sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 07, 2020

Google News

PUBLISHED ON : ஜூன் 07, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமன்னா கொடுத்த, 'அட்டாக்!'



தமன்னாவின் மார்க்கெட், 'டல்' அடிப்பதை வைத்து, அவரை, தன் படத்திற்காக தொடர்பு கொண்ட ஒரு தயாரிப்பாளர், அடிமாட்டு சம்பளத்தில் நடிக்க அழைத்துள்ளார். அதைக்கேட்டு கொதித்துப்போன, தமன்னா, 'நடிகையருக்கு படங்கள் குறைந்து விட்டால், சம்பளத்தை குறைக்கும் நீங்கள், 'ஹீரோ'க்களிடம் போய் இப்படி கேட்பீர்களா... அப்படி பட வாய்ப்பு இல்லாத முன்னணி நடிகர் ஒருவரிடம், என்னிடம் கேட்டது போன்று, குறைந்த சம்பளத்தில் நடிக்க, 'கால்ஷீட்' வாங்கி வாருங்கள். அதன்பின், நானும், 'கால்ஷீட்' தருகிறேன்...' என்று, அந்த தயாரிப்பாளரிடம், 'டென்ஷனை' காட்டியுள்ளார். இப்படி, நடிகையரை குறைத்து மதிப்பிட்ட, தயாரிப்பாளர் ஒருவருக்கு, தமன்னா, அதிரடி, 'அட்டாக்' கொடுத்த சேதியறிந்த, நடிகையர் வட்டாரம், அவருக்கு, பாராட்டு தெரிவித்து வருகிறது

— சினிமா பொன்னையா

ரிது வர்மாவின் சமாளிப்பு!



இன்றைக்கு, பெரும்பாலான நடிகையர், உடம்பைக் காட்டுவது தான் கவர்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ரிது வர்மாவோ, 'கவர்ச்சி என்பது, கண்களிலும், சிரிப்பிலும் தான் இருக்கிறது. அதோடு, உடல் கவர்ச்சி என்பது, சில நாட்களிலேயே சலிப்பு தட்டி விடும். 'ஆனால், கண்களால் வெளிப்படுத்தும் கவர்ச்சியானது, காந்தம் போன்றது. அதன் ஈர்ப்புத்தன்மை ஒருநாளும் குறையாது. அதனால் தான், நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு தடை போட்டு வருகிறேன்...' என்கிறார்.கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை!

எலீசா

த்ரிஷா - நயன்தாரா - அடுத்த அவதாரம்!



மலையாள சினிமாவில், ரம்யா நம்பீசன், காவேரி உள்ளிட்ட சில நடிகையர், இயக்குனர் அவதாரம் எடுத்தனர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் இருந்தும், நயன்தாரா - த்ரிஷா போன்ற நடிகையரும், விரைவில், இயக்குனர் ஆவர் என்று தெரிகிறது. காரணம், இவர்கள் இருவரும், தாங்கள் நடிக்கும் படங்களில், உதவி இயக்குனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதோடு, இருவருமே, பெண்களை மையப்படுத்தி, 'ஸ்கிரிப்ட்' எழுதி வரும் நிலையில், சமீபத்தில், கவுதம்மேனன் இயக்கிய, ஒரு குறும் படத்தில் நடித்த, த்ரிஷா, அதில், தானும் சில காட்சிகளை படமாக்கி, தன் தனித்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்தடுத்து முயன்றாலும் ஆடும் நாள் தான் ஆகும்!

— எலீசா

சோனாவின் காதல் ரகசியம்!



தன் சுயசரிதையை எழுதி வரும், கவர்ச்சி நடிகை, சோனா, அதில், தன்னைப் பற்றிய பல ரகசியங்கள் உள்ளதாக சொல்கிறார். 'முக்கியமாக, நான் இரண்டு பேரை காதலித்தேன். ஒருவரை, ஆறு ஆண்டும்; இன்னொருவரை, ஏழு ஆண்டுகளாக காதலித்தேன். 'ஆனால், திருமணம் நெருங்கும் நேரத்தில், அந்த இரண்டு காதலுமே ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து, எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை, சுயசரிதையில் எழுதியிருக்கிறேன். இது, இன்றைய காதலர்களுக்கு, ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும்...' என்கிறார், சோனா. பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!

— எலீசா

கமல், படப்பிடிப்பில், தினசரி பூஜை!



கமல்ஹாசன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், அவர் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பை துவங்கியதில் இருந்தே, நல்ல நாள், நல்ல நேரம் என, எதையும் பின்பற்றாமல் நடத்தி வந்தனர். ஆனால், அந்த படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், சிலர் உயிரிழந்ததை அடுத்து, 'இந்த படத்தை, நல்ல நேரம், கெட்ட நேரம் என, எதையும் பார்க்காமல் படப்பிடிப்பு நடத்தியதே, இத்தனை தடைகளுக்கும் காரணம்...' என்று, படக்குழு கருதுகிறது. அதனால், இந்தியன் - 2 படப்பிடிப்பு, அடுத்தபடியாக, நல்ல நாள், நல்ல நேரம், நல்ல சகுனங்கள் என, அனைத்தும் பார்க்கப்பட்டு, தினமும் பூஜை நடத்திய பிறகே துவங்க உள்ளது.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!



அந்த வாரிசு நடிகையை, பிரபல, 'ஹீரோ'க்கள் கழட்டி விட்டுள்ள நிலையில், கதையின் நாயகியாக நடித்துள்ள படங்களைத்தான் மலை போல் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த படங்களும், 'பைனான்ஸ்' பிரச்னை காரணமாக, திரைக்கு வரமுடியாமல் திணறி வந்தன. அதைப்பார்த்த நடிகை, தயாரிப்பாளரான தன் தந்தைகுலத்திடம் அதுபற்றி சொல்லப்போக, இப்போது, மகளின் சினிமா பயணம், பணப் பிரச்னையால் அடங்கி விடக்கூடாது என்பதற்காக, மேற்படி பட தயாரிப்பாளர்களுக்கு, தானே, 'பைனான்ஸ்' உதவி செய்து, அந்த படங்களை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், நடிகையின் தந்தைகுலம்.

'நம் அலுவலக, 'டெஸ்பாட்ச்' பிரிவுல இருக்கிறாளே, கீர்த்தி, அவ, புதிதாக வீடு வாங்க, தவணை முறையில், பணம் கட்டி வந்தா இல்லையா...'

'ஆமா... அதுக்கென்ன இப்ப...'

'வீடு கட்டி முடிந்த நிலையில், முழு பணத்தையும் கொடுக்க முடியாமல் திணறிட்டு இருந்தா. ஆனா, நல்ல வேளையா, அவ அப்பா, மீதி தொகையை கொடுத்து, அவளை, இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட்டார்...' என்று, பேசிக் கொண்டனர், அலுவலக தோழியர் இருவர்.

சினி துளிகள்!



மிஸ் இந்தியா மற்றும் குட்லக் சக்தி ஆகிய தெலுங்கு படங்களிலும், பென்குயின் என்ற தமிழ்ப்படத்திலும், கதையின் நாயகியாக நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us