sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 03, 2019

Google News

PUBLISHED ON : பிப் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் கே.பாக்யராஜ்!

மகன் சாந்தனு நடித்த, முதல் படமான, சித்து பிளஸ் - 2 படத்தை இயக்கினார், கே.பாக்யராஜ். அந்த படம் தோல்வியடைந்ததால், அதன் பின் படம் இயக்காமல், நடிகரானார். பல படங்களில், 'கேரக்டர் ரோல்'களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது, 1985ல், தான் இயக்கி, நடித்த, சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி விட்டார். இந்த படத்தில், தானும் நடிப்பதோடு, முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகம் செய்த, கோவை சரளாவையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார், பாக்யராஜ்.

— சினிமா பொன்னையா

சூட்டை கிளப்பிய, ஆண்ட்ரியா!

'லிப் கிஸ்' மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்த ஆண்ட்ரியா, வடசென்னை படத்திற்கு பின், இனிமேல் கவர்ச்சிக்கு தடா போட்டிருப்பதாக, சமீபத்தில் தான் அறிவித்தார். ஆனால், ஒரு காலண்டரின் அட்டைப் படத்திற்கு, அவர், மேலாடை இன்றி கடல் கன்னி போன்று, 'போஸ்' கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திலும் பகிர்ந்து, சூட்டை கிளப்பியிருக்கிறார், ஆண்ட்ரியா.

அடி அதிசயமே, சீமை சரக்கே!

எலீசா

விவசாயியான, தேவயானி!

மும்பையைச் சேர்ந்தவரான, நடிகை தேவயானி, தமிழ் பட இயக்குனர், ராஜகுமாரனை திருமணம் செய்து, தமிழச்சியாகி விட்டார். அதோடு, கணவரின் சொந்த ஊரான, ஈரோட்டில் உள்ள ஆலயங்கரடு என்ற கிராமத்தில், அவருடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். மேலும், பண்ணை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சிலர், 'பிளாட்' போட்டு விற்க தயாரானபோது, அந்த நிலங்களை வாங்கி, அதிலும், தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

அவரவர் அக்கறைக்கு, அவரவர் படுவார்!

எலீசா

நஸ்ரியாவின் டப்பாங்குத்து!

நேரம் மற்றும் ராஜா ராணி என, சில படங்களில் நடித்த, நஸ்ரியா, திருமணத்திற்கு பின், கூடே என்ற மலையாள படத்தில் நடித்தார். அதையடுத்து, தமிழில் அஜீத் நடிக்கும், பிங்க் இந்தி படத்தின், 'ரீ - மேக்'கில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ரயில் படிக்கட்டில் நின்று, தான் குத்தாட்டம் போடும், 'வீடியோ' ஒன்றை, 'டப்பாங்குத்து' என்ற பெயரில், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நஸ்ரியாவின் குறும்புத்தனமான அந்த வீடியோவை, இளவட்டங்கள் வைரலாக்கி வருகின்றன.

அடி சக்கை, பொடி மட்டை!

எலீசா

நடிகையான வாரிசு!

காதல் கோட்டை பட இயக்குனர், அகத்தியனின் மூத்த மகள், கிருத்திகா, சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இரண்டாவது மகள், விஜயலட்சுமி, சென்னை 28 மற்றும் அஞ்சாதே என, பல படங்களில் நாயகியாக நடித்தார். பின், திருமணம் செய்து, 'செட்டில்' ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போது, அகத்தியனின் மூன்றாவது மகள், நிரஞ்சனியும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன் இவர், பென்சில், கதகளி மற்றும் கபாலி படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேணும்!

எலீசா

சிம்புக்கு பதிலாக சித்தார்த்!

கமலின், இந்தியன் - 2 படத்தில், அவரது பேரனாக நடிக்க இருந்தார், சிம்பு. ஆனால், இந்தியன் - 2 படத்தை தயாரிக்கும், லைகா நிறுவனம், தற்போது தயாரித்துள்ள, வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில், நாயகனாக நடித்திருக்கும் சிம்பு, சம்பள விஷயத்தில் பிரச்னை செய்ய, பஞ்சாயத்தாகி விட்டதாம். அதனால், இந்தியன் - 2 படத்திற்கு அவர் வேண்டாம் என்று முடிவு செய்த, லைகா நிறுவனம், சிம்பு நடிக்க இருந்த வேடத்துக்கு, சித்தார்த்தை ஒப்பந்தம் செய்துள்ளது.

—சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* வேகமாக முன்னேறி வந்த மெரினா நடிகருக்கு, அடுத்தடுத்து இரண்டு படங்கள், அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டன. அதனால், தற்போது நடித்து வரும் படங்களை வெற்றிப்படமாக கொடுத்து, மார்க்கெட்டை தக்க வைக்க மெனக்கெடும் அவர், கதை விஷயத்தில் கூடுதலாகவே மூக்கை நுழைக்கிறார். அடிக்கடி எல்லை மீறுவதால், அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் நடிகருடன், இயக்குனர்கள் மீசையை முறுக்குகின்றனர். மெரினா நடிகரின் இந்த போக்கு, இயக்குனர்கள் வட்டாரத்தில், புகைச்சலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

'நம்ம ஆபீசுல நடக்க போற முதல் விழா இது. சிறப்பா அமையணும்ன்னு மேனேஜர் சொல்லிட்டார். தம்பி சிவகார்த்திகேயா, உனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்... மத்தவங்க வேலையில தலையிடாதே...' என்றார், மேனேஜரின் உதவியாளர்.

* பீட்சா நடிகருடன் நடித்த படம், வெற்றி பெற்றதை அடுத்து, ஏராளமான கதைகள் கேட்ட மூனுஷா, அதில் ஒரு கதையை கூட, ஓ.கே., செய்யவில்லை. ஒவ்வொரு கதைகளிலுமே குற்றம், குறைகளை கண்டுபிடித்து, 'ரிஜெக்ட்' செய்து வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள், மூனுஷாவின் பெயரை, கோலிவுட்டில், 'டேமேஜ்' செய்து வருகின்றனர்.

'ஏண்டி த்ரிஷா... எத்தனை வரன்களை தான் உனக்கு காட்டுவது. ஒவ்வொன்றையும், ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்து, தள்ளுபடி செய்றியே...' என்று அலுத்துக் கொண்டாள், அம்மா.

சினி துளிகள்!

* ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்து வந்த, சிவகார்த்திகேயன், தற்போது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

* பேட்ட படத்தில் நடித்தபோது, ரஜினி சொன்ன ஆன்மிக கதைகள், ஆன்மிகத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார், த்ரிஷா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us