PUBLISHED ON : மே 22, 2011

இளையராஜா இசையில் சர்வதேச குறும்படம்!
புஷ்பா தங்கதுரையின் சிறுகதையை மையமாக வைத்து, அம்மா என்ற பெயரில் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார் பிரபாகரன். சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா, முழுக்க முழுக்க பியானோ, வயலின் போன்ற இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். இளையராஜா இசையில், உலக அளவில் வெளியாகும் முதல் குறும்படமும் இதுதான்.
— சினிமா பொன்னையா.
தமிழுக்கு வரும் இந்தி நடிகை!
முன்னாள் உலக அழகி, யுக்தா முகி இந்தியில் நடித்த படம், மேம் சாப். முதன் முதலாக, யுக்தா முகி, படு கிளாமராக நடித்து, இந்தி ரசிகர்களை அதிர வைத்த இப்படம், இப்போது, அரங்கேற்ற நாள் என்ற பெயரில், தமிழ் பேச வருகிறது. 'ஒருவேளை இப்படம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றால், அடுத்து நேரடி தமிழ் படங்களிலும் நடிப்பேன்...' என்கிறார். கூடம் ஒன்று போடும் முன்னே சுத்தி இரண்டு போடும்!
— எலீசா.
பீதியில் ஓவியா?
முத்துக்கு முத்தாக படத்திற்கு பிறகு, புதிய படங்கள் தன்னை முற்றுகையிடும் என்று எதிர்ப்பார்த்திருந்தார் நடிகை ஓவியா. ஆனால், புதிதாக எந்த கம்பெனியும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. மாறாக, தமிழில் ஓவியா நடித்த முதல் படமான, அகராதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக, தான் நடித்திருப்பதால், இருக்கிற தன் மார்க்கெட்டையும் இப்படம் அவுட்டாக்கி விடுமோ என்ற மன பீதியில் இருக்கிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா.
* ஒரு வழியாக, சிங்கம் இந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகி விட்டார் காஜல் அகர்வால். இவரது ஒல்லிகுச்சி தேகம், இந்திவாலாக்களை சுண்டியிழுக்க, மேலும் சில படங்களும் காஜல் பக்கம் சரிந்துள்ளன. இதை அடுத்து, தெலுங்கை குறைத்து, இந்திக்கு தாவும் முடிவில் இருக்கிறார்.
ஹீரோவாகும் இயக்குனர்!
'சினேகாவை இன்னொரு விஜயசாந்தி ஆக்குவேன்...' என வரிந்து கட்டிக் கொண்டு, பவானி படத்தை இயக்கிய வர் கிச்சா. இவருக்கும் இப்போது ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்காக, தற்போது தீவிர சண்டை பயிற்சியும் பெற்று வருபவர், அப்படத்தில் தன்னுடன் டூயட் பாட சினேகாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
—சி.பொ.,
இலியானாவை ரசித்த இளசுகள்!
நண்பன் படத்திற்கு பிறகுதான், தமிழில் தன் மார்க்கெட் சூடு பிடிக்கும் என்று நினைத்திருந்தார் இலியானா. ஆனால், தற்போது திரைக்கு வந்துள்ள ஓம் சக்தி படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனத்தை ரசித்த சில இயக்குனர்கள், தங்கள் படங்களுக்கு இலியானாவை, 'புக்' பண்ணுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் உள்ளனர். மேலும், சில படங்களுக்கு இலியானாவை, 'கமிட்' பண்ண சில இளவட்ட ஹீரோக்களே மறைமுக சிபாரிசும் செய்து வருகின்றனர். இருப்பினும், 'நண்பன் ரிலீசுக்கு பிறகே புதிய படத்தில் நடிப்பேன்...' என்று, வந்த படங்களை நிலுவையில் வைத்துள்ளார். போட்டால் முளைக்கும்; பொழுது விடித்தால் காய்க்கும்!
—எலீசா.
காமெடி நடிகராகும் எஸ்.ஜே.சூர்யா!
சங்கர் இயக்கும் நண்பன் படத்தில், மோசடி பேர்வழியாக, காமெடி கலந்த வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இதன்பிறகு, முழுநேர காமெடி நடிகராகும் முடிவில் இருக்கும் அவர், இப்போதே சில நட்பு வட்டார டைரக்டர்களிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இப்போதைக்கு படம் இயக்கும் ஐடியா இல்லை என்றும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
