PUBLISHED ON : ஆக 11, 2019

இரட்டை வேடத்தில், கமல்!
ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் - 2 படத்தில், இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார், கமல். பல ஆண்டுகளாக, தான் கிடப்பில் போட்டு வைத்திருந்த, தலைவன் இருக்கிறான் படத்தையும், தற்போது துாசு தட்டியிருக்கிறார். இந்த படத்தில், அவர், 'ஹீரோ' - வில்லன் என, இரண்டு விதமான வேடங்களில் நடிக்கும் செய்தி, தற்போது வெளியாகி இருக்கிறது. ஆக, ஒரே நேரத்தில், இரண்டு படங்களில், இரட்டை வேடங்களில் நடிக்கிறார், கமல்.
—சினிமா பொன்னையா
யோகிபாபுவுடன் நடிக்கத் துடிக்கும் நடிகையர்!
யோகிபாபுவின் நேரம், இப்போது, உச்சத்தில் இருக்கிறது. கோல மாவு கோகிலா படத்தில், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடிக்க, அந்த படம், 'ஹிட்' ஆனது. இப்போது, கதையின் நாயகியாக அஞ்சலி நடிக்கும் படத்தில், தன்னை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடிக்க, நடிகர் தேர்வு நடைபெற்றபோது, யோகிபாபுவிற்கு சிபாரிசு செய்திருக்கிறார். முன்னணி நடிகையரே, தன்னுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதால், சொல்ல முடியாத சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார், யோகிபாபு.
— சினிமா பொன்னையா
ரசிகர்களை அலற விட்ட, நந்திதா!
தமிழில், குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த, நந்திதாவிற்கு, நிறைய ரசிகர்கள் இருந்தனர். இலைமறை காய்மறை கவர்ச்சிக்காகவே, அவரை, 'கவிதை நாயகி' என்றும் புகழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது, கன்னட சினிமாவிற்குள் சென்றுள்ள, நந்திதாவோ, ஒரு படத்தில், 'மாடர்ன் ரோல்' என்ற பெயரில், துகிலுரிந்து நிற்கிறார். அதுவும், கவர்ச்சி நடன நடிகையரே அலறும் அளவுக்கு, துக்கடா நடிகையாகி விட்டார். அதைப் பார்த்து, 'நந்திதாவா, இவ்வளவு மோசமாகி விட்டார்...' என்று, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
—எலீசா
ஆண்ட்ரியாவை அதிர வைத்த, யாஷிகா ஆனந்த்!
தமிழ் சினிமாவில், 'சரக்கு, தம்' அடிப்பது மற்றும் படுக்கையறை காட்சி என்று, கலந்து கட்டி அடிப்பார், ஆண்ட்ரியா. ஆனால், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த, யாஷிகா ஆனந்தும், ஆண்ட்ரியாவின் அதிரடி பாணியை கையில் எடுத்துள்ளார். அம்சமான புது வரவு நடிகை என்பதால், ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் பண்ணிய இயக்குனர்களே, இப்போது, அவரை ஓரங்கட்டி, யாஷிகா பக்கம் சாய்ந்து விட்டனர். தன் மார்க்கெட்டுக்கு, யாஷிகா, 'வேட்டு' வைத்து விட்டதால், 'பாலிவுட்'டில் குடியேற தயாராகிறார், ஆண்ட்ரியா. இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!
—எலீசா
ஜோதிகாவுடன் மோதும், நயன்தாரா!
நயன்தாரா தான், தமிழ் சினிமாவில், 'சூப்பர் ஸ்டார்' நடிகை என்ற நிலையை, ஜோதிகாவின் வருகை உடைத்தெறிந்து விட்டது. இருப்பினும், தன் இடத்தை தக்க வைக்க நினைக்கும், நயன்தாரா, அடுத்தபடியாக, தான் கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை, ஜோதிகாவின் படம் வெளியாகும் அதே நாளில் வெளியிட்டு, பலப்பரீட்சை பார்த்துவிடும் முடிவில் இருக்கிறார். ஆக, இதுவரை நடிகர்கள் இடையே மட்டுமே நிலவி வந்த போட்டி, இப்போது, இரண்டு மெகா நடிகையருக்கு இடையேயும் வெடித்துள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
அந்தமான் படத்தில், மான் குட்டியாக துள்ளிக் குதித்த, நான்கெழுத்து நடிகை, முன்வரிசைக்கு முண்டியடித்து வருகிறார். அதற்கு, இயக்குனர்கள் ஒத்துழைக்காததால், இப்போது சில இளவட்ட, 'ஹீரோக்'களுக்கு, 'ரூட்' விட்டு வருகிறார். அவர்களை சுண்டியிழுப்பதற்காக, தன் அதிரடியான சில ஆபாச, 'வீடியோ'க்களை அனுப்பி, ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார், அம்மணி.
'அடியே இந்துஜா... வாலிபால் போட்டியில ஜெயிக்கணும்ன்னா, நேர் வழியிலே போகணும்; குறுக்கு வழியில போனா, ஜெயிக்க முடியாது. பேர் தான் கெட்டு போகும். அப்புறம், பட்ட பாடெல்லாம் வீணாயிடும். முறையா பயிற்சி எடுத்துக்க... நிச்சயம் ஜெயிப்ப...' என்று அறிவுறுத்தினாள், அம்மா.
சினி துளிகள்!
* விஜய்யின், பிகில் படத்தில், கால்பந்தாட்ட கேப்டனாக நடிக்கிறார், இந்துஜா.
* சரத்குமார் - சசிகுமார் இணைந்து நடித்து வரும் படத்திற்கு, நாநா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
* விஜய் சேதுபதியுடன் நடிக்கும், லாபம் படம், சரிந்த, தன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் என்று உறுதியாக நம்புகிறார், ஸ்ருதிஹாசன்.
அவளோதான்!
