தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓ.டி.டி., தளத்தில், வடிவேலு!

கடந்த, 2011ல், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், வடிவேலு நடித்த, இம்சை அரசன் 24ம் புலிகேசி படம், பிரச்னை காரணமாக, கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து, 10 ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு, நடையாய் நடந்தது தான் மிச்சம். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால், தற்போது, ஓ.டி.டி., தளத்தில் வெளியாக உள்ள, கவ்பாய் படத்தில், நடிக்க தயாராகி விட்டார். இதுவரை, சினிமாவில் காமெடியனாக வலம் வந்த வடிவேலு, இந்த படத்தில், குணசித்திர வேடத்தில் நடிக்கிறார்.

சினிமா பொன்னையா

தமன்னா, 'ரூட்'டை பிடிக்கும், ராசி கண்ணா!

தமன்னா, தன்னுடன் நடிக்கும், 'ஹீரோ'களின் மனைவியருடன் நட்பு வளர்த்து, அவர்களது கணவர்களின் படங்களில் நடிக்க சிபாரிசு செய்ய வைப்பார். அதே, 'டெக்னிக்'கை, இப்போது, ராசி கண்ணாவும், 'பாலோ' செய்கிறார். மேலும், தமன்னா விட்ட இடத்தை பிடிப்பதற்காக, அவரைப் போலவே, அட மழையில் நனைந்தபடி அதிரடி ஆட்டம் போட தயாராக இருப்பதாக, 'ரொமான்டிக்' இயக்குனர்களுக்கு, துாது விட்டுள்ளார், ராசி கண்ணா. பிடி யானையைக் கொண்டு, களிற்று யானையை வசப்படுத்துவது போல்!

எலீசா

அதிர வைத்த, கோவை நடிகையர்!

'கவர்ச்சி என்றாலே எங்களுக்கு அலர்ஜி...' என்று, தமிழக நடிகையர் சொல்வதால் தான், கோலிவுட் இயக்குனர்கள், இவர்களை கண்டுகொள்வதில்லை. இதை புரிந்து கொண்ட கோயம்புத்துார் நடிகைகளான, அதுல்யா ரவி, ஆத்மிகா ஆகிய இருவரும், 'டூ - பீஸ்' நடிகையராக கோதாவில் இறங்கி விட்டனர். குறிப்பாக, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு கூட, அம்மணிகள், 'டபுள் ஓ.கே.,' சொல்வதால், கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அண்டை மாநில நடிகையர் பீதியடைந்துள்ளனர். 'தமிழக நடிகையரெல்லாம் இப்படி துக்கடா நடிகையராகி விட்டால், நமக்கு இங்கு என்ன வேலை இருக்கப் போகிறது...' என்று, எதிர்காலத்தை நினைத்து, கடும் கவலையில் உறைந்திருக்கின்றனர்.உனக்கும் பெப்பே; உங்க அப்பனுக்கும் பெப்பே!

எலீசா

விஷால் போடும், 'கண்டிஷன்!'

'என் படத்தில் எல்லாமே, நான் தான். என்னை வைத்து தான் வியாபாரம்...' என்று, சில படங்களின் வெற்றியின்போது தடாலடியாக கூறினார், விஷால். ஆனால், தொடர்ச்சியாக சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, இப்போது, பிரபல, கதாநாயகிகளை நடிக்க வைத்தாவது, தன் படங்களை ஓட வைத்து விட திட்டம் தீட்டி வருகிறார்.

'பாடல் காட்சிகளில், 'டூ - பீஸ்' உடைகளில் நடிக்க வேண்டும்; 'லிப்லாக்' காட்சிகளில் நடிக்க தயங்கக் கூடாது...' என்றெல்லாம், 'கண்டிஷன்' போட்டுத்தான், மேல்தட்டு நடிகையரை ஒப்பந்தம் செய்கிறார். ஆக, 'ஆக் ஷன்' குதிரையான விஷாலும், இப்போது, கவர்ச்சி குதிரைகளின் முதுகில் சவாரி செய்யத் துவங்கியிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

சண்டக்கோழியுடன், 'கிசுகிசு'க்களில் சிக்கிய அந்த நாட்டாமை வாரிசு, தற்போது, டோலிவுட்டில் கரை ஒதுங்கி இருக்கிறார். சென்ற இடத்திலும், சில இளசுகளுடன் நெருக்கமாக பழகி வரும் நடிகை, அடிக்கடி, 'டேட்டிங்' செல்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகையின் தந்தைகுலத்திற்கு, மகளின் திரைமறைவு சேட்டைகளை, அங்குள்ள அபிமானிகள் சிலர் சொன்னபோது, அதை, அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், 'டேட்டிங் செல்வதெல்லாம் ஒரு விஷயமா... அப்படி செல்லும்போது தான், நடிகர்களுடன் ஒரு பரஸ்பரம் ஏற்படும். சினிமாவில், நடிகையருடன் நான் செல்லாத டேட்டிங்கா?' என்று, எதிர் கேள்வி கேட்டு, புகார் சொன்னவர்களின் வாயை அடைத்து விட்டார்.

'இரண்டாவது மாடியில் உள்ள பிளாட்டில் வசிக்கும் குடும்பம் பற்றி தீர விசாரிச்சீங்களா...'

'ஏன்?'

'அந்த வீட்டு பெண்ணான வரலட்சுமி, மொட்டை மாடியில உடற்பயிற்சி செய்வதற்கு போறாள். உடற்பயிற்சி செய்தோமா, வந்தோமான்னு இல்லாம, அக்கம்பக்கத்து மாடியில் உடற்பயிற்சி செய்யும், இளவட்ட பசங்களோடு சேர்ந்துக்கிட்டு கொட்டம் அடிக்கிறா. அவளோடு, 'கடலை' போடுவதற்காகவே அலையும் பசங்க, அவள் மாடிக்கு எப்ப வருவான்னு காத்துட்டு நிக்கிறாங்க.

'மொட்டை மாடில, 'வாக்கிங்' போகலாம்ன்னு நினைச்சா, முடியறதில்ல... அவ அப்பாக்கிட்ட முறையிடப் போனா, 'பசங்களோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. ஆம்பள பசங்க, 'ஜிம்'முக்கு போய் முறையாக பயிற்சி எடுத்துட்டு வந்திருக்காங்க. அத, என் பொண்ணுக்கு கற்று தர்றாங்க. இதைப்போய் பெரிசுப்படுத்தாதீங்க'ன்னு சொல்றாருப்பா... இது சம்பந்தமா, 'பிளாட் அசோசியேஷன்'ல புகார் கொடுக்கப் போறேன்...' என, தன் நண்பரிடம் புலம்பினார், வயதான பிளாட்வாசி ஒருவர்.

சினி துளிகள்!

* 'ஹீரோயினியாக மட்டும் தான் நடிப்பேன் என்று, என்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல், எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிப்பதையே விரும்புகிறேன்...' என்கிறார், வரலட்சுமி.

* ராக்கெட்ரி படத்தை இயக்கி நடித்துள்ள, மாதவன், 'இந்த படம், வெற்றி பெற்றால், என்னை பாதித்த கதைகளை அவ்வப்போது இயக்கி, நடிப்பேன்...' என்கிறார்.

* ஹன்சிகா நடிக்கும், 105 மினிட்ஸ் என்ற தெலுங்கு படத்தில், அவர் மட்டுமே நடிக்க, மொத்த படமும், ஒரே, 'ஷாட்'டில், படமாக உள்ளது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us