
கமலை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசன், தான் நடித்த, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ராஜபார்வை, தேவர் மகன், குணா, விருமாண்டி, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் இந்தியன் ஆகிய படங்களை பட்டியலிட்டு, 'இதில், எந்த படத்தில், என், 'கெட் - அப்' உங்களுக்கு பிடித்துள்ளது...' என்று இணையதளம் மூலம், ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தார். ஆனால், பெரும்பாலான ரசிகர்களோ, அவர் குறிப்பிட்ட இந்த படங்களுக்கு பதிலாக, 'அன்பே சிவம் படத்தில் நடித்த, 'கெட் - அப்'தான் பிடிக்கும்...' என்று கூறியுள்ளனர். தான் பட்டியலிடாத படத்தின், 'கெட் - அப்'பை, ரசிகர்கள் குறிப்பிட்டு சொன்னது, கமலுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
— சினிமா பொன்னையா
நயன்தாராவை மாற்றிய தோல்விகள்!
சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, இப்போது, கதையை விட, ஜாதகத்தை அதிகமாக நம்பத் துவங்கியுள்ளார், நயன்தாரா. தன்னிடம், இயக்குனர் கதை சொல்ல வந்தால், அவரது ஜாதகம், படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரின் ஜாதகத்தையும் வாங்கி, தன் ஜாதகத்துடன் ஒப்பிட்டு, வெற்றி கூட்டணி என்று, ஜோதிடர் சொன்னால் மட்டுமே அந்த படத்தை, ஓ.கே., செய்கிறார். இல்லையேல், 'கதை பிடிக்கவில்லை, கதாபாத்திரம் பிடிக்க வில்லை...' என்று, ஏதாவது காரணம் சொல்லி, அந்த படத்தை, 'கட்' பண்ணி விடுகிறார். பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!
— எலீசா
மீனாவின், 'சென்டிமென்ட்!'
நடிகை மீனா, தன் மகள், நைனிகாவை, விஜயின், தெறி படத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து பட வாய்ப்பு வந்தபோது, மகளின் படிப்பு பாதிக்கும் என்று, புதிய படங்களை ஏற்கவில்லை. இதற்கு, இன்னொரு காரணமும் உள்ளதாம். அதாவது, 'பேபி ஷாம்லி போன்ற சிலர், குழந்தை நட்சத்திரமாக பெரிய அளவில் சாதித்தவர்களால், பின், கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை. அதனால், தன் மகளும், குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் சாதனை செய்து விட்டால், பின்னர் கதாநாயகியாக பிரபலமாக முடியாது...' என்று நினைக்கிறார். 'நான் நடித்த, அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பின், இடைவெளி கொடுத்து, பின்னர் கதாநாயகியாக, 'என்ட்ரி' கொடுத்தது போன்று, மகளையும், அடுத்தபடியாக கதாநாயகியாகவே களத்தில் இறக்கி விடப்போகிறேன்...' என்கிறார். காலம் அறிந்து, ஞாலம் ஒழுகு!
- எலீசா
கீர்த்தி சுரேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த, ரஜினி!
ரஜினி நடித்த, நெற்றிக்கண் படத்தில், 1981ல், அவருக்கு ஜோடியாக, லட்சுமி, மேனகா என்ற இரண்டு நடிகையர் நடித்தனர். இவர்களில், லட்சுமியின் மகள், ஐஸ்வர்யா, எஜமான் படத்தில் ரஜினியுடன் நடித்து விட்டார். தற்போது, மேனகாவின் மகள், கீர்த்தி சுரேசும், ரஜினியின், 168வது படத்தில் நடிக்கப் போகிறார். அம்மாவைப் போலவே, தானும், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஆசைப்பட்டார். இருப்பினும், சமீப காலமாக, 'பேத்தி வயது நடிகையருடன், 'டூயட்' பாடுவதில்லை...' என்ற கொள்கையை, ரஜினி கடைப்பிடிப்பதால், இந்த படத்தில், 'ஹீரோயினி' அல்லாத வேறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பே, கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. கிடைக்காத சரக்கு கிடைத்ததைப் போல!
— எலீசா
இளசுகளை, 'ஜொள்' விட வைத்த, சன்னி லியோன்!
மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான, சன்னிலியோன் மீது, ரசிகர்களுக்கான ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை. இதை புரிந்த பாலிவுட் இயக்குனர்கள், அவ்வப்போது, சன்னிலியோனை குத்தாட்டம் ஆட வைத்து, ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட்டு வருகின்றனர். இப்போது, ஒரு ஹிந்தி படத்தில், தீய சக்திகளிடமிருந்து உலகை காக்கும், 'சூப்பர் வுமன்' வேடத்தில், படு கவர்ச்சியான, 'கெட் - அப்'பில் நடிக்கிறார். அப்படத்திற்காக தான் எடுத்துக்கொண்ட சில போஸ்டர்களை, 'சோஷியல் மீடியா'வில் தெறிக்க விட்டு, ரசிகர்களை, 'ஜொள்' விட வைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
சுள்ளான் நடிகர் நடித்து வந்த பல படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால், சில தயாரிப்பாளர்கள், அவரிடம் பேசினபடி சம்பளத்தை கொடுக்காமல், 'டிமிக்கி' கொடுத்தனர். ஆனால், சமீபத்தில் அவர் நடித்து வெளியான, நான்கெழுத்து படம், 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்துள்ளது. இதனால், தெம்பாகி விட்ட சுள்ளான், 'இனி, என்னை, யார் ஒப்பந்தம் செய்ய வந்தாலும், முன்பணம் தரும்போதே, முழு சம்பளத்தையும் தந்தாக வேண்டும்...' என்று, கண்டிப்புடன் கூறி வருகிறார்.
'நம்ம, தொழிலாளர் நல சங்க தலைவராக இருக்கும், தனுஷ்குமார், இதற்கு முன் ஏற்பட்ட நாலைந்து பிரச்னைக்கு சரியான தீர்வு காண முடியாம, மண்ணை கவ்வினார். ஆனாலும், இப்ப, நம் கோரிக்கையை பற்றி, கம்பெனி சேர்மனிடம் சாதுர்யமாக பேசி, ஜெயிச்சு வந்துட்டார்பா... இனி, கொஞ்ச காலத்துக்கு, அவர் போக்கிலேயே போவோம்...' என்றார், சங்க உறுப்பினர் ஒருவர்.
சினி துளிகள்!
* அசுரன் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்து வரும், பட்டாஸ் படத்தில், சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவ்ளோதான்!