sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 28, 2021

Google News

PUBLISHED ON : பிப் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரிக்கு அப்பாவாக, விஜய்சேதுபதி!

காமெடியன் புரோட்டா சூரி, 'ஹீரோ'வாக நடிப்பதை, இப்போது வரை, பலரால் ஏற்க முடியவில்லை. இந்த நேரத்தில், அவருக்கு அப்பாவாக, அதே படத்தில், விஜய்சேதுபதி நடிப்பதாக தற்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே தான் தயாரித்து நடித்த, ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில், அப்பா வேடத்தில் நடித்தார், விஜய்சேதுபதி. 'மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, இப்படி, அப்பா அளவுக்கு விஜய்சேதுபதி இறங்கி விட்டாரே... அவரைப் பொறுத்தவரை, ஒரு சவாலாக நினைத்தாலும், வியாபார ரீதியாக, நம் படங்கள் பாதிக்கப்படுமோ...' என்று, விஜய்சேதுபதியை, 'ஹீரோ'வாக வைத்து, படம் தயாரித்து வருவோர், 'ஷாக்' ஆகி நிற்கின்றனர்.

— சினிமா பொன்னையா

சாயிஷா கொடுத்த, அதிர்ச்சி!

ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா, 60 வயது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிப்பதாக செய்தி வெளியானபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

'23 வயது நடிகை, அத்தனை வயதான நடிகருடன் நடிக்க வேண்டுமா...' என்று விமர்சித்தனர். ஆனாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாத சாயிஷா, தற்போது, 'பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் படத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்கப் போகிறேன்...' என்று, இன்னொரு அதிர்ச்சி செய்தியையும் வெளியிட்டுள்ளார்.போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டி தெய்வம் வந்து ஆடியதாம்!

— எலீசா

நயன்தாரா, புதிய சலுகை அறிவிப்பு!

கதையின் நாயகியாகி விட்ட நயன்தாரா, முன்வரிசை, 'ஹீரோ'களின் படங்களுக்கு மட்டுமே குட்டை பாவாடை நடிகையாக, 'கிரீன் சிக்னல்' கொடுத்து வருகிறார். இப்போது, முன்னணி நடிகர்கள், தன்னை ஓரங்கட்டுவதால், 'இனிமேல் இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களாக இருந்தாலும், கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால், தாராளம் காட்டி நடிப்பேன்...' என்று, புதிய சலுகையை அறிவித்துள்ளார். இதனால், நயன்தாராவின் ரசிகர்களான பல இளவட்ட, 'ஹீரோ'கள், அவரை தங்கள் படங்களுக்கு, ஒப்பந்தம் பண்ணுமாறு தயாரிப்பாளர்களை நச்சரிக்கத் துவங்கியிருக்கின்றனர். அடி சக்கை, பொடி மட்டை!

எலீசா

விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த, நடிகையர்!

முன்பெல்லாம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க, முட்டி மோதுவர், கதாநாயகியர். சமீப காலமாக, விஜய் படங்களில் நயன்தாரா போன்ற முன்னணி கதாநாயகியருக்கே முக்கியத்தும் கொடுக்கப்படாத நிலையில், சில இரண்டாம் தட்டு, 'ஹீரோயினி'யரை ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்தனர். இந்நிலையில், தற்போது, விஜய் நடிக்க இருக்கும், 65வது படத்தில், 'இரண்டாவது நாயகி வேடம்...' என்று சொல்லி, சில இளவட்ட, 'ஹீரோயினி'யரை, நடிக்க அழைத்தனர். ஆனால், அவர்களோ, 'செகண்ட் ஹீரோயினி என்று சொல்லி, இரண்டு காட்சிகளில் தான் நடிக்க வைப்பீர்கள். விஜய் படம் என்பதற்காக, இருக்கிற மார்க்கெட்டையும் கெடுத்துக் கொள்ள தயாராக இல்லை...' என்று சொல்லி, சிக்காமல் ஓட்டம் பிடித்து விட்டனர். இதனால், விஜய் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

தன் இளைய மகளின் ஆபாச படங்களை, ஒரு பிரபல நடிகையின் மகன் இணையத்தில் வெளியிட்டதை அடுத்து, அதிர்ச்சியடைந்தார், உலக நடிகர். அதையடுத்து, 'எத்தனை உயிர் நண்பர்களாக இருந்தாலும், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாறும் பழக்கம் வேண்டாம். 'பாய் பிரண்டு'களின் நட்பை, ஒரு எல்லையோடு வைத்துக்கொள்ளுங்கள்...' என்று, இரண்டு மகள்களுக்கும், 'அட்வைஸ்' கொடுத்துள்ளார். இதனால், இத்தனை காலமும், 'பாய் பிரண்டு'களுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்த, உலக நடிகரின் வாரிசுகள், சமீபகாலமாக, ஜோடிக்கிளிகள் இல்லாமலேயே வலம் வருகின்றனர்.

'கமலநாதனின் எதிர் வீட்டுல ஒரு ரவுடி பொம்பள இருக்கு பாரு... அவளுக்கு தான் பெரிய ரதின்னு நினைப்பு. எப்பப்பாரு, கமலநாதன் வீட்டையே நோட்டம் விட்டுட்டிருப்பா... பத்தாததுக்கு, அவளோட பையன் வேறு, எதிர் வீட்டு பொண்ணு அக்சராவை வளைத்துப் போட பார்த்தான்.

'அந்தப் பொண்ணும், பிரண்டுன்னு நினைச்சு இவனோட பழகிச்சு... இவன் என்ன செஞ்சான் தெரியுமா, அந்த பெண்ணின், படத்தை, 'தில்லாலங்கடி' வேலை செஞ்சு, சமூக வலைதளத்துல போட்டுட்டான். இது தெரிஞ்ச கமலநாதன், 'இனி, அவனோட பழக வேண்டாம்'ன்னு தடை போட்டுட்டார்...'

- இப்படி, அந்த தெருவாசிகளான இரு பெண்கள் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

* மும்பையில் வசித்தாலும், அப்பா கமல்ஹாசனின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின்போது, அவரது மகள்களான, ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகிய இருவரும், சென்னை வந்து விடுகின்றனர்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us