தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரம் சுமந்தே பயணிப்பவர்கள்!

எங்கெங்கு சென்றாலும்

எல்லாருமே எதையாவது

சுமந்தபடி தான் போகின்றனர்...

பிரமுகர்களை பார்க்க போகின்றனர்

மரியாதை நிமித்தம்

மாலைகளுடனும், சால்வைகளுடனும்...

கோவில்களுக்கு செல்கின்றனர்

அனேக வேண்டுதல்களுடனும்

கொஞ்சம் சில்லரைகளுடனும்...

சிறைக் கூடங்களுக்கு செல்கின்றனர்

சிற்றுண்டிகளுடனும்

சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்...

மருத்துவமனைக்கு போகின்றனர்

ஆறுதல் மொழிகளுடனும்

'ஹார்லிக்ஸ்' மற்றும் பழங்களுடனும்...

இழவு வீடுகளுக்கு போகின்றனர்

வலி மிகு ரணங்களுடனும்

வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்...

உறவுகளை தேடி போகின்றனர்

சண்டைக்கான ஆயத்தங்களுடனும்

குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்...

நண்பர்களை நாடிப் போகின்றனர்

பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்

பொசுங்கிய கனவுகளுடனும்...

இறந்த பின்பும் சுமந்து போகின்றனர்

நிறைவேறா ஆசைகளையும்

ஏகப்பட்ட பாவங்களையும்!

— சோ.சுப்புராஜ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us