தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலிவுட், 'ஹீரோ'களை மிரட்டும், பிரபாஸ்!

இந்திய அளவில், ஷங்கர் இயக்கிய, எந்திரன் படம் தான், அதிகப்படியான பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்பட்டதை முறியடிக்கும் வகையில், பாகுபலி படத்தை பிரமாண்டமாக எடுத்தார், ராஜமவுலி. இந்நிலையில், பாகுபலி நாயகனான, பிரபாஸ், இந்திய அளவில் பிரபலமானதோடு அவரது படங்கள் அனைத்துமே, பான் இந்தியா படங்களாக தயாராகி வருகிறது. அதோடு, அவருக்கான, 'காஸ்டியூம்'களுக்காகவும் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். தற்போது, பிரபாஸ் நடித்து வரும் படத்தில், அவர் அணியும், 'விக்'கிற்காக, 4 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கின்றனர். 'இந்திய சினிமா வரலாற்றில், ஒரு நடிகரின், 'விக்'கிற்கு, இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வது இதுவே முதல்முறை...' என்கின்றனர். ஆக, நாங்களே இந்திய அளவில், 'மெகா ஹீரோ'கள் என்று, மார்தட்டி வரும், பாலிவுட்டின், அமீர்கான், சல்மான்கான் போன்றவர் களையே மிரள விட்டுள்ளார், பிரபாஸ்.

— சினிமா பொன்னையா

ரசிகர்களிடம், மருந்து கேட்கும், விக்ரம்!

தற்போதைய தமிழ் நடிகர்களில், கமலுக்குப் பின், அதிகப்படியாக உடலை வருத்தி, நடிக்கக் கூடியவர், விக்ரம். இந்நிலையில் கோப்ரா படத்தில் எட்டு வித்தியாசமான, 'கெட் - அப்'களில் நடித்திருக்கும் விக்ரம், 'நீண்ட நாளைக்கு பின், என் நடிப்பு பசிக்கு, இந்த படத்தில், சரியான தீனி கிடைத்துள்ளது. இதனால், ஒவ்வொரு, 'கெட் - அப்'களுக்கு தகுந்தபடி உடம்பு, மனசு இரண்டையும் வருத்தி, மாறுபட்ட, 'பர்பாமென்சை' கொடுத்துள்ளேன். இதற்காக நிறைய காயம் பட்டிருக்கிறேன். தியேட்டரில் ரசிகர்கள் கொடுக்கப் போகும் கை தட்டல் தான், அதற்கான அருமருந்தாக இருக்கும்...' என்கிறார்.

சி.பொ.,

நாய் குட்டிக்கு, ஜாதி பெயரை வைத்த, நடிகை!

பெரும்பாலான நடிகையர், செல்ல பிராணியாக நாய் வளர்ப்பது வழக்கம். அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யாமேனன், தான் வளர்க்கும் நாய் குட்டிக்கு, காபி மேனன் என்று, பெயர் வைத்துள்ளார். அதாவது, தன் பெயரில் உள்ள மேனனை அந்த நாயின் பெயருடன் இணைத்து, அதன் மீதும், தன் ஜாதியை திணித்து விட்டார்.

இத்தகவலை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டதை அடுத்து, 'நீங்கள், உங்கள் பெயருடன் மேனன் என்ற ஜாதியை இணைத்திருப்பதே தவறு. இதில் நாய் குட்டிக்கும், அந்த ஜாதியை திணித்தது நியாயமா?' என்று, 'நெட்டிசன்'கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால், ஐஸ்வர்யா மேனனுக்கும், ரசிகர்களுக்குமிடையே, 'சோஷியல் மீடியா'வில், அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொடாக் கண்டனும் விடா கண்டனும் கூடினாற் போல.

—எலீசா

தொகுப்பாளர்களாக மாறிய, கதாநாயகர்கள்!

