தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினி படத்தில் நடிக்க, வாய்ப்பு கேட்ட, 'ஹாலிவுட்' நடிகர்!

ரஜினியின் நடிப்புக்கு, சில, 'ஹாலிவுட்' நடிகர்களும், ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களில், கமாண்டோ மற்றும் எக்ஸ்மேன் போன்ற ஆங்கில படங்களில் நடித்த, பில் டியூக் என்ற, 'ஹாலிவுட்' நடிகரும் ஒருவர். தற்போது, ரஜினி நடித்து வரும், தர்பார் படத்தில், 'ரஜினியின், 'கசின்' ஆகவோ அல்லது நயன்தாராவின், 'அங்கிள்' ஆகவோ நடிக்க, வாய்ப்பு இருந்தாலும் சொல்லுங்கள்...' என்று, 'டுவிட்டர்' மூலம், இயக்குனர், ஏ.ஆர். முருகதாசிடம் கேட்டுள்ளார், பில் டியூக். முருகதாசும் ஆச்சர்யப்பட்டு, தர்பார் படத்தில் பில் டியூக்கிற்கு, நல்ல கேரக்டரை கொடுக்க, தயாராகிக் கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

எடை குறைப்பு பெண்களை வலியுறுத்தும், ரகுல்பிரீத் சிங்!

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களின், எடை குறைப்புக்காக, தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில், 'ஜிம்' நடத்தி வருகிறார், நடிகை ரகுல்பிரீத் சிங். 'உடல் ஆரோக்கியம், சீரான எடை மற்றும் கல்வி இவை மூன்றும், பெண்களுக்கு முக்கியமானது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி மட்டுமின்றி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களையும் பெண்கள் விளையாட வேண்டும்...' என்று, 'ஜிம்'மிற்கு வரும் பெண்களிடம் வலியுறுத்தி வருகிறார், ரகுல்பிரீத் சிங். ஊதின சங்கு ஊதினால், விடிகிற போது விடியட்டும்!

- எலீசா

காதல் கிசுகிசுவில் சிக்கிய,அனுபமா!

தனுசுடன், கொடி படத்தில் நடித்த, அனுபமா பரமேஸ்வரன், இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர், பும்ரா, 'டுவிட்டரில்' போடும் அனைத்து செய்திகளையும், 'லைக்' செய்து, 'ரீ - டுவிட்' செய்கிறார். இதனால், பும்ரா - அனுபமாவிற்கு இடையே, காதல் மலர்ந்திருப்பதாக, செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இது பற்றி, அனுபமாவிடம் கேட்டால், 'இப்போது வரை பும்ராவை நண்பராக தான் பார்க்கிறேன். உங்கள் பார்வையில், காதலாக தெரிந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை...' என்கிறார். என்றும் இடி குலைச்சல் எப்போதும் நீங்குவது இல்லை!

—எலீசா

சாய் தன்ஷிகாவின் மிரட்டல்!

வரலட்சுமி, 'ஆக் ஷன் ஹீரோயினி' ஆனதை அடுத்து, 'ஸ்டன்ட்' நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும், 'வீடியோ'க்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, தற்போது, சாய் தன்ஷிகாவும், ஒரு படத்தில், 'ஆக் ஷன் ஹீரோயினி'யாக களமிறங்குகிறார். அதற்காக, தான், 'டைவ்' அடித்தபடி, சண்டை பயிற்சி எடுத்த, 'வீடியோ'வை வெளியிட்டுள்ள, சாய் தன்ஷிகா, கபாலி படத்தில் நடித்ததைப் போலவே, 'டூப்' இல்லாமல், இப்படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்கப் போவதாக சொல்லி, அதிர வைத்துள்ளார். கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ!

- எலீசா

அஜீத்தை இந்திக்கு இழுக்கிறார், போனி கபூர்!

மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் கணவர், போனிகபூர் தயாரித்துள்ள, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள, அஜீத், இன்னொரு படத்திலும், அவரது தயாரிப்பில் நடிக்கிறார். இதையடுத்து, தன்னிடம் மூன்று ஆக் ஷன் கதைகள் இருப்பதாக சொல்லும், போனிகபூர், அதில், அஜீத்துக்கு பிடித்த கதையில், அவரை வைத்து இந்தியில் படமெடுக்க திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.

- சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

சினேகமான நடிகை, மகனை பெற்றெடுத்த கையோடு, மீண்டும் சினிமாவில் தெறமை காட்ட, தீவிரம் காட்டி வருகிறார். அவர் எடுத்த முயற்சியின் பலனாக, இப்போது, சுள்ளானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால், இள வயது அம்மா வேடம் என்று சொல்லி, அம்மணியை நரைமுடி நடிகையாக்கி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, 'பெரிய வேஷம் தருவர் என்று நினைத்து வந்த என்னை, இப்போது, பெரிய வயசு நடிகையாக்கி விட்டனரே...' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

'கட்டட வேலைக்கு, ஆள் எடுக்கறாங்கன்னு போனியே, சினேகா... ஏன் திரும்பி வந்துட்ட...'

'அத ஏன் கேக்கற... 'பெரிய, 'கான்ட்ராக்ட்' வேலை இது... சீக்கிரமா வேலை முடியணும்ன்னா, இள வயசு பொண்ணுங்கன்னா தேவலை. தலை நரைச்சவங்க தோது படாதுன்னு...' சொல்லிட்டாரு, அந்த மேஸ்திரி...'

சினி துளிகள்!

* 'சமூக நோக்கம் உள்ள கதைகள் மற்றும் மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க வைத்தால், அந்த கதாபாத்திரத்திற்காக, முழுமையாக என்னை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, சில இயக்குனர்களை, துரத்தி வருகிறார், அஞ்சலி.

* புதுப்பேட்டை படத்தில், தனுஷூடன் நடித்த சினேகா, 13 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us