தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மே 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனைவியை ஓரங்கட்டும், விஜய் ஆன்டனி!

ஒரு காலத்தில், விஜய் ஆன்டனி நடிக்கும் படங்களின் கதைகளை, அவர் மனைவி பாத்திமா தான் முடிவு செய்து வந்தார். அதன் காரணமாகவே, 'ஹீரோயினி'களுடன், கணவர் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளுக்கு, கதை கேட்கும்போதே, 'சென்சார்' போட்டு வந்தார். அதனால் தான், விஜய் ஆன்டனி படங்களில், 'ரொமான்ஸ்' காட்சிகள் உப்புசப்பில்லாமல் இருந்தது. இதை, அபிமானிகள் சிலர், நாசூக்காக சொன்னதை அடுத்து, இப்போது, மனைவியை ஓரங்கட்டி, தானே கதைகள் கேட்கிறார், விஜய் ஆன்டனி. அதோடு, 'ரொமான்ஸ்' காட்சிகளை, துாக்கலாக மட்டுமின்றி, இளவட்டங்களுக்கு வெறியேற்றும் வகையில் சூடு பறக்க வைக்கவும் கேட்டுள்ளார். இப்படி, 'சிக்னல்' கொடுத்து விட்டதால், படுக்கையறை மற்றும் குளியல் காட்சிகள் என, இளசுகளின், 'பேவரிட்' காட்சிகளை அவரது படங்களில் அதிகமாக வைத்து, 'கிளுகிளு'ப்பு மசாலா பூச, தயாராகி விட்டனர், இயக்குனர்கள்.

— சினிமா பொன்னையா

பிரசாந்துக்கு புதிய நம்பிக்கை கொடுத்த, நடிகை!

'என்னுடன் எத்தனையோ நடிகையர், 'டூயட்' பாடிய போதும், அதில், சிம்ரன் முக்கியமான நடிகை...' என்று சொல்லும் பிரசாந்த், தற்போது, தன் புதிய படத்தில் மீண்டும் சிம்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளதால், புதிய உற்சாகத்தில் காணப்படுகிறார். காரணம் கேட்டால், 'முன்பு, சிம்ரனுடன் நான் நடித்த மூன்று படங்களுமே, 'சூப்பர் ஹிட்' ஆகின. அந்த அளவுக்கு, அவருக்கும், எனக்கும், ஒரு, 'ஹிட் சென்டிமென்ட்' உள்ளது. அதனால் தான், மீண்டும், சிம்ரன் என்னுடன் இணைந்ததை அடுத்து, ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது...' என்கிறார், பிரசாந்த்.

சி.பொ.,

ஸ்ரீதேவி மகளை கலாய்த்த, ரசிகர்கள்!

ஹிந்தி படங்களில் நடித்து வரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். காண்போரின் கண்கள் கூசும் அளவுக்கு, ஆபாச உடையணிந்த புகைப்படங்களை வாரி வழங்கி வருகிறார். அதைப் பார்க்கும் சில குறும்புக்கார ரசிகர்களோ, ஆசை தீர ரசிப்பதோடு, 'இப்படி, அப்பட்டமாக காண்பிப்பதற்கு பதிலாக, 'பிட்' படங்களில் நடிக்க போகலாமே...' என்று, ஜாடை மாடையாக, ஜான்வி கபூருக்கு, 'கமென்ட்' கொடுத்துள்ளனர். ஆனபோதும், 'இந்த கிண்டலுக்கெல்லாம் நான் அசறும் ஆளில்லை...' என்பது போல், தொடர்ந்து, 'பிகினி' மற்றும் கண்ணாடி உடையணிந்த கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு, 'சோஷியல் மீடியா'வை, அதகளப்படுத்தி வருகிறார். இன்னமும் கொடுக்கிறேன், பந்தயம் என்ன என்பது போல்!

எலீசா

விஜய் பக்கம் திரும்பும், ரஜினி கதைகள்!

