sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 09, 2018

Google News

PUBLISHED ON : டிச 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

19ம் நுாற்றாண்டு கதையை படமாக்கும், பா.ரஞ்சித்!

ரஜினி நடித்த, கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர், பா.ரஞ்சித். அடுத்தபடியாக, பிர்சா முண்டா என்ற பெயரில், இந்தி படத்தை இயக்குகிறார். 19ம் நுாற்றாண்டில், பழங்குடியின மக்களுக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, முதன் முதலாக ஆயுதம் ஏந்தி போராடியவர், பிர்சா முண்டா. 25 முறை, சிறைக்கு சென்ற, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, இந்த வீரரின் வாழ்க்கை வரலாறு கதையை தான், இந்தியில் படமாக்குகிறார், ரஞ்சித்.

சினிமா பொன்னையா

நடிகை ரோஜாவின் நடமாடும் உணவகம்!

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின், மகளிர் அணி தலைவியாக இருப்பவர், நடிகை ரோஜா. மேலும், ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின், எம்.எல்.ஏ., ஆகவும் உள்ளார். இவர், தன் பிறந்த நாளின்போது, அப்பகுதியில், நான்கு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும், நடமாடும் உணவகத்தை திறந்து வைத்தார். அதற்கு, பொது மக்கள் மத்தியில், அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இப்போது, அந்த தொகுதியில் மக்கள் அதிகமாக கூடும் பல பகுதிகளில், நடமாடும் உணவகங்களை திறந்துள்ளார். ரோஜாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

எலீசா

இலியானா விடும் சவால்!

கேடி மற்றும் நண்பன் படங்களில் நடித்த இலியானா, அதையடுத்து, 'பாலிவுட்' சினிமாவில், 'பிசி'யானார். ஆனால், அங்கு அவரது, 'மார்க்கெட்' இறங்குமுகத்தில் இருப்பதால், மீண்டும், 'கோலிவுட்' பக்கம் வந்திருக்கிறார். மெகா பட இயக்குனர்களை சந்தித்து, படவேட்டை நடத்தும் அவர், 'பாலிவுட் படங்களில் நடித்தது போன்று, 'பிகினி மற்றும் டூ - பீஸ்' என்று, கலக்க தயார்; தென் மாநில சினிமாவில், விட்ட இடத்தை மறுபடியும் பிடித்தே தீருவேன்...' என்று சவால் விடுகிறார். இலியானாவின் இந்த பேச்சு, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்வரிசையில் இருக்கும் நடிகையருக்கு, 'கிலி'யை ஏற்படுத்தியிருக்கிறது.எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

எலீசா

கீர்த்தி சுரேஷை அதிர வைத்த, இயக்குனர்கள்!

மகாநதி படத்திற்கு பின், விஜய், விக்ரம் மற்றும் விஷால் என்று, மெகா நடிகர்களின் படங்களில் நடித்தார், கீர்த்தி சுரேஷ். இந்த படங்களில், அவருக்கும் முக்கியத்துவம் இருப்பது போன்று தான் படமாக்கினர். ஆனால், படம் வெளியாகும்போது, அவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லையாம். இதனால், அதிர்ந்து போயிருக்கும் கீர்த்தி சுரேஷ், 'இனிமேல், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதோடு, படமாக்கும் காட்சிகளை கத்தரித்து, எக்காரணத்தை முன்னிட்டும் என்னை, 'டம்மி' பண்ணக்கூடாது...' என்று உத்தரவு போட்டே, நடிக்க முடிவு செய்திருக்கிறார்.எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும், சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!

எலீசா

தேர்தல் கமிஷன் துாதரான, அபிநயா!

நாடோடிகள், ஈசன், வீரம் மற்றும் தனி ஒருவன் உட்பட, பல படங்களில் நடித்தவர், அபிநயா. காது, பேச்சுத் திறன் குறைபாடுள்ள, மாற்றுத்திறனாளியான இவர், தெலுங்கானா மாநில தேர்தல் கமிஷன் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியத்தை புரிய வைக்கும் பொறுப்பை, அபிநயாவிடம் கொடுத்திருக்கிறது, தேர்தல் கமிஷன். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை தேடிச் சென்று, ஓட்டளிப்பதன் அவசியத்தை புரிய வைக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

* வில்லியாக கலக்கி வரும் அந்த வாரிசு நடிகை, படப்பிடிப்பு தளங்களில் எந்நேரமும் ஓயாத அரட்டை தான். காதுகளில் ரத்தம் வழியும் அளவுக்கு, வாயை திறந்தால் மூடாமல், எப்.எம்., ரேடியோ போன்று வாயாடி வருகிறார். இதனால், தங்கள் அருகில் அவர் வந்து அமர்ந்தாலே, அப்படங்களின் நடிகர் - நடிகையர், காதுகளை பொத்தி, ஓட்டம் பிடிக்கின்றனர்.

'ஏலே வரலட்சுமி... இங்கன வாலே... இம்புட்டு ஜோலி குவிஞ்சுருக்கு... அத வுட்டுட்டு வம்பு பேசிட்டு இருக்காவள...' என்றாள், அம்மா.

* இரண்டாம் இடத்துக்கு இறங்கி விட்டபோதும், தொடர்ந்து மேல்தட்டு நடிகர்களுடன், 'டூயட்' பாட தீவிரம் காட்டுகிறார், அகர்வால் நடிகை. அதோடு, முன்பெல்லாம் நள்ளிரவு விழாவுக்கு அழைத்தால், 'நான் ஆச்சாரமான பொண்ணு...' என்று சொல்லி, 'எஸ்கேப்' ஆகி வந்த நடிகை, இப்போது, முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் வருகின்றனர் என்றால், அழையா விருந்தாளியாகவே ஆஜராகி, 'பார்ட்டி'யில் ஐக்கியமாகி விடுகிறாராம்.

'நம்ம காஜல் மாதிரி காரியத்துல கண்ணாயிருக்கணும்டி. இல்லாட்டி, நம்மள ஒதுக்கி தள்ளிட்டு போயிடுவாங்க...' என்றாள், தோழி.

சினி துளிகள்!

* பாரிஸ் பாரிஸ் படத்தில், பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், காஜல் அகர்வால்.

* சண்டக்கோழி-2 மற்றும் சர்கார் படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி, தனுஷின், மாரி-2 படத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்துள்ளார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us