sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஜீத் போட்ட தடை!

'சோஷியல் மீடியா'வில், விஜய் ரசிகர்களுடன் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ள, அஜீத் ரசிகர்கள், சமீபத்தில், 'அஜீத்தை, யாரும், பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. 'தல' என்று தான் சொல்ல வேண்டும்...' என்று, ஒரு புதிய நிபந்தனையை பரப்பி வந்தனர். அதோடு, 'சோஷியல் மீடியா'வில், அஜீத் என்று, அவரை குறிப்பிட்டவர்களையும், 'தல என்றே இனிமேல் சொல்ல வேண்டும்...' என்றும், வற்புறுத்தி வந்தனர்.

இந்த சேதி, அஜீத்தின் காதுக்கு சென்றதை அடுத்து, 'இப்படியெல்லாம் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது...' என்று தடை போட்டுள்ளார். மேலும், 'அஜீத் என்று, எனக்கு பெயர் வைத்ததே, மற்றவர்கள், என்னை அந்த பெயரை சொல்லி கூப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்...' என்றும் சொல்லி, சர்ச்சையை ஏற்படுத்திய, தன் ரசிகர்களை, தடுத்து நிறுத்தியுள்ளார்.

— சினிமா பொன்னையா

தாதாவாக உருவெடுக்கும், பிரியாமணி!

தான், 'ரொமான்டிக்' நாயகியாக நடிக்கும் படங்களில் கூட, சற்று மிரட்டலாகத்தான், 'ஹீரோ'களை கொஞ்சுவார், பிரியாமணி. அப்படிப்பட்டவர், தற்போது ஒரு படத்தில், தாதா வேடத்தில் மிரட்டப் போகிறார். இந்த வேடத்திற்காக சற்று எடை கூடி, தன் உடற்கட்டை கெத்தாக மாற்றியுள்ளார். 'இந்த வேடத்திற்காக, இந்திய அளவில் பெண் தாதாக்களாக சில முன்னணி நடிகையர் நடித்துள்ள படங்ளை, 'ரீவைண்ட்' பண்ணி, தயார்படுத்தி வருகிறேன். அதோடு, இந்த படத்திற்கு பிறகு, என்னை, பருத்திவீரன் பிரியாமணி என்று சொல்ல மாட்டார்கள், 'தாதா பிரியாமணி' என்று தான் சொல்வர்...' என்று, சொடக் போட்டு பேசுகிறார், நடிகை. அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது.

எலீசா

ஓவியாவின் காலில், அதிர்ச்சி, 'டாட்டூ!'

பெரும்பாலான நடிகையர், தங்களது உடம்பில் வெளியில் தெரியும்படியும், மற்றவர்கள் காணமுடியாத பகுதிகளிலும், 'டாட்டூ'களை வரைவதை, 'பேஷனா'கவே வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஓவியா, தன் காலில், கொலுசுக்கு பதிலாக, 'பாம்பு டாட்டூ'வை வரைந்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள பாம்பு, தன் வாலை தானே விழுங்குவதுபோல் இடம்பெற்றுள்ளது. இதை, 'சோஷியல் மீடியா'வில் பதிவிட்டுள்ள ஓவியா, 'இது, ஒன்று மட்டுமல்ல, இன்னும் பல அற்புதமான, 'டாட்டூ'களை, என் உடம்பின் பல ரகசிய பகுதிகளில் வரைந்திருக்கிறேன்...' என்று கூறி, ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்திருக்கிறார். அதிலும் இது புதுமை; இதிலும் அது புதுமை!

 எலீசா

ஜெய்யின் அடுத்த அவதாரம்!

கடந்த சில ஆண்டுகளாக, நடிகை அஞ்சலியுடன், காதல், 'கிசுகிசு'வில் சிக்கியிருந்த, ஜெய்யின், 'ஹீரோ' மார்க்கெட், தற்போது, 'டல்'லடித்துள்ளது. அதனால், இசையமைப்பாளராக உருவெடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். முறைப்படி, பியானோ பயிற்சி எடுத்தவர் என்பதோடு, சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார், ஜெய். தற்போது, தன் சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்கள் மூலம், இசையமைப்பாளராக உருவெடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

- சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

டார்லிங் நடிகைக்கு, 'ஹாரர்' படம் கை கொடுத்த அளவுக்கு, 'ரொமான்டிக்' படங்கள், கை கொடுக்கவில்லை. அதனால், 'ஹாரர்' படமெடுக்கும் இயக்குனர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு துாது விட்டு வருகிறார். அதோடு, தான் அமானுஷ்ய கதைக்கு ஏற்ற நடிகை என்பதை, அவர்களுக்கு மீண்டும் உணர்த்த, மேக்கப்மேனின் உதவியுடன், கவர்ச்சிகரமான உடையணிந்து, பேய், 'கெட் - அப்'புக்கு தன்னை மாற்றி, சொல்லாமல் கொள்ளாமல், 'ஹாரர்' பட இயக்குனர்களை திடீர் திடீரென்று சந்தித்து, 'ஷாக்' கொடுத்து வருகிறார், நடிகை. இப்படி அம்மணி கொடுக்கும் கவர்ச்சிப் பேய் அவதாரத்தைப் பார்த்து, இன்ப அதிர்ச்சியடைந்த, 'ஹாரர்' பட இயக்குனர் ஒருவர், தன் புதிய படத்திற்கு, டார்லிங் நடிகையுடன், 'டீல்' பேசி வருகிறார். மெகா பட வாய்ப்பு என்பதால், மேற்படி இயக்குனரை பெங்களூருக்கு வரவைத்து, 'மெகா பார்ட்டி' கொடுத்து, உபசரித்து அனுப்பியிருக்கிறாராம், நடிகை.

'டீ... நம்மளோட ஸ்கூலில் படித்தாளே, நிக்கி என்ற மும்பை பொண்ணு, பள்ளியில் நடத்தும் மாறுவேட போட்டியில் எல்லாம் பேய் வேஷம் போட்டு, முதல் பரிசு வாங்குவாளே... நினைவிருக்கிறதா? ரொம்ப நாள் தொடர்பு விட்டு போச்சு... இப்ப, முகநுால் பக்கத்தில், 'பேய் மாஸ்க்' அணிந்த ஒரு பெண்ணின் படம் பார்த்தேன். யார் என்னவென்று ஆராய்ந்தபோது, நம் நிக்கிதான்னு உறுதியாயிடுச்சு... நம்மளயெல்லாம் பார்க்கணும்ன்னு, போன் நம்பர் கொடுத்து, 'மெசேஜ்' அனுப்பியிருக்கா. ஒருநாள் சந்திப்போமா...' என்று, தோழியர் இருவர் பேசிக் கொண்டனர்.

சினிதுளிகள்!

* 'என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இன்னும் கிடைக்கவில்லை...' என்று, 'பீல்' பண்ணுகிறார், நிக்கி கல்ராணி.



அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us