
கன்னட மொழியில், விஸ்வாசம்!
கர்நாடகாவை பொறுத்த வரை, கன்னட மொழி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்ற மொழி படங்களை, அவர்கள், கன்னடத்தில், 'டப்' செய்வதில்லை. இதுவரை, தமிழ் படங்களும், அங்கு, தமிழ் மொழியில் தான் வெளியாகி வந்தன. ஆனால், அஜீத் நடித்து வெளியான, விஸ்வாசம் படம், ஜகா மல்லா என்ற பெயரில், கன்னட மொழியில், 'டப்' செய்யப்பட்டு, வெளியாகி உள்ளது. அந்த வகையில், 50 ஆண்டுகால சினிமாவில், முதன்முறையாக வேற்று மொழி படமொன்று, கன்னட மொழிக்கு, 'டப்' செய்து வெளியாவது, இதுவே முதல் முறை.
— சினிமா பொன்னையா
வித்யாபாலன் அதிரடி கருத்து!
நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு, 'செக்ஸ்' உணர்வு குறைந்து விடுவதாக கூறப்படுவது பற்றி, கருத்து கூறியுள்ளார், வித்யாபாலன். அதாவது, 'நாற்பது வயதுக்கு மேல், 'செக்ஸ்' உணர்வு குறைந்து விடுகிறது அல்லது நாட்டம் ஏற்படுவதில்லை என்று பெண்கள் சொல்வதை, நான் கட்டுக்கதை என்று தான் சொல்வேன். நாற்பது வயதான நான், ஏற்கனவே இருந்த, 'செக்ஸ்' உணர்வை விட, இப்போது, இன்னும், 'ஹாட்' ஆக உணர்கிறேன்...' என்று, தைரியமாக கருத்து கூறியுள்ளார்.
— எலீசா
குத்துப்பாட்டுக்கு, 'குட் பை!'
சரியான படவாய்ப்புகள் இல்லாததால், 'குத்தாட்ட' நடிகையாக உருவெடுத்திருந்த, இனியா, இப்போது, காபி என்ற படத்தில், ஆக் ஷன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை வைத்து, தன் மார்க்கெட்டை மீண்டும், 'ஸ்டெடி' செய்ய திட்டமிட்டு வரும், இனியா, 'இனிமேல் குத்துப் பாட்டுக்கு ஆடுவதை நிறுத்தி, அழுத்தமான கதாபாத்திரங்களில் தெறமை காட்ட போகிறேன்...' என்று, மெகா பட இயக்குனர்களிடம், 'சான்ஸ்' கேட்டு, துரத்தி வருகிறார். போனது என்ன ஆனாலும் புத்தி கொள்முதல்!
—எலீசா
விஜயசேதுபதிக்கு உதவி செய்த, திருநங்கையர்!
வித்தியாசமான கதை மற்றும் கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புவதாக சொல்லும், விஜயசேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில், ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருக்கிறார். படத்தில், இந்த வேத்தில் குறைவான நேரமே வந்தாலும், நிறைய ரிஸ்க் எடுத்து, நிஜ திருநங்கையாக உணர்ந்தே நடித்தேன். அப்படி நடிப்பதற்கு சில திருநங்கையர் எனக்கு உதவி செய்தனர் என்கிறார் விஜயசேதுபதி.
கறுப்புப்பூனை!
* 'கதை பிடித்தால் தான் நடிப்பேன்...' என்று கூறி வந்த, பையா நடிகை, இப்போது, மார்க்கெட் குடைசாய்ந்து கிடப்பதால், படம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். அதனால், சாதாரண கதைகளை, இயக்குனர்கள் சொன்னாலே, 'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்து, 'அட்வான்சை' கைப்பற்றி விடுகிறார்.
இதனால், மூனுஷா மற்றும் தாரா நடிகையர் தட்டிக் கழிக்கும் கதைகள், இப்போது இந்த நடிகையின் பக்கம் தான் தாவிக் கொண்டிருக்கிறது.
'அதோ போறாளே... அவளுக்கு, தமன்னான்னு நினைப்பு போலிருக்கு... குட்டை பாவாடையும், சட்டையுமா தெருவில இப்படியா திரியறது... மயில பார்த்து,வான் கோழி ஆடின கதையால்ல இருக்கு...' என்று அலுத்துக் கொண்டனர், தெருவாசி பெண்கள்.
* கடைசியாக, தளபதியுடன் சர்ச்சை படத்தில் நடித்த, அந்த வாரிசு நடிகைக்கு, அடுத்தபடியாக, தல அல்லது சூப்பர் நடிகருடன், 'டூயட்' பாடி விடவேண்டும் என்பது, பேராசையாக இருந்து வருகிறது. அதனால், இரண்டு நடிகர்களின் படங்களுக்கும் கல்லெறிந்து வரும் நடிகை, சூப்பர் நடிகரை வைத்து படம் இயக்குபவர், தன் அபிமானி என்பதால், அவருடன் அடிக்கடி, 'கடலை' போடுகிறார்.
சமீபத்தில், மரியாதை நிமித்தமாக, தன் வீட்டிற்கு அவரை அழைத்த நடிகை, அவருக்கு, மலையாள கறி சோறு விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.
'கேரளத்துக்கா, 'டூர்' போகப் போற... என் உறவுக்கார பெண், கீர்த்தி அங்க தான் இருக்கிறா... அவ வீட்டுல தங்கிக்கலாம்...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* கடந்த, 16 ஆண்டுகளில், 793 படங்களை, மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு தடை செய்துள்ளதாக, தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
* அமெரிக்காவில், மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியத்தில், பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப் பட்டுள்ளது.
* தேவி படத்தில் நடித்த தமன்னா,தேவி - 2 படத்திலும் பிரபுதேவாவுடன் நடிக்கிறார்.
* 'முத்த காட்சியில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை...' என்கிறார், கீர்த்தி சுரேஷ்.
அவ்ளோதான்!