ரஜினிக்கு, வயது 71. உடல் தளர்ந்துள்ளதால், முன்போல், அதிரடியான கதைகளில் நடிக்க முடியாது என்று, தவிர்த்து வருகிறார். அதன் காரணமாக, ரஜினியை முன்பு மாதிரி, 'எனர்ஜிடிக்'கான கதைகளில் நடிக்க வைக்க முடியாது என்று நினைக்கும் இயக்குனர்கள், அந்த கதைகளை விஜயிடம் சொல்லி வருகின்றனர். குறிப்பாக, ரஜினியை வைத்து, 'சூப்பர் ஹிட்' படங்களை கொடுத்த, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் போன்ற இயக்குனர்களே, தாங்கள் தயார் செய்த கதையை, விஜயிடம் சொல்லி, 'கால்ஷீட்' கேட்டு வருவதாக, பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதேபோல், ரஜினியை மனதில் கொண்டு, கதை பண்ணி வைத்திருந்த இளவட்ட இயக்குனர்களும், அந்த கதைகளுடன், விஜயை முற்றுகையிட்டு வருகின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பீட்சா நடிகரின் மார்க்கெட், உச்சத்தில் இருக்கிறது. அவர் தொட்டதெல்லாம், 'ஹிட்' ஆகி வருவதால், இதுவரை ஒரு படத்திற்கு, இத்தனை கோடி என, சம்பளம் பேசி வந்தவர், இப்போது, 'ஒரு நாளைக்கு, ஒரு கோடி...' என்று, தடாலடியாக அறிவித்து விட்டார். இதுவரை, 'பீட்சா நடிகர் தான் தமிழ் சினிமாவில், சீப் அண்ட் பெஸ்ட் ஹீரோ...' என்று, அவரை முற்றுகையிட்டு வந்த சில தயாரிப்பாளர்கள், 'இப்போது, அவர் செம, 'காஸ்ட்லி'யான, 'ஹீரோ'வாகி விட்டார்...' என்று, தங்களது பட்ஜெட்டிற்குள் அடங்கும் வேறு நடிகர்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம், பீட்சா நடிகரோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'காற்றடிக்கிற நேரம்தானே துாற்றிக்கொள்ள முடியும். அதனால், இப்போது என், 'ரேட்' இது தான். முடிஞ்சா வாங்க; இல்லேன்னா, போய்க்கிட்டே இருங்க...' என்று, எகிறிப் பேசி வருகிறார்.

'நம்ம தெரு முனையில், சின்னதா மளிகை கடை வைத்திருந்த, விஜய் சேதுபதி, இப்ப, மெயின் ரோடுல, பெரியதா, 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' ஒன்றை திறந்திருக்கிறான்.

'எந்த பொருள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம, எடுத்து தர்றான். அதுமட்டுமல்லாமல், 'பாக்கெட்' போட்டு அலங்காரமா கொடுப்பதோடு, விலை கூடுதலாகவும் விற்கிறான்.

'ஏன் இப்படின்னு கேட்டா, 'வேறு எங்குமே கிடைக்காத ஏராளமான ஐட்டங்களை கடையில் குவித்து வைத்திருக்கிறேன். மேலும், சுத்தமாகவும், தரமானதாகவும், 'பாக்கெட்' போட்டு விற்கிறேன். தரமானதையும், சுத்தமானதையும் வாங்க, கட்டுப்படி ஆகும் என்று நினைப்பவர்கள், என் கடையில் வாங்கலாம்; முடியாதவர்களை நான் வற்புறுத்த மாட்டேன்...' என்று, உறுதியாக சொல்கிறான்...' என, இரு குடும்பத் தலைவர்கள் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

* 'கொரோனா' தொற்று காரணமாக, ரஜினி, கமல், நயன்தாரா போன்றவர்களை, தனி விமானத்தில் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து சென்றதை அடுத்து, இப்போது மற்ற நடிகர் - நடிகையரும், 'தனி விமானம் கொடுத்தால்தான், 'ஸ்பாட்டு'க்கு வருவோம்...' என்று, அடம் பிடிக்கத் தொடங்கி விட்டனர்.

* உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் நடித்த, விஜய் சேதுபதியின் கொடூரமான வில்லன் வேடத்திற்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us