தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : ஏப் 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாறுபட்ட கெட்-அப்பில் அஜீத்

மங்காத்தா படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டுமென்று இரவு, பகலாக பாடுபட்டு வருகிறார் அஜீத். இப்படத்தில், இதுவரை நடித்திராத சில மாறுபட்ட கெட்-அப்களிலும் நடித்து வரும் அஜீத், ஒரு முதிர்ச்சியான வேடத்திலும் நடித்துள்ளார். இவ்வேடம், இதற்கு முன், வரலாறு, அசல் படங்களில் அவர் நடித்த முதிர்ச்சியான வேடங்களை விட, பேசப் படக்கூடியதாக இருக்கும் என்கிறார்.

— சினிமா பொன்னையா.

சாப்ட்வேர் இன்ஜினியரான தாப்சி, ஓர் ஆங்கிலோ இந்தியர். ஊத்தப்பமும், கறி மசாலாவும் இவருக்கு ரொம்ப பிடித்த மான ஐட்டங்கள். நொறுக்கு தீனி என்றால், வேர்கடலை பர்பியை மட்டும் விரும்பி சாப்பிடுவார் கமல். இடுப்பு சதையை குறைக்க, ட்ரீட்மென்ட் எடுக்க இருக்கிறார் அனுஷ்கா.

தெலுங்கு தேச நடிகரான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, விரைவில், தமிழில் ஒரு படம் தயாரிக்க, இருக்கிறார்.

வேலாயுதம் படத்தில், பால் பண்ணை உரிமையாளராக நடிக்கிறார் விஜய்.

மூலிகை உணவு வகைகள் மற்றும் புதினா, கறிவேப்பிலை, நார்த்தங்காய் துவையலை விரும்பி சாப்பிடுகிறார் நடிகை அமலா பால்.

வாய்ப்புகள் குறையும் போது, தனக்கு தெரிந்த நடனத்தையும், யோகா பற்றியும் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விடப் போவதாக கூறுகிறார் நமீதா.

மன்மதன் அம்புவிற்கு பிறகு, எந்த தமிழ் இயக்குனர்களும் நடிகர் மாதவனுக்கு பட வாய்ப்பு தராததால், முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பி விட்டார். தற்போது, அவர் கைவசம் மூன்று இந்திப்படங்கள்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் டைரக்டர் டோனிபாயில் டைரக்ஷனில், அலைகள் ஓய்வதில்லை ராதா மகள் கார்த்திகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில் அதிபராக இருக்கும் சோனா, இப்போது பிரைவேட் செக்யூரிட்டி பாதுகாப்புடன் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார்.

தமிழ் பெண்ணை மணக்கும் இந்திக்காரர் வீட்டில் ஏற்படும் பிரச்னையை மையப்படுத்தி எழுதிய­, ஒரு நாவலை தழுவி, இந்தியில் தயாராகும் படத்தில், தமிழ் பெண்ணாக அசின் நடிக்கிறார்; ஜோடியாக ஷாருக்கான் நடிக்கிறார்.

ரம்ஜானும், விநாயகர் சதுர்த்தியும் நடிகை நதியா வீட்டு முக்கிய பண்டிகைகள். மார்கெட்டில் இறங்கும் புத்தம் புது கார்களை உடனே வாங்கு வதில் விருப்பம் உள்ளவர் நடிகர் ஜீவா. உடனே, அந்த கார் விபரங்களை நெட்டி லும், தெரிந்தவர்களிடத் திலும் கேட்டு, சேகரித்து விடுவார். ஷங்கர் இயக்கும் நண்பன் படத்திற்கு, வைரமுத்துவின் மகன் கார்கி வசனம் எழுதுகிறார்.

மணிரத்னம் படத்திலிருந்து விலகிய ஹீரோக்கள்!

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில், மணிரத்னம் இயக்கும் படம், பொன்னியின் செல்வன். இப்படத்தில் விஜய்யுடன், மற்ற இரு டாப் ஹீரோக்களையும் இணைக்க வேண்டும் என்பதுதான் மணிரத்னத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், படத்தில் விஜய் இருப்பதால், தங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது என்று, மற்ற இருவரும் வேறு காரணம் சொல்லி, நாசூக்காக விலகி விட்டனர். அதன் பிறகே, அவர்களுக்கு பதிலாக விஜய்யுடன், ஆர்யா, மகேஷ் பாபு ஆகியோரை இணைத்துள்ளார்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us