நடிகர் கமல்ஹாசன், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை தொகுத்து வழங்கியதை அடுத்து, தற்போது, விஜய் சேதுபதி, 'மாஸ்டர் செப்' என்றொரு சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர்களைத் தொடர்ந்து, நடிகர் அர்ஜுன், சர்வதேச அளவில் பிரபலமான, 'சர்வைவர்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தயாராகி வருகிறார். இதேபோல், நடிகை தமன்னாவும், தெலுங்கு சேனலில் வெளியாகி வரும், சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகி இருக்கிறார். 'டிவி' சேனல்களையே நம்பியிருக்கும் தொகுப்பாளர்களுக்கு, இவர்கள் வேட்டு வைக்கத் துவங்கி விட்டனர்.

சினிமா பொன்னையா

கறுப்புபூனை!

* ஸ்பைடர் நடிகையை, சினிமாவில், 'கிளாமர்' ஆக நடிக்க சொன்னால், ஏகப்பட்ட கெடுபிடி செய்வார். அப்படிபட்டவர், சில ஆங்கில பத்திரிகைகளின் அட்டை படத்திற்கு, படு ஆபாசமாக, 'போஸ்' கொடுக்கிறார். குறிப்பாக, மேல் சட்டை போட்டாலும், முன்பக்க பட்டனை போடாமல், செம, 'செக்ஸி'யாக, 'போஸ்' கொடுக்கிறார். இதனால், 'பப்ளிசிட்டிக்காக, பட்டனை மாட்டாத நீங்கள், கோடிகளை வாங்கி நடிக்கும் படங்களுக்கு, பட்டனை மாட்டிக் கொண்டால் எப்படி...' என்று, சில மெகா இயக்குனர்கள், ஸ்பைடர் நடிகைக்கு, கிடுக்கிப்பிடி போட்டனர். விளைவு, அவர்களை பகைத்துக் கொண்டால், மெகா பட வாய்ப்புகள் பறி போய்விடும் என்பதால், தன் புதிய படமொன்றின் பாடல் காட்சிகளில், ஹாலிவுட் நடிகையருக்கு இணையாக, பட்டன் போடாத மேலாடை அணிந்து, பக்கா ஆபாச நடிகையாக கோதாவில் குதிக்க தயாராகி விட்டார்.

இரு தோழியர் பேசிக் கொண்டது...

'நம்மோடு கல்லுாரியில் படித்த, ரகுல்ப்ரீத்சிங்கை ஞாபகமிருக்கா... அவ அப்பா, ஹரியானாவில் வைர வியாபாரி என்று சொல்வாளே...'

'ஆமாம்... அவளுக்கென்ன?'

'நாம டிகிரி வாங்கினதும் வெவ்வேறு நிறுவனத்துக்கு வேலைக்கு போய் விட்டோம்.

'எம்.பி.ஏ., படிச்சுட்டு யாராவது வேறு வேலைக்கு போவாங்களா... சொந்த பிசினஸ்தான் செய்யப் போகிறேன்...' என்று சொன்னாள். அதேபோல், தமிழகத்தில், மூன்று மாடி, 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' ஒன்றை, 'லீசு'க்கு எடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் விற்கும், 'ஷாப்பிங் மால்' ஆரம்பித்தாள்.

'சாதாரண மிதியடி முதல், எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் வரை அத்தனையும் இங்கு வாங்க முடியும். எக்கச்சக்க லாபம்.

'இதைப் பார்த்த, 'பில்டிங்' உரிமையாளர், அவளிடமிருந்து கூடுதல் பணத்தை வாடகையாக பெற, 'லீசை கேன்சல்' செய்து,'பில்டிங்'கை காலி செய்யச் சொல்லி விட்டார்.

'பிசினஸ் நன்றாக போய் கொண்டிருக்கும் வேளையில், இதென்ன இம்சை என்று, அவர் கேட்ட தொகையை தர ஒப்புக்கொண்டிருக்கிறாள். இதை, என்னிடம் சொல்லிச் சொல்லி, புலம்புகிறாள்!'

சினி துளிகள்!

* 'இந்தியன் - 2 படத்தில், கமலுடன் நடிப்பதால், சினிமாவில், ஒரு பெரிய மைல் கல்லை கடந்து விட்டது போன்று உணர்கிறேன்...' என்கிறார், ரகுல்பிரீத் சிங்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us