தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 26, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ரஷ்யாவில் தமிழ் பட விழா!

ஆகஸ்ட் மாதம், 15, 16, 17 ஆகிய தேதிகளில், ரஷ்யாவிலுள்ள ஊக்லிச் நகரில், தமிழ்த் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில், அங்காடித் தெரு, மைனா, மதராசப்பட்டினம், சிங்கம், நந்தலாலா, பையா, தென்மேற்கு பருவக்காற்று, எந்திரன், களவாணி, விண்ணைத் தாண்டி வருவாயா உட்பட, 11 படங்கள் பங்கேற்கின்றன. இதில், வெற்றி பெறும் படங்களுக்கு, ரஷ்ய அரசின் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

— சினிமா பொன்னையா.

*பில்லா-2வில் இடம்பிடிக்க தீவிரமாக முயற்சி செய்தார் லட்சுமி ராய்; ஆனால், அவரது மார்க்கெட் டவுண் ஆகி இருப்பதை காரணம் காட்டி, நிராகரித்து விட்டனர்.

*வழக்கு எண், 18/9 என்ற டைட்டிலில், ஒரு படம் இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், இதுவும் ஏற்கனவே நான் இயக்கிய, காதல் படம் போன்ற சப்ஜெக்ட்டுதான் என் கிறார்.

*செல்வராகவன் இயக்கத்தில், இரண்டாம் உலகம் படத்தில் நடித்துள்ள தனுஷ், அதில், இரண்டு பாடல்கள் தான் பாடியிருப்பதை பெருமையாக சொல்கிறார்.

*அங்காடித் தெரு அஞ்சலி, தீவிர சிவன் பக்தை. அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், தன் தாய்குலத்துடன் தவறாமல் சிவன் கோவிலுக்கு சென்று வருகிறார். அதுமட்டுமின்றி, வெளியூர் படப்பிடிப்புகளுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களுக்கும், 'விசிட்' அடிக் கிறார்.

*சினிமாவில் நடிகராவதற்கு முன், நடிகர் மன்சூர் அலிகானிடம் கார் டிரைவராக வேலை செய்தவர், 'மைனா' பட நாயகன் விதார்த். இதற்கு கைம்மாறாக, தான் நடிக்கும் படங்களில், மன்சூர் அலிகானுக்கும் சிபாரிசு செய்கிறார்.

*விஜய்யின், காவலன் படத்தில், இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் மித்ரா குரியன். இவர், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.

*பிரபல இயக்குனர்களான மணிரத்னம், ப்ரியதர்ஷன் ஆகிய இருவரும், தங்களது உதவியாளர்கள் இயக்கும் பட விழாக்களுக்கு அவுட்டோரில் இருந்தாலும், தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.

*நடிகை தேவயானி சென்னை அசோக் நகரில், தன் மகள் இனியாவின் பெயரில், ஒரு, 'எடிட்டிங் ஸ்டூடியோ' நடத்தி வருகிறார்; இதில், சின்னத்திரை சம்பந்தப்பட்ட, 'எடிட்டிங்' வேலை நடக்கிறது. இதேபோல், இயக்குனர் பேரரசும் தன் அலுவலகத்தில், ஒரு, 'எடிட்டிங் ஸ்டூடியோ' வைத்துள்ளார்; இதில், சினிமா, 'எடிட்டிங்' மட்டுமே நடக்கிறது.

*ஓம் சக்தி படத்தின் மூலம், தமிழக ரசிகர்களை சந்தித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து நேரடி தமிழ் படத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

*கருப்பர் நகரமும் கை கொடுக்காவிட்டால், தன் தாய்மொழியான கன்னடத்திலேயே முழு நேர நடிகையாகி விடப் போவதாக கூறுகிறார், வெளுத்துக்கட்டு அருந்ததி.

*நண்பா படத்தின் மூலம் தமிழுக்கு இறக்குமதியாகிறார் ஆந்திர நடிகை நிகிஷா. இவர் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கிய, கொமரம் புலி படத்தில் நடித்தவர்.

*கள்ளச் சிரிப்பழகா என்ற படத்தில், அரசியல்வாதி ரோலில் நடிக்கிறார், அப்பட நாயகியான மேக்னாவின் தந்தை சுந்தர்ராஜ்.

*மலையாளத்தில் நிரந்தர நடிகையாக, தொடர்ந்து கதை கேட்டு வரும் நமீதா, பிரபல ஹீரோக்களின் படங்களில் கேரக்டர் வேடம் கிடைத்தாலும் மறுப்பதில்லை.

*படங்களை தயாரிக்க சுவாமி பிலிம்ஸ் என்ற பெயரில், ஒரு புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்துள்ளார் இளையராஜா.

*ஐசரி வேலனின் பேரன் விகாஸ், நடிகர் ஸ்ரீமன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

*பாசிமணி கோர்க்கப்பட்ட கணக்கிடலங்கா வெள்ளி காதணிகள் வாங்கி வைத்துள்ளார் ப்ரியாமணி.

*ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா படத்தின் இரண்டாம் பாகம், மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது.

சின்னத்திரைக்கு வரும் கவுதம்மேனன்!

கே.பாலசந்தர் பாணியில் டைரக்டர் கவுதம் மேனனுக்கும், 'டிவி'த் தொடர் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவுக்கு இணையான பிரமாண்டத்துடன் தொடர் இயக்கும் முயற்சி நடப்பதாக சொல்லும் கவுதம், அதற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை நாடியுள்ளார். ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ரஹ்மான், கவுதம் மேனனின் தொடருக்கு இசையமைப்பது சம்பந்தமாக இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us