sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டாபட்டி 50-50, போட்டா போட்டியாக மாறியது!

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம், பட்டாபட்டி 50-50. பல மாதங்களாக வியாபாரம் ஆகாமல் இழுத்தடித்த அப்படம், இப்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. அதோடு, படத்தின் தலைப்பையும், போட்டா போட்டி என்று மாற்றியுள்ளனர். கிரிக்கெட் வாசனையே இல்லாத இரண்டு கிராமங்களுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியே, இப்படத்தின் மையக்கரு.

— சினிமா பொன்னையா.

'அருந்ததி' கெட்-அப்பில் சுனேனா!

வம்சம் படத்திற்கு பிறகு, சுனேனா நடிப்பில் வெளியாகும் படம் திருத்தணி. 'இப்படத்தில், வழக்கத்தில் இருந்து மாறுபட்டு நடித்துள்ளேன்...' என்று கூறும் சுனேனா, 'அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்ற ஒரு கெட்-அப்பிலும் நடித்துள்ளேன். குறிப்பாக, அந்த கெட்-அப்புக்கே உரிய நடை, உடை, பேச்சு என்று மிரட்டியுள்ளேன். ஆக, இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் என்னை பேச வைக்கும்...' என்கிறார். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!

— எலீசா.

ஜாக்கெட் அணியாமல் நடித்த தன்ஷிகா!

வசந்த பாலன் இயக்கி வரும், அரவான் படம், 300 ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் உருவாகிறது. அதனால், படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகையரின் நடை, உடை, பாவனை அனைத்தையும் பழைய கால பாணியிலேயே படமாக்கி வருகிறார் இயக்குனர். குறிப்பாக, பட நாயகி தன்ஷிகா, அக்காலத்து பெண்கள் அணிந்தது போன்று புடவை மட்டுமே உடுத்தி, ஜாக்கெட் அணியாமல், படம் முழுக்க நடித்திருக்கிறார்.

— எலீசா.

ரிஸ்க் எடுத்த மோனிகா!

சமீப காலமாக தான் நடிக்கும் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்று நினைக்கிறார் மோனிகா. அதனால், அகராதி படத்துக்காக, கோல்கொண்டாவில் நடந்த படப்பிடிப்பில், கயிற்றில் தொங்கியபடி, 80 அடி பள்ளத்தாக்கில் துணிச்சலாக நடித்திருக்கிறார் மோனிகா. 'டூப் யூஸ் பண்ணலாமே...' என்று டைரக்டர் கேட்டதற்கு, 'மற்றவர் கஷ்டப்பட்டு நடித்து, நான் பெயர் வாங்க விரும்பவில்லை...' என்று கூறி விட்டார். கூத்துக்கு புகுந்தவள், கொட்டுக்கு அஞ்சி தீருமா?

எலீசா.

மீண்டும் விஜய் - சித்திக்!

பிரண்ட்ஸ், காவலன் என சித்திக் இயக்கத்தில், விஜய் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி என்பதால், மீண்டும், அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் விஜய். 'அடுத்த ஆண்டு ஒரு படத்தில் இணைவோம்...' என்று சொல்லி இருக்கிறார் சித்திக். மலையாளத்தில் தான் ஏற்கனவே இயக்கிய இன்னொரு கதையையே, விஜய் பாணிக்கு மாற்றி, தமிழில் இயக்கவும் முடிவு செய்து வைத்திருக்கிறார்.

— சி.பொ.,

டாப்ஸி திட்டம்!

வந்தான் வென்றான் படத்தில் நடித்து வரும் டாப்ஸி, 'தமிழில் மட்டுமே முழு நேர நடிகையாகப் போவதில்லை...' என்கிறார். தமிழுக்கு இணையாக தெலுங்குக்கும் முக்கியத்துவம் தரப் போவதாக சொல்லி, இப்போது அங்கு மூன்று படங்களில், 'கமிட்' ஆகி உள்ளார். ஒருவேளை, மேற்கூறிய படம் தோல்வியடைய நேர்ந்தால், தெலுங்குக்கு முழுசாக தாவி விடும் திட்டமும் வைத்திருக்கிறார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்!

— எலீசா.

மீசை இல்லாத ஸ்ரீகாந்த்!

ஏற்கனவே, துரோகி படத்தில் மீசை இல்லாமல் நடித்த ஸ்ரீகாந்த், மீண்டும் ஷங்கர் இயக்கும், நண்பன் படத்திலும் மீசை இல்லாமல் நடிக்கிறார். 'இது, ஒருவேளை, இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி விட்டால், அதன் பிறகு, மீசை இல்லாத ஸ்ரீகாந்தைதான் அதிகமான படங்களில் பார்க்க முடியும்...' என்கிறார்.

— சி.பொ.,

ஹீரோயின் சப்ஜெக்ட் தேடும் அனன்யா!

சீடன் படத்தில் நடித்த அனன்யா, அதன் பிறகு, அங்காடித் தெரு மகேஷûக்கு ஜோடியாக, இரவும், பகலும் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திலும், சீடன் படம் மாதிரியே அனன்யாவின் மீதுதான் மொத்த கதையும் செல்கிறது. இதேபோல், தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளாகவே, தான் தேர்வு செய்ய இருப்பதாகவும் சொல்கிறார். ஓடி, ஓடி நூறு குழி உழுவதை விட, அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று!

— எலீசா.

'ஜிம்' மாஸ்டராக நடிக்கும் பரத்!

பழனி படத்துக்குப் பிறகு, பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் படம் திருத்தணி. இப்படத்தில், ஜிம் மாஸ்டர் வேடத்தில் நடிக்கும் பரத், தன் சாக்லேட் பாய் உடம்பை முறுக்கேற்றி, கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். 'இப்படமும், பழனியைப் போன்று அதிரடி ஆக்ஷன் கதைதான். பழனியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக, முதல் தளத்தில் அமர வைத்த பேரரசு, திருத்தணியில் பல படிகள் ஏற்றி, அடுத்த தளத்தில் அமர்த்தியுள்ளார்...' என்கிறார்.

— சி.பொ.,

கல்கி என்ற திருநங்கை, கதாநாயகியாக நடித்துள்ள நர்த்தகி படம், ஜெர்மனி, ரஷ்யா உள்பட பல உலக நாடுகளில் வெளியாக உள்ளது. அதற்கான டப்பிங் @வலைகள், தற்@பாது நடந்து வருகிறன்றன. இதைத் தொடர்ந்து, இப்படம் இந்தியிலும் ரீ-மேக் ஆகிறது. அதில், தமிழில் கல்கி நடித்த ரோலில் கொன்கனா சென் நடிக்கிறார்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us