
வில்லன் நடிகரை கடவுளாக்கிய, தெலுங்கானா மக்கள்!
தமிழில், பல படங்களில் வில்லனாக நடித்துள்ள, பாலிவுட் நடிகர் சோனுசூட்டிற்கு, தெலுங்கானா மக்கள், கோவில் கட்டி, வழிபட்டு வருகின்றனர். காரணம், 'கொரோனா' தொற்றால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, பண உதவி-, வேலை வாய்ப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்க, ஆறு மாடி கட்டடம் வழங்கியது போன்ற எண்ணற்ற உதவிகளை வாரி வழங்கினார். அதனால் தான், அவருக்கு சிலை வைத்து, கோவில் கட்டியுள்ளனர். 'கவர்ச்சி நடிகையருக்கு மட்டுமே கோவில் கட்டுவதை விட, இந்த, 'ரியல் ஹீரோ'வுக்கு கோவில் கட்டி வழிபடுவது, எவ்வளவோ மேல்...' என்கின்றனர், தெலுங்கானா மக்கள்.
— சினிமா பொன்னையா
ரசிகர்களை வாய்பிளக்க வைத்த, சமந்தா!
நக்சலைட்டாக தான் நடித்து வரும், 'வெப்சீரிஸில்' சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு, முன்னழகை அப்பட்டமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார், சமந்தா. அந்த வீடியோ வைரலானதை அடுத்து, 'என்ன கொடுமை சார் இது... சமந்தாவா இப்படி...' -என்று, ரசிக கோடிகள் வாய்பிளந்து நிற்கின்றனர். இந்த அதிர்ச்சி அலை, சமந்தாவை, 'அட்டாக்' செய்ததை அடுத்து, 'வெப்சீரிஸிற்கு, 'சென்சார்' கெடுபிடி இல்லை அல்லவா... அதனால் தான், கொஞ்சம், 'பிரீ'யாக நடித்து விட்டேன். அது கொஞ்சம் 'ஓவராகி' விட்டது. ஆனாலும், ஆபாசம் இல்லை. உங்கள் ரசனைக்கு, நல்ல தீனியாக இருப்பதாகவே கருதுகிறேன். 'என்ஜாய்' பண்ணுங்கள்...' என்று, ரசிகர்களுக்கு, 'கேஷுவலாக' பதில் கொடுத்துள்ளார். ஆசையும், நாசமும் அடுத்தடுத்து வரும்!
— எலீசா
அப்பாவுடன் மோதும், துருவ் விக்ரம்!
'சீயான்' விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடித்த முதல் படமே தோல்வியடைந்த போதிலும், அவர் துவண்டு போகவில்லை. அப்பா கொடுத்த, 'எனர்ஜி' காரணமாக, அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். குறிப்பாக, விக்ரம் பாணியில், படத்திற்கு படம், தன், உடல் கட்டை மாற்றி நடிக்க திட்டமிட்டுள்ளார், துருவ் விக்ரம். தன் இரண்டாவது படத்தில், அப்பா விக்ரமே, தனக்கு வில்லனாக நடிப்பதால், அவருடன் மோதி, பலப்பரீட்சை பார்ப்பதற்காக, தற்போது, தன் உடல்கட்டை கட்டுமஸ்தாக மாற்ற, கடுமையான பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
— சி.பொ.,
அப்பா, 'ரூட்'டில் பயணிக்கும், சாந்தனு!
திரைக்கதை மன்னன் என்றழைக்கப்படும், கே.பாக்யராஜின் மகனான சாந்தனு, அப்பாவின் பாணியில் இருந்து மாறுபட்டுத்தான் நடித்து வந்தார். ஆனால், அந்த, 'ரூட்' அவருக்கு, 'ஒர்க் - அவுட்' ஆகவில்லை. அதனால், அப்பா நடித்தது போன்ற கதைகள் மற்றும் 'கெட் - அப்'பில், தானும் பயணிக்க முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக, முருங்கைக்காய் சிப்ஸ் -என்றொரு படத்தில் நடித்து வரும் சாந்தனு, சில குடும்ப கசமுசா காட்சிகள் மற்றும் விவகாரமான, 'கிளுகிளு' வசனங்கள் என்று பேசி, அப்பாவின், 'ரூட்'டில் நடைபோடத் துவங்கியிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்ட, 'மாஜி' கதாநாயகியான, சினேகமான நடிகை, மறுபடியும் கலைச் சேவைக்கு தயாராகி விட்ட சேதியை, கோலிவுட்டில் கசிய விட்டார். ஆனால், இப்போது அம்மணி, 'ஆன்ட்டி'யாகி இருப்பார் என்று, அவரை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. இந்நிலையில், உடல்கட்டை, 'ஸ்லிம்' செய்து, 'இப்போதைய இளவட்ட நடிகையருக்கே சவால் விடுவேன்...' என்று, தெறிக்க விடும் சில அதிரடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையடுத்து, சினேகமான நடிகையின் புகைப்படங்களை பார்த்து அசந்து போன, சில இளவட்ட இயக்குனர்கள், அம்மணியை படங்களுக்கு ஒப்பந்தம் பண்ணும் சாக்கில், அவருடன், நட்பு வளர்த்து வருகின்றனர்.
'நம் கல்லுாரியில் படிச்ச, பழைய மாணவி சினேகாவை ஞாபகம் இருக்கா, உனக்கு... கல்லுாரி கலை விழாவுக்கு ஆண்டுதோறும் தவறாம வந்து, புது வரவு மாணவியரோடு அசத்தல் நடனம் ஆடி, விழாவையே சிறப்பாக்குவாளே...'
'ஆமாம், இப்ப ஞாபகம் வந்துருச்சு... அவங்களுக்கு என்ன?'
'திருமணமாகி, வெளியூருக்கு போனாங்க... அங்கேயே ஒரு கல்லுாரியில் வேலை பார்த்திருக்காங்க... இப்ப அவர் கணவருக்கு இதே ஊருக்கு, 'டிரான்ஸ்பர்' கிடைத்துள்ளது. இவங்களும், தான் படிச்ச கல்லுாரியிலேயே வேலைக்கு வர ஆசைப்பட்டாங்க...
'ஆனா, கல்லுாரி நிர்வாகி, நிராகரிச்சுட்டார். இங்கு பணிபுரியும் தனக்கு பழக்கமான புரபொசர்களை அணுகி, சிபாரிசு செய்ய சொல்லியிருக்கார். இந்த, 'ஜொள்' பார்ட்டிகளும், உதவற மாதிரி போக்குக் காட்டி, வலை வீசி வருகின்றனர்...' என்றான், நண்பன்.
சினி துளிகள்!
* சில ஆண்டுகளுக்கு பின், கேரக்டர் நடிகையாக, தன் இரண்டாவது, 'ரவுண்டை' துவங்கியிருக்கிறார், சினேகா.
அவ்ளோதான்!

