தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழைய பாதைக்கு திரும்பும், விக்ரம்!

சேது, பிதாமகன், காசி என, வித்தியாசமான, 'கெட் - அப்'புகளில் நடித்து, 'சூப்பர் ஹிட்' படங்களை கொடுத்து வந்த, விக்ரம், 'மாஸ் ஹீரோ' நிலைக்கு வந்தபோது, 'நார்மல் ஹிட்' படம் கொடுப்பதற்கே அல்லாடுகிறார். இதனால், மீண்டும் தன் ஆரம்ப கால படங்களைப் போன்று, மாறுபட்ட கதைக்களம் மற்றும் 'கெட் - அப்'புகளில் நடிக்க தயாராகி விட்டார். அதோடு, மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிப்பதற்கும், டபுள் ஓ.கே., சொல்லி வரும் விக்ரம், தன் புதிய படமொன்றில், மீண்டும், பிதாமகன் போன்ற, 'கெட் - அப்'பில் திறமை காட்டியிருக்கிறார்.

சினிமா பொன்னையா

ஐஸ் வைத்த, கீர்த்தி சுரேஷ்!

தமிழில் உள்ள, 'ஹீரோ'கள் அனைவருமே, கீர்த்தி சுரேஷை கழட்டிவிட்டுள்ள நிலையில், தெலுங்கில், மகேஷ்பாபு மட்டுமே கை கொடுத்துள்ளார். அதனால், அவரை குஷிபடுத்த வேண்டும் என்பதற்காக, தான் அளிக்கும் பேட்டிகளில், மகேஷ்பாபுவின் நடிப்பு குறித்து, 'ஆகா ஓஹோ'வென்று புகழ்ந்து தள்ளி வருகிறார். 'நான், இதுவரை நடித்த, 'ஹீரோ'களில் இப்படியொரு பக்கா ஜென்டில்மேன் நடிகரை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு பெருமைக்குரிய ஒரு மனிதராக இருக்கிறார்...' என்று கூறியுள்ள, கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபுவின் மனைவி நர்மதாவிடத்தில், 'மகேஷ்பாபுவிற்கு நிறைய திருஷ்டி விழுந்திருக்கிறது. அதனால், தினமும் துாங்குவதற்கு முன், சுத்தி போடுங்கள் மேடம்...' என்றும், அன்பான கோரிக்கை வைத்திருக்கிறார். காரணம் இன்றி காரியம் இல்லை!

— எலீசா

வில்லங்க வேடம் கேட்கும், ஐஸ்வர்யா லட்சுமி!

பெரும்பாலும் நடிகையர், தங்களை கவர்ச்சிகரமாக வெளிப்படுத்தி தான், 'போட்டோ ஷூட்' நடத்துவர். ஆனால், தனுஷ், விஷால் படங்களில் நடித்துள்ள, மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியோ, தான் சிகரெட் பிடிப்பது போன்று, 'போட்டோ ஷூட்' நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது குறித்து, அதிர்ச்சியுடன் தன்னிடம் விசாரித்த திரையுலகினரிடம், 'நடித்த படங்கள் வெற்றி பெறாததால், இனிமேல் குடும்ப குத்துவிளக்கு, 'இமேஜ்' தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டேன். அதனால் தான், அடுத்தபடியாக விவகாரமான, வில்லங்கமான வேடங்களில் நடிக்கவும் நான் தயாராக இருப்பதையே, இப்படி வெளிப்படுத்தி உள்ளேன்...' என்று தெரிவித்துள்ளார். அன்று கண்டதை அடுப்பில் போட்டு, ஆக்கின பானையைத் தோளில் போட்டு திரிந்தது போல!

— எலீசா

64 வயதில்

'ரிஸ்க்' எடுத்த, பிரபு!

நடிகர் பிரபுவைப் பொறுத்தவரை, சினிமாவில் நடிக்கத் துவங்கியதில் இருந்தே, 'வெயிட்' போட்டு தான் இருக்கிறார். சில நடிகர்களைப் போன்று, கதாபாத்திரங்களுக்காக அவர் ஒருபோதும் தன் உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்' ஆனதில்லை. ஆனால், முதல் முறையாக, மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்திற்காக, சுமார், 20 கிலோ வரை, எடை குறைத்து, 'ஸ்லிம்'மான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார், பிரபு. தற்போது, 'சோஷியல் மீடியா'வில் வைரலாகி வரும் அவரது புதிய புகைப்படங்களைப் பார்த்து, அனைவருமே வியக்கின்றனர். 'இளவட்டமாக இருக்கும்போதெல்லாம் எடுக்காத, 'ரிஸ்க்'கை தன், 64 வயதில் எடுத்திருக்கிறாரே...' என்கின்றனர்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

தளபதியின் நான்கெழுத்து படத்தில் நடித்த, கேரளத்து மாள்ஸ் நடிகை, இப்போது தான் நடிக்கும் படத்தில் அதிகப்படியான சூடு காட்டி வருகிறார். அந்த வகையில், இயக்குனர் எள் என்று சொன்னால் அம்மணி எண்ணெயாக நிற்கிறார். அதைப்பார்த்து இதுவரை அம்மணியை ஏறெடுத்தே பார்க்காமல் இருந்து வந்த சில, 'கமர்ஷியல்' பட இயக்குனர்கள், மாள்ஸ் நடிகையை மடக்கிப்போட தயாராகினர். விளைவு, இதுதான் நமக்கான நேரம் என்பதை புரிந்து கொண்ட நடிகை, 'பிகினி, டூ - பீஸ்' என எல்லாவற்றுக்கும் தயார் என்று சொல்லி, 'அடவான்ஸ்'களை வாரி சுருட்டி வருகிறார். ஹீரோயினாக நடித்தவரே, இப்படி தாறுமாறாக இறங்கியடிக்க தயாராகி விட்டதால், கவர்ச்சியை வைத்து காலம் தள்ளி வரும் சில கோலிவுட் நடிகையர், 'இந்த மாள்ஸ் நடிகை நம்முடைய மார்க்கெட்டை சாய்த்து விடுவாரோ...' என்று, பீதியடைந்துள்ளனர்.

நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள வந்த, தோழியர் இருவர் பேசிக் கொண்டது...

'ஹோட்டல் ரிசப்ஷனில் அரைகுறை டிரஸ்சில் அமர்ந்திருக்கும் பெண், மாளவிகா தானே... 'டிவி' சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பரிசு வாங்கினாளே!'

'அவளேதான். இப்ப இந்த ஹோட்டலில் வேலை செய்கிறாள்; எக்கச்சக்க சம்பளம். இங்கு தங்க வரும், 'டூரிஸ்ட்'களுக்கு, ஊரை சுற்றிக்காட்ட இவள்தான் போவாளாம்.

'வெவ்வேறு சுற்றுலா தலங்களில், 'டூ - பீஸ், பிகினி' போன்ற கவர்ச்சி உடைகளை அணிந்து எடுத்த புகைப்படங்களை முகநுாலில் போட்டிருக்கிறாள்; பார்த்திருக்கிறேன். இவளது இந்த அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோர், தொழில் ரீதியான, 'கைடு'கள் தான்.

'என் உறவினர் பையன், இங்கு சூப்பர்வைசராக வேலை செய்கிறான். அவன் சொன்னது தான் இது...' என்றாள், தோழி.

சினி துளிகள்!

* விஜயின், மாஸ்டர் படத்தில் நடித்த, மாளவிகா மோகனன், தற்போது, தனுஷுடன், மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us