தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போலீசின் பெருமைகளை சொல்லும், சூரி!

காமெடியனாக நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கி வரும், விடுதலை படத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். 'இப்படத்தில், காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிள்கள் சந்திக்கும் பிரச்னைகளை அழுத்தமாக பதிவு செய்யக் கூடியதாக என் கதாபாத்திரம் இருக்கும். பெற்றவர்கள் கூட பிள்ளைகளை அடிப்பதற