
'பஞ்ச்' டயலாக் நடிகராகும், சிவகார்த்திகேயன்!தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள், தங்களது ரசிகர்களை கருத்தில் வைத்து, 'பஞ்ச்' வசனங்கள் பேசி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும், 'பஞ்ச்' வசனம் பேச ஆசைப்படுகிறார். அதனால், கதை கேட்கும்போதே, 'இந்தந்த காட்சிகளில், 'பஞ்ச்' வசனம் வையுங்கள்...' என்று இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார்.— சினிமா பொன்னையா
'மீ டூ'வால் பட வாய்ப்பிழந்த, ரம்யா நம்பீசன்!விஜயசேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி உட்பட, பல படங்களில் நடித்தார் மலையாள நடிகை, ரம்யா நம்பீசன். 'மீ டூ' விவகாரத்தில், மலையாள நடிகர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததால், அங்கு அவருக்கு பட வாய்ப்பு பறி போனது. அதனால், தற்போது, முழுநேர கோலிவுட் நடிகையாகி விட்டார். தன் உடல்கட்டு, 'மெச்சூரிட்டி'யான வேடங்களுக்கும் பொருந்தும் என்பதால், கதாநாயகி மட்டுமின்றி, அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டதாக சொல்லி, பட வேட்டை நடத்தி வருகிறார். கரை காணாத தோணி போலத் தவிக்கிறது!— எலீசா
அதிரடி நடிகையாகும், பிரியாமணி!பருத்திவீரன் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், பிரியாமணி. தென் மாநில அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த இவர், 2017ல், முஸ்தபா ராஜு என்பவரை, திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பை தொடர்ந்து வரும் பிரியாமணி, தற்போது, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும், ஆர்ஆர்ஆர் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, 'ரம்யாகிருஷ்ணன் பாணியில், அதிரடி நடிகையாக, 'செகண்ட் இன்னிங்ஸை' துவங்க தயாராகி விட்டேன்...' என்று கூறும் பிரியாமணி, கோலிவுட்டிலும் புதிய படங்களில் நடிக்க பேச்சு நடத்தி வருவதாக சொல்கிறார்.இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும்; இரந்து உண்டாலும் உண்ணும்!— எலீசா
புரோட்டா சூரியை கைவிட்ட, கதாநாயகர்கள்!யோகிபாபு, முன்னணி காமெடியன் ஆனதை அடுத்து, புரோட்டா சூரிக்கான காமெடி வாய்ப்பு குறைந்து விட்டது. அவருக்கு தொடர்ச்சியாக, வாய்ப்பு கொடுத்து வந்த ஹீரோக்களே, மார்க்கெட்டை கருத்தில் வைத்து, யோகிபாபு பக்கம் திரும்பி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள சூரி, அடுத்தபடியாக, கேரக்டர் நடிகராக, இரண்டாவது, 'இன்னிங்ஸை' துவங்கி இருக்கிறார். — சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!* தன் அபிமான ஹீரோக்கள், தன்னை கழட்டி விட்டதால், இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்களின் அன்புக்கு பாத்திரமாகி வருகிறார், பப்ளிமாஸ் நடிகை. அதோடு, ஆரம்பத்தில் சில இளவட்ட நடிகர்களுடன் ஒட்டாமல், உரசாமல் தள்ளி நின்று நடித்து வந்தார், நடிகை. இப்போது, தள்ளி நின்றால், அவர்களும் தன்னை தள்ளி வைத்து விடுவர் என்பதால், அவர்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு கூடுதல் நெருக்கம் காட்டி, திணறடித்து வருகிறார்.'ஏய்... மாலினி குட்டி, வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா, நம்ம ஹன்சிகா மாதிரி ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கக் கூடாது. அவங்களோட நாலு வார்த்தை பேசிட்டு போகணும்... அது தான் நாகரிகம்...' என்றார், அம்மா.
* இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர், இவர். தான் நடித்த சமீபத்திய படம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் சொன்ன தேதியில் வெளியிடாமல், வேறொரு நாளில் வெளியிட்டதால் அவருக்கு, 'ரெட் கார்டு' போடப்பட்டுள்ளது. இதனால், நடிகர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவரை வைத்து அடுத்தபடியாக படம் இயக்க, கதை சொல்லியிருந்த இயக்குனர்கள், வேறு நடிகர்கள் பக்கம் தாவி கொண்டிருக்கின்றனர். ஆக, வேகமாக வளர்ந்து வந்த நடிகரின் மார்க்கெட், அதல பாதாளத்தில் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.'ஆபீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்கணும் தம்பி. 'பர்சேஸ்' பிரிவில் இருப்பானே விஜய் ஆன்டனி, அவன் கதி என்ன ஆயிற்று தெரியுமா? விதியை மீறினான், கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க... எனவே, ஊரோடு ஒத்து போய், பேரை காப்பாத்திக்க...' என்றார், மேலதிகாரி.
சினி துளிகள்!* ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்தது போன்று, 'நெகட்டீவ்' கலந்த வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்கிறார், ஹன்சிகா.* திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து, கொலைக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார், விஜய் ஆன்டனி.
அவ்ளோதான்!

