sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 31, 2020

Google News

PUBLISHED ON : மே 31, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமல் படத்திற்கு புதிய உத்தரவு!



'கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படத்தில், சுதந்திர போராட்ட காலத்து கதைகளும் நிறைய இடம்பெறுவதால், 'எடிட்' செய்தாலும், நான்கு மணி நேரத்திற்கு மேல் வரும்...' என்கிறார், இயக்குனர் ஷங்கர்.

இந்த சேதி லைகா நிறுவனத்தின் காதுக்கு சென்றதும், 'கடவுளே கதாநாயகனாக நடித்தாலும், இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் இன்றைய ரசிகர்கள், தியேட்டருக்குள் உட்கார மாட்டார்கள்...' என்று கூறியுள்ளது. இந்த படத்தின் கதையில், சுதந்திர போராட்ட காலகட்டத்து காட்சிகளும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால், ஒரு படத்திற்கு உருவாக்கிய, 'ஸ்கிரிப்'டே இரண்டு படங்கள் அளவுக்கு பெரிய கதையாகி விட்டதாம். அதனால், இந்த படத்தை, இந்தியன் - 2 மற்றும் இந்தியன் - 3 என, இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சினிமா பொன்னையா

பீதியை ஏற்படுத்தும், சாய்பல்லவி!



தனுஷுடன் நடனமாடிய சாய் பல்லவி, ரவுடி பேபி பாடலுக்கு பிறகு, தென் மாநில ரசிகர்களின், 'பேவரிட்' நாயகியாகி விட்டார். தான் நடிக்கும் படங்களில் தலா இரண்டு குத்துப்பாடல்கள் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் போடுகிறார். அத்துடன், வித்தியாசமான நடன அசைவுகளை, 'கம்போஸ்' செய்யும் நடன மாஸ்டர்களையே, ஓ.கே., செய்கிறார்.

இப்படி அதிரடி ஆட்டக்காரியாக இருப்பதால், அவருடன் நடிக்கும், 'ஹீரோ'க்களோ, 'ஒருவேளை, அவருக்கு இணையாக நடனமாட முடியாமல் சொதப்பி விட்டால், நம்முடைய பெயர், 'டேமேஜ்' ஆகி விடுமே...' என்று, 'பீல்' செய்கின்றனர். ஆடித் தவித்த குரங்கு மத்தளத்தில் ஏறி இருப்பது போல!

எலீசா

கடுப்பேற்றும், காஜல் அகர்வால்!



காஜல் அகர்வாலை பொறுத்தவரை, 'வெயிட்'டான கேரக்டர் என்பதை விட, 'வெயிட்'டான சம்பளம் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார். அந்த வகையில், சிறிய, 'ஹீரோ'க்களின் படங்களில் நடிக்க, 'கால்ஷீட்' கொடுத்திருக்கும் அவர், அதே தேதியில் வேறொரு பெரிய, 'ஹீரோ'வின் படம் கிடைத்தால், அந்த படத்திலிருந்து தடாலடியாக வெளியேறி விடுகிறார்.

இதனால், அவர் மீது, சில வளர்ந்து வரும், 'ஹீரோ'க்களும், அப்படங்களின் இயக்குனர்களும் செம கடுப்பில் இருக்கின்றனர். ஆட்டுக்கறியும், நெல்லு சோறும் தம்மா கும்மா, அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா!

எலீசா

மீண்டும் வில்லனாகும், அரவிந்த்சாமி!



'ரீ - என்ட்ரி'யில், தனி ஒருவன் மற்றும் போகன் படங்களில், வில்லனாக நடித்து,'மாஸ்' காட்டினார், அரவிந்த்சாமி. அதன்பிறகு, வில்லனாக நடிக்க மறுத்து வந்தார். அதையடுத்து, அவர், 'ஹீரோ'வாக நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை; சில படங்கள் திரைக்கே வரவில்லை. இதனால், மீண்டும் வில்லனாக நடிக்க தயாராகி விட்டார்.

தற்போது, பாகுபலி நாயகன், பிரபாசுடன் ஒரு தெலுங்கு படத்தில், மெகா வில்லனாக, 'என்ட்ரி' கொடுப்பவர், தமிழிலும், மெகா, 'ஹீரோ'க்களின் படங்களில், வில்லனாக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!



இரண்டெழுத்து நடிகருடனான காதல் சமாசாரமே, தன் கலைச்சேவைக்கு, 'வேட்டு' வைத்து விட்டதால், அதிர்ச்சியில் இருக்கிறார், அங்காடி நடிகை. ஆனபோதும், இப்படியே விட்டால், தன்னை மொத்தமாக மறந்தே விடுவர் என்பதற்காக, தற்போது, தன் மூன்றாவது சுற்றை அறிமுக இயக்குனர்களின் அரவணைப்போடு அமர்க்களப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார், அம்மணி.

அந்த வகையில், சமீபத்தில், ஐதராபாத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு, 'விசிட்' அடித்த நடிகை, சில புதுமுக இயக்குனர்களை, தான் தங்கியிருந்த, நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து, அன்பான உபசரிப்பு கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அத்துடன், புதிய பட வாய்ப்புகளுக்கான அடித்தளத்தை அழுத்தமாக போட்டுச் சென்றிருக்கிறார்.

'நம்ம கபடி குழுவிலிருந்து விலகிய அஞ்சலி, இப்ப வேறொரு குழுவிற்கு செல்ல போகிறாராம். அதற்காக, அந்த புது குழு ஆட்களுக்கு, தன் வீட்டில் விருந்தளித்து, கொண்டாடி இருக்கிறார்...' என்று பேசிக் கொண்டனர், பழைய குழு தோழியர் இருவர்.

சினி துளிகள்!



* தமிழில் படங்கள் குறைந்து விட்டதால், தன் சொந்த ஊரான ஐதராபாத்திலேயே சொந்த வீடு கட்டி குடியேறியுள்ளார் அஞ்சலி.

* சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்த, வாணி போஜன், சினிமாவில், கேரக்டர் நடிகையாக வேகமாக வளர்ந்து வருகிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us