தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் பாடலுக்கு கிடைத்த, சர்வதேச அங்கீகாரம்!

விஜயின், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற, 'வாத்தி கம்மிங்' -என்ற பாடல், உலக அளவில் பிரபலமாகி விட்டது. இந்த பாடலை கேட்ட, சர்வதேச பிரபல பாடகர், ஆடம் மோர்லே -என்பவர், வெகுவாக பாராட்டியுள்ளார். அதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவித்துள்ள, விஜய், 'இதே பாராட்டு, படத்திற்கும் கிடைக்கும்...' என்று, மாஸ்டர் படத்தை, வெளிநாடுகளில், வழக்கத்தை விட, அதிகமான தியேட்டர்களில் வெளியிடுமாறு, 'ஆர்டர்' போட்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கவுதமியின், மெகா திட்டம்!

கமலுடன், 13 ஆண்டுகளாக, 'லிவ்விங் டுகெதர்' முறைப்படி வாழ்ந்து வந்த, கவுதமி, தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டார். அதையடுத்து, தன், 21 வயது மகள், சுப்புலட்சுமியை, சினிமாவில் இறக்கி விட, சரியான கம்பெனியை தேடி வருகிறார். அதோடு, கமலின் இரண்டு மகள்களை விடவும், தன் மகள் சுப்புலட்சுமியை, சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக்கி விடவேண்டும் என்றொரு, மெகா திட்டமும் வைத்திருக்கிறார். அதனால், மகளின் அதிரடி, 'ஆல்பங்'களை, தென் மாநில சினிமா உலகில், சுற்றலில் விட்டுள்ளார், கவுதமி.

— எலீசா

பூனம்பாஜ்வாவின், 'பெட்ரூம்' கலாட்டா!

சினிமா மார்க்கெட், ஆட்டம் கண்டபோதும், பூனம் பாஜ்வாவின், 'சோஷியல் மீடியா மார்க்கெட்' எகிறி நிற்கிறது. அந்த அளவுக்கு தன் கொழுக் மொழுக் தேகத்தில், ரசிகர்களை வழுக்கி விழ வைக்கும், 'கிளுகிளு' புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். அதிலும், தற்போது, தன், 'பெட்ரூமில் ஹாயாக' படுத்தபடி, 'ஹாட் போஸ்' கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'லைக்'குகளை அள்ளி வருகிறார். அதேசமயம், 'உன், 'பெட்ரூம்'னா எப்படி வேணும்னாலும், 'போஸ்' கொடுப்பியா...' என்றும், சில ரசிகர்கள், அந்த புகைப்படத்தை, 'டிஸ்லைக்'கும் செய்து வருகின்றனர். ஆழம் அறியாமல் காலை விட்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு!

எலீசா

கோலிவுட்டில் மார்தட்டும், மும்பை புயல்!

ரஜினியுடன், காலா படத்தில் நடித்து விட்டு, தற்போது அஜீத்துடன், வலிமை படத்தில் நடித்து வருகிறார், ஹூமா குரோஷி. 'காஜல்அகர்வால், தமன்னா, ஹன்சிகா போன்ற மும்பை நடிகைகளின் மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால், அடுத்தபடியாக, கோலிவுட்டை கலக்கப்போகிற மும்பை நடிகை நான் தான்...' என்று, மார்தட்டி வருகிறார். அதோடு, 'பாலிவுட்டின் பிரபல நடிகையான எனக்கு, ரசிகர்களை வசியப்படுத்தும் வித்தை தெரியும். அதனால், கூடிய சீக்கிரமே, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் சுண்டியிழுத்து, அத்தனை கோலிவுட் நடிகையரையும், 'ஓவர்டேக்' செய்து காட்டுகிறேன்...' என்றும், கோலிவுட் வீதிகளில், 'தில்'லாக பேசி வருகிறார். பாலிவுட் புயலின் இந்த, 'தில்'லான பேச்சு, தமிழக நடிகையரை அதிர வைத்துள்ளது.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* அந்த நடிகையால் பிரகாசமான, மியூசிக் இயக்குனர் கம் நடிகரின் குடும்பத்திற்குள், ஏகப்பட்ட புகைச்சல் வெடித்துக் கொண்டிருந்தது. அவர்களை பிரிக்க, நடிகரின் வீட்டுக்கார அம்மணி எடுத்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது மேற்படி நடிகரின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளதை அடுத்து, இவரை ஓரங்கட்டி விட்டு, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு நடிகரின் தோளை பற்றிக்கொண்டு விட்டார், நடிகை. விளைவு, நடிகர் வீட்டில் போர்க்களம் மாறி, மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. அதோடு, இப்போது மேற்படி நடிகையின் புதிய அன்பு தோழரான அந்த நடிகரைத்தான் குலதெய்வமாக மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார், நடிகரின் வீட்டு அம்மணி.

'ஏங்க... நம்ம பையன் பிரகாஷும், பக்கத்து வீட்டு ஆனந்தியும், பள்ளியிலிருந்து கல்லுாரி வரை ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே சுத்திட்டு இருந்தாங்களே... இரண்டு பேரும், 'லவ்' பண்ணிட போறாங்களேன்னு பயந்தோமே... ஆனா, இப்ப இருவரும் படிப்பை முடித்ததும், அவங்களுக்கான வழி தனி வழி என்று, பிரிஞ்சு போயிட்டாங்க. எல்லாம் நல்லதுக்கு தான்...' என்று, தன் கணவரிடம் கூறினார், மனைவி.

சினி துளிகள்!

* தலைவி படத்திற்கு இசையமைக்கும், ஜி.வி.பிரகாஷ், ஜெயலலிதா முன்பு பாடிய, 'சூப்பர் ஹிட்' பாடல் ஒன்றை, 'ரீ-மிக்ஸ்' செய்கிறார்.

* மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் கதாநாயகனாக நடிக்கும் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடிகை ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us