தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சவால் விடும், நயன்தாரா!

அஜீத்துடன் பில்லா படத்தில், 'பிகினி' உடையணிந்து நடித்து, தமிழக ரசிகர்களுக்கு போதை ஏற்றிய, நயன்தாரா, ஒரு கட்டத்தில், 'இனிமேல் தெறமை மட்டுமே காட்டுவேன், கவர்ச்சி காட்ட மாட்டேன்...' என்று, செக்போஸ்ட் வைத்தார்.

தற்போது, ஷாரூக்கானுடன் பாலிவுட் படத்தில் நடிப்பதை அடுத்து, மீண்டும், 'ஹாட் பீஸாக' உருவெடுத்துள்ளார். ஒரு ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்கு, அசத்தலான, 'போஸ்' கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதுபற்றி கேட்டவர்களிடம், 'பாலிவுட், 'என்ட்ரி'க்கு ஒரு சின்ன டிரெய்லர் தான் இது...' என்று சொல்லி கண்ணடித்துள்ளார், நயன். அந்த அளவுக்கு பாலிவுட்டில் பிரவேசிக்கும் முதல் படத்திலேயே தான் கவர்ச்சிப் போட்டிக்கு தயார் என்று அங்குள்ள அம்மணியருக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் தன் நிலைபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

ரகுல் பிரீத் சிங், 'செக்ஸி ரவுண்டு!'

பர்பாமென்ஸ் நடிகையாக வேண்டும் என்பதுதான், ரகுல் பிரீத் சிங்கின் எண்ணமாக உள்ளது. ஆனால், இயக்குனர்களோ, 'உன் உடல் அசைவுகளும், பார்வையும் இளசுகளை பக்கென்று பத்திக் கொள்வதாகவே உள்ளது. அதனால், 'செக்ஸி' கதாநாயகியாக நடிப்பது தான் சரியாக இருக்கும்...' என்று அவரை கசமுசா நடிகை ஆக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். அதன் காரணமாகவே, பர்பாமென்ஸ் நடிகை ஆசைகளை தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து, 'செக்ஸி' நாயகியாக மெகா ரவுண்டு வர தயாராகி விட்டார். தனக்கு உகந்த ஊணும், பிறர்க்கு உகந்த கோலமும்!

எலீசா

'கிசுகிசு' எழுத சொன்ன, அனுபமா!

மலையாள நடிகையான, அனுபமா பரமேஸ்வரனுக்கு, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, அதர்வாவுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், தன் மீடியா நண்பர்களிடம், 'சினிமாவில், 'ஓவர் நைட்'டில் ஒரு நடிகை பிரபலமாக வேண்டுமென்றால், நடிகர்களுடன் ஏதாவது, 'கிசுகிசு'வில் சிக்க வேண்டும்.அப்படி யாராவது நடிகர்களுடன் என்னைப் பற்றி, 'கிசுகிசு'க்களை கொளுத்திப் போடுங்கள். அதை வைத்து நான் பிழைத்துக் கொள்கிறேன்...' என்று, வேண்டுகோள் வைத்துள்ளார். அதையடுத்து, அனுபமாவை எந்த நடிகருடன் கோர்த்து விடலாம் என்று, 'ரூம்' போட்டு யோசிக்கத் துவங்கியுள்ளனர், சில மீடியா அன்பர்கள். அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது!

எலீசா

இயக்குனர்களிடம் அடம் பிடிக்கும், தனுஷ்!

விஜய் நடிக்கும் படங்களில், 'ஆக் ஷன், ரொமான்ஸ்' என்று கதையோட்டம் இருந்தாலும், ரசிகர்களுக்கு, 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, காமெடி காட்சிகள் அவசியம் தேவை என்று, இயக்குனர்களை கேட்டுக் கொள்வார். அதேபோல் இப்போது, தனுஷும் மாறத் துவங்கியிருக்கிறார். காமெடி காட்சிகள் வைத்தால் கதையை பாதிக்கும் என்று இயக்குனர்கள் சொன்னால்கூட, 'இடையிடையே காமெடி காட்சிகள் இருந்தால், கதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சில நேரங்களில் கதை நம்மை ஏமாற்றினாலும், காமெடி, படத்தை காப்பாற்றி விடும்...' என்று சொல்லி வலுக்கட்டாயமாக காமெடி காட்சிகளை வைக்க சொல்பவர், யோகிபாபு தான் தன்னுடன் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று, அவரது பெயரை பரிந்துரை செய்கிறார்.

சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* இயக்குனர் ஷங்கர், தன் மகள் அதிதியை, விருமன் படத்தில் அறிமுகம் செய்திருப்பதைத் தொடர்ந்து, மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராஜீவ்மேனனும், தன் மகள் சரஸ்வதியை, ஒரு தமிழ்ப்படத்தில் அறிமுகம் செய்கிறார்.

* விஜயதேவரகொண்டா நடித்து வரும், லிகர் என்ற படத்தில், உலக புகழ்பெற்ற குத்து சண்டை வீரர், மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் இந்திய படம் இது.

* தெலுங்கில் நானி நடிப்பில் அனிருத் இசையமைத்த, ஜெர்ஸி படம் ஹிந்தியில், 'ரீ - மேக்' ஆகிறது. அந்த படத்திற்கும், அனிருத்தே இசையமைத்து, பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

* தலைவி படத்தில், எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடித்த பிறகு, 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு, தயாரிப்பாளர்களை ஓட விடுகிறார், அரவிந்த்சாமி.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us