தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மார் 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்த்திபனுக்கு வந்த அரசியல் ஆசை!



'சினிமாவை தாண்டி, அரசியலுக்கு வந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான், என் ஆசையாக இருந்தது. ஆனால், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்த நேரத்தில், ரஜினியும், கமலும், அரசியலுக்கு வர தயாராகி விட்டனர். அதனால், என் அரசியல் ஆசையை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்திருக்கிறேன்...' என்று சொல்லும் பார்த்திபன், 'எதிர்காலத்தில், கண்டிப்பாக நானும் அரசியலுக்கு வருவேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

பெண்களை கவரும், ரகுல் பிரீத் சிங்!



தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர், ரகுல் பிரீத் சிங். குடும்பத் தலைவிகளும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரண்டு பகுதிகளில், பெண்களுக்காகவே பிரத்யேக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். அதோடு, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவர்களின் பார்வைக்கு அனுப்பி, அதை பின்பற்ற சொல்கிறார். அந்த வகையில், இணையத்தில், ரகுல் பிரீத் சிங் வெளியிடும் வீடியோக்களை, ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பார்த்து, அது, தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக, அவருக்கு, 'கமென்ட்' கொடுத்து வருகின்றனர். வித்தையடி மாமி விற்கிறதடி பணியாரம்!

எலீசா

பிரியா பவானி சங்கரின், 'டார்கெட்!'



சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது, ஒரு வட்டம் போட்டு நடித்து வந்த, பிரியா பவானி சங்கர், இப்போது, முழுநேர சினிமா நடிகையாகி விட்டார். அதோடு, 'தமிழக நடிகை என்பதால், அசைவ நடிப்புக்கு தடை போடுவார் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். கதை என்ன கேட்கிறதோ, அதற்கு மேல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 'அசைவ பிரியர்களின், 'பேவரிட் ஹீரோயினி' ஆக உருவெடுக்க வேண்டும் என்பது தான், எதிர்கால சினிமா டார்கெட்...' என்கிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!

எலீசா

ரம்யா நம்பீசனின் சமூக நோக்கம்!



நாட்டில் ஆங்காங்கே, மதக் கலவரங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நடிகை ரம்யா நம்பீசன், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஏராளமான மண்டை ஓடுகள் அடங்கிய, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மண்டை ஓடுகளின் கீழே, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், தலித், பிராமின் என, குறிப்பிட்டுள்ளார். நமக்கெல்லாம் சமூகமும், மதமும் வெவ்வேறாக இருப்பினும், நாம் அனைவரும் ஒரே மனித இனம் என்பதையே, அவர் அப்படி வெளிப்படுத்தியுள்ளார். சமூக அக்கறையுடன், ரம்யா நம்பீசன் வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!



ஒரு காலத்தில், சிவாஜி கேர்ள் நடிகை, 'ஓவர் பந்தா பார்ட்டி' ஆக இருந்தார். உடன் நடிப்பவர்களை மதிக்க மாட்டார். திருமணத்திற்கு பின், மீண்டும் தெறமை காட்ட வந்துள்ள அம்மணியை, 'மாஜி ஹீரோ'க்கள் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. இருப்பினும், நான் இப்போது, பழைய பந்தா நடிகை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை வலிய தேடிச் சென்று, நட்பு வளர்க்கிறார். அதோடு நள்ளிரவு, 'பார்ட்டி'களுக்கும் அழையா விருந்தாளியாக, 'விசிட்' அடித்து, அன்பை வாரி வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து, நடிகையின், 'சீக்ரெட் பாய்பிரண்ட்' பட்டியலில், அவரது, 'மாஜி ஹீரோ'க்கள் வேகமாக இடம் பிடித்துக் கொண்டிருப்பதாக, கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கின்றனர்.

'ஏம்பா... அது, ஸ்ரேயா தானே. பிரமோஷன் கிடைச்சாலும் கிடைச்சுது, ஆளே மாறிட்டாளே...' என கேட்டார், ஹெட் கிளார்க்.

'அத ஏன் கேட்கிற... இதற்கு முன் இருந்த, 'டிபார்ட்மென்ட்'ல, உடன் வேலை பார்த்தவங்களை கண்டுக்காம அலட்சியப்படுத்தினா... ஆனா, இப்ப, யாரும் அவளுடன் பேசுறதில்லை, பழகறதும் இல்லை... அவங்களும் ஒதுக்கி வைச்சுட்டாங்க. இப்ப, தானா வந்து பழக ஆரம்பிச்சிருக்கா... பார்ப்போம், வேதாளம், திரும்ப முருங்கை மரத்தில் ஏறாம இருந்தா சரி...' என்றார், சக ஊழியர்.

சினி துளிகள்!



*திருமணத்திற்கு பின், விமலுக்கு ஜோடியாக, சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறார், ஸ்ரேயா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us