தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை!

கவிச்சோலை!

கவிச்சோலை!


PUBLISHED ON : ஏப் 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரிய வித்து!

* ஒரு மணி நேரத்திற்கு

விலை பேசினால்

- விலை மகள்!

* ஆயுளுக்கும் விலை பேசினான்

- கணவன்!

* பத்து நிமிடம் உடலை

சுமப்பவளுக்கு கொடுக்கும்

அங்கீகாரத்தை கூட,

பத்து மாதம்

தன் விந்தை

சுமப்பவளுக்கு கொடுப்பதில்லை

இந்த அசிங்கம் பிடித்த சமூகம்!

* பதினாறில்

பெற்றவர்களின் சொல்லில்

சிறையாகி...

* இருபதில்

மூன்று முடிச்சில் சுயம் தொலைத்து...

* அறுபதில்

தன் தொப்புள் கொடியே

பாரமாய் நினைக்கையில்...

* மரமாய்...

மரம்

பூப்பதுண்டு...

சூடிக் கொண்டதில்லை!

* மரம்

காய்ப்பதுண்டு...

புசிப்பதில்லை!

* அதனால்,

சில மரங்கள்

முதியோர் இல்லங்களில்!

* வீட்டிற்கு ஒரு மரம்

வளருங்கள்...

ஆனால்,

பெண்களை மட்டும்

மரமாய் வேண்டாம்!

* அடுத்த தலைமுறையின்

வீரிய மிகு வித்து...

அவள்

மறக்கிறீர்களே!

— எஸ்.குமார், சென்னை.­

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us