், 70 வயது பாட்டியை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. அதாவது, 'ஸ்டுடியோ' ஒன்றில், 70 வயது பாட்டி, புகைப்படம் எடுத்ததும், 20 வயது பெண்ணின் உடற்கட்டுக்கு மாறி விடுவாராம். இதில், 70 வயது பாட்டியாக, பழம் பெரும் நடிகையும், 20 வயது பெண்ணாக, சமந்தாவும் நடிக்கப் போகின்றனர். ஒன்றை பெற்றாலும் கடுகப் பெறு!

— சினிமா பொன்னையா

விஜய் ஆண்டனிக்கு, 'ரொமான்ஸ்' பயிற்சி!

சீரியசான கதைகளில் நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு, 'ரொமான்ஸ்' நடிப்பு சரியாக வரவில்லை. அதனால், காதல் காட்சிகளில் அவருக்கும், கதாநாயகியருக்கும் இடையே சரியான, 'கெமிஸ்ட்ரி ஒர்க் - அவுட்' ஆகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், நடிப்பு பயிற்சி ஆசிரியரிடம், 'ரொமான்ஸ்' பயிற்சி எடுக்கப் போவதாக சொல்கிறார், விஜய் ஆண்டனி. 'இப்போது கதாநாயகியரை விட்டு தள்ளி நிற்கும் நான், பயிற்சிக்குப் பின், 'ரொமான்ஸ்' நடிப்பை விமர்சிப்பவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு, அதிரடியாக, வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.

சி.பொ.,

'டூயட்' பாட மறுக்கும் யோகிபாபு!

'எனக்கு ஹீரோவாகும் எண்ணமில்லை' என்று கூறி வந்த யோகிபாபு, தற்போது, கூர்கா மற்றும் தர்மபிரபு ஆகிய படங்களில், கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படங்களில் அவருக்கு ஜோடி இல்லை. இருப்பினும், 'டூயட்' பாட வைத்து விடவேண்டும் என்று சில இயக்குனர்கள், அவரை சுற்றி சுற்றி வருகின்றனர். யோகிபாபுவோ, 'நானெல்லாம், 'டூயட்' பாடினால், என் முகத்தை யார் பார்ப்பர்...' என்று சொல்லி, அவர்களுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.

- சி.பொ.,

அரசியல் ஆர்வத்தில் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமியை, அவரது தந்தை சரத்குமார், தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியில் இணையும்படி கூறியும், அவர் மறுத்து விட்டதாக சொல்கிறார். அதோடு, 'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின், அரசியலுக்கு வருவேன். ஆனால், என் தந்தையின் கட்சியிலா அல்லது வேறு கட்சியில் இணைவேனா என்பது, அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. அப்படி அரசியலுக்கு வந்தால், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்...' என்கிறார். எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும், தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது.

சி.பொ.,

கறுப்பு பூனை!

* கூத்து படத்தில் அறிமுகமான அந்த நடிகை, படவாய்ப்புகளை பெருக்கும் முயற்சியாக, மேல்தட்டு கதாநாயகர்களை, கடைக்கண் பார்வையால் வீழ்த்தி வருகிறார். அதோடு, சிபாரிசு செய்தால், 'மிட்நைட் பார்ட்டி' கொண்டாட்டத்திற்கும், 'டபுள் ஓகே' சொல்லி, மெகா படங்களை உஷார் பண்ணி வருகிறார், நடிகை. இதனால், கோலிவுட்டில் அம்மணிக்கு, மார்க்கெட் அதிகரித்துள்ளது.

'ஏம்மா... காலேஜுக்கு இப்படியா நிவேதா பெத்துராஜ் போல், டிரஸ் போட்டுட்டு போவ... அப்புறம், 'ஈவ் - டீஸ்' செய்றாங்கன்னு போலீசுல புகார் கொடுத்துட்டு... வேண்டாத வேலை... போய், 'டீசன்டா' டிரஸ் பண்ணிட்டு போம்மா...' என்றார், தாத்தா.

* வாரிசு நடிகரின் படத்தில், 'பிகினி' நடிகையாக உருவெடுத்த, அந்த மூன்றெழுத்து நடிகைக்கு, அதன் பின், கொஞ்ச நஞ்சமிருந்த மரியாதையும் போய்விட்டது. குத்துப்பாட்டு நடிகை அளவிற்கு, அவரை தோலுரிக்கும் கதைகளுடன் முற்றுகையிட்டு வருகின்றனர் இயக்குனர்கள். அதோடு, இப்போது அம்மணி நடித்து வரும் படங்களிலும், ஆபாச நடிகையாக்க காய் நகர்த்துகின்றனர். இதனால், 'ஆசைக்கு ஒரு படத்தில், 'பிகினி' உடையணிந்து நடித்த என்னை, இப்போது முழு நேர ஆபாச நடிகையாக்கி விடுவர் போலிருக்கே...' என்று அதிர்ச்சியில் காணப்படுகிறார், நடிகை.

'அம்மா... ஸ்கூல்ல, டூருக்கு அழைச்சிட்டு போறாங்க... போகட்டுமா...' கேட்டாள், சந்தியா.

'ரெஜினா டீச்சர் வர்றாங்கள்ல... அப்படின்னா போ...' என்றார், அம்மா.

சினி துளிகள்!

* திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து, பிரபுதேவாவுடன், பொன்மாணிக்க வேல் என்ற படத்தில் நடித்து வருகிறார், நிவேதா பெத்துராஜ்.

* பார்ட்டி படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார், ரெஜினா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us