தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 26, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை, கூட்டத்தில் காந்திஜி பேசும் போது,ஷேம நிதிக்கு, பண முடிப்பு வழங்கப்பட்டது. பின், 'நான் நகைகளையும் பெற்றுக் கொள்வேன்; பெண்கள், தங்கள் மோதிரம், வளையல்களைக் கூடக் கொடுக்கலாம். இதற்காக, ஆண்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை; அது, பெண்களின் உரிமை. நகைகளை தானம் அளிக்க, நீங்கள் என்னிடம் வர வேண்டிய அவசியமில்லை; நானே, உங்களிடம் வந்து பெற்றுக் கொள்கிறேன்...' என்றார் அவர்.

அன்று காந்திஜியிடம், ஏராளமான பெண்கள் பணமும், நகைகளும் அளித்தனர். கூட்ட நெருக்கடியில் சில, அங்குமிங்கும் சிதறி விட்டன. அருகில் இருந்த மகாவீர் தியாகி என்பவரிடம், 'உங்கள் எதிரில் உள்ள தரையை, நன்கு கூட்டிப் பெருக்கி, கீழே சிதறிவிட்ட பணத்தையும், நகைகளையும் ஒன்று சேர்த்து, கொண்டு வர வேண்டும்; தெரிந்ததா?' என்றார்.

பந்தலை விட்டு கூட்டம் சென்றதும், அங்கு சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளையும், இரண்டு அணா, நான்கு அணா, எட்டு அணா நாணயங்களையும், சிறு, சிறு வளையல்கள், நகைகள் ஆகியவற்றையும் பொறுக்கி எடுத்து, காந்திஜியிடம் கொடுக்கச் சொல்லி விட்டார் தியாகி.

இரவு பிரார்த்தனை கூட்டத்திற்கு பின், தியாகியை வரவழைத்தார் காந்திஜி. தன்னைப் பாராட்ட அழைக்கிறார் என எண்ணி, உற்சாகத்துடன் வந்த தியாகியிடம், 'நான் உன்னிடம், எதிரில் உள்ள ஜமுக்காளத்தைத் தட்டி, பணம் முழுவதையும் ஒன்று சேர்க்க வேண்டும் என கூறியிருந்தேன். நீ வேறு யாரிடமோ பொறுப்பை ஒப்படைத்து விட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், எல்லா பொருட்களும் வந்து சேரவில்லை...' என்று சொன்னார் காந்திஜி.

'அல்ல பாபுஜி... நானே பந்தல் முழுவதையும் கூட்டிப் பெருக்கிப் பார்த்தேன்...' எனக் கூறினார் தியாகி.

காந்திஜி தீர்மானமாக, 'அப்படிச் சொல்லாதே... நீயே முன்னின்று பார்க்கவில்லை; நானே பார்த்திருக்க வேண்டும். உன்னை நம்பி, விட்டு விட்டேன்...' என்று கோபித்துக் கொண்டார்.

பின், ஒரு தங்கக் கம்மலை எடுத்து, தியாகியிடம் காட்டி, 'இதுவே, நீ அங்கு இல்லை என்பதற்கு சான்று. ஒரு பெண், ஒற்றைக் கம்மலைக் கொடுத்து விட்டு, மற்றொன்றைக் காதில் அணிந்திருப்பாளா? இதன் ஜோடி எங்கே? நீ நன்றாகத் தேடியிருந்தால் கிடைத்திருக்கும். அந்த கம்மல் கிடைக்கும் வரை, அங்கே கூட்டிப் பெருக்கிப் பார்... போ...' என, சொன்னார்.

இரவு ஆகி விட்டது... பதறியடித்து, பந்தலுக்குச் சென்றார் தியாகி. காஸ் விளக்கையும், டார்ச் லைட்டையும் எடுத்துக் கொண்டு, வேறு சிலரையும் துணைக்கு அழைத்து போனார். பந்தலில் கிடந்த ஜமுக்காளம், விரிப்புகளை உதறினார். அதிர்ஷ்டவசமாக, அந்த கம்மல் கிடைத்தது. அத்துடன், கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும், சில சில்லரை நாணயங்களும் கிடைத்தன.

காந்திஜியின் பார்வை எவ்வளவு தீர்க்கமானது!

— 'அண்ணல் காந்தி' நூலிலிருந்து...

***

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us