sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 20, 2020

Google News

PUBLISHED ON : டிச 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரண மாஸ் காட்டும், ரஜினி!

தன் படங்களின், 'ஓப்பனிங்' பாடல் என்றாலே, தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களையும், எழுந்து ஆட வைத்து விடுவார், ரஜினி. அந்த வகையில், 'தற்போது நான் நடித்து வரும், அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ள, 'ஓப்பனிங்' பாடலை, சமீபத்தில், மறைந்த பாடகர் எஸ்.பி.பி., பாடியிருப்பதால், அதை கடைக்கோடி ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்து விடவேண்டும் என்பதற்காக, இதுவரை இல்லாத அளவுக்கு, வரிந்து கட்டி ஆடி, மரண மாஸ் காட்டப் போகிறேன்...' என்கிறார், ரஜினி. அதனால், இந்த பாடலை, அண்ணாத்த படத்தின் அனைத்து, 'பிரமோஷன்'களிலும், முன்னிலைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

— சினிமா பொன்னையா

பூஜா ஹெக்டேவை பூரிக்க வைத்த, ரசிகர்கள்!

'நடிகையரை கடவுளாக போற்றும் ரசிகர்களை, தென்னிந்தியாவை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது. அதோடு, நடிகையரின் அழகை ஆராதிப்பதோடு, கோவில் கட்டியும், கடவுளாக்கி விடுகின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்களை, உலகில் எங்குமே பார்க்க முடியாது. ரசிகர்கள், இப்படி எங்களை உசரத்தில் வைத்து கொண்டாடுவதால் தான், எங்களது மார்க்கெட்டும், சம்பளமும், 'கிடுகிடு'வென உயருகிறது...' என்று சொல்லி பூரிக்கிறார், பூஜா ஹெக்டே. ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல!

எலீசா

யோகிபாபுவுக்கு அடித்த, யோகம்!

சந்தானம், காமெடியனாக இருந்து, பின்னர், 'ஹீரோ'வாக நடித்தபோது, அவருடன், 'டூயட்' பாட, எந்த முன்னணி நடிகையரும் உடன்படவில்லை. ஆனால், தற்போதைய காமெடியனான யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க, பிரபல நடிகையரே ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவை, 'ஒன்சைடாக' காதலிக்கும் வேடத்தில் நடித்து, அனைவரையும் கவர்ந்தார், யோகிபாபு. இதையடுத்து தற்போது, பூச்சாண்டி என்ற படத்தில், அஞ்சலியை, 'ஒன்சைடாக' காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், யோகிபாபுவுடன், அஞ்சலிக்கு, 'ரொமான்ஸ்' பாட்டு கூட உள்ளதாம்.

— சி.பொ.,

50 வயதில் அசத்தும், குஷ்பு!

அண்ணாத்த படத்தில், 28 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினியுடன் நடித்து வரும், குஷ்பு, தன் உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்' ஆகி, அழகை மெருகேற்றியிருக்கிறார். அதையடுத்து, 'மாடர்ன் டிரஸ்' அணிந்து, 'போஸ்' கொடுத்து வரும், குஷ்பு, 'சிலர், என்னைப் பார்த்து, 50 வயதில் இது கொஞ்சம் ஓவரா இருக்கே என்கின்றனர். ஆனால் நான், 50 வயதாகி விட்டதாக நினைக்கவில்லை. 90-களில், எப்படி கனவுக்கன்னியாக இருந்தேனோ, அதே குஷ்புவாகத் தான் இப்போதும் என்னை உணர்கிறேன். அதனால் தான், அதே குஷ்புவாகவே இப்போதும் என்னை வெளிப்படுத்தி வருகிறேன்...' என்கிறார். அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல்!

எலீசா

ராஜ்கிரணின், 'சினிமா பாலிசி!'

இதுவரை, சினிமாவில், 'பாசிட்டீவ்' ஆன வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ள, ராஜ்கிரணை, ரஜினியின், சிவாஜி படத்தில், வில்லனாக நடிக்க அழைத்தபோது, மறுத்தார். சமீபத்திலும், ஒரு படத்தில், 'நெகடீவ்' கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதுகுறித்த காரணம் கேட்டபோது, 'எந்த வேடமாக இருந்தாலும், எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன். வில்லன் வேடம் எனக்கு பிடிக்காது. அப்படி, எனக்கு பிடிக்காத வேடத்தில் நடித்தால், சரியான, 'பர்பாமென்ஸ்' கொடுக்க முடியாது. அதனால் தான், 'நெகடீவ்' கதாபாத்திரத்தில் ஒருநாளும் நடிப்பதில்லை என்ற, 'பாலிசி'யை கடைப்பிடித்து வருகிறேன்...' என்கிறார், ராஜ்கிரண்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* சாவித்திரி வேடமிட்ட அந்த வாரிசு நடிகையின் மார்க்கெட், 'டல்' அடித்தபோதும், படக்கூலி விவகாரத்தில் எகிறி அடிக்கிறார். குறிப்பாக, உச்ச நடிகரின் படத்தில் தங்கையாக நடித்தபோதும், அவருடன் தான் நடிப்பதை முன் வைத்தே, எடக்கு மடக்காக சம்பளம் கேட்கிறார். இதனால், அம்மணியின் மார்க்கெட்டை கருத்தில் வைத்து, அரை கோடியில், 'அக்ரிமென்ட்' போட்டு அள்ளி வந்து விடலாம் என்ற நப்பாசையில் சுற்றி வந்த தயாரிப்பாளர்கள், அவர், கோடிகளை சொல்லியடித்ததால், சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

* 'நம் இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்தாளே, கீர்த்தி, அவளுக்கு, சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்தது, ஆளே மாறிட்டா... வெளியூரில் நடக்க இருக்கும் கச்சேரிக்கு பாட, அவளை அழைக்கப் போனார், நம் குழுத் தலைவர். 'கச்சேரியில் வந்து பாடணும்னா, எக்கச்சக்கமா பணம் தரணும்'ன்னு கேட்டிருக்கு... 'கட்டுப்படி ஆகாதும்மா'ன்னு, அப்படியே திரும்பி வந்துட்டார்.

* 'அதுக்கு பாட சொல்லிக் கொடுத்து, நம்ம குழுவிலேயே பாட வைத்து, வளர்த்து விட்டவருக்கே, அந்த பொண்ணு தண்ணி காட்டிருச்சு...' என்று, இசைக்குழுவை சேர்ந்த இருவர் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

தன் மார்க்கெட்டை நிலை நிறுத்துவதற்காக, மீண்டும், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்கு, கல்லெறிந்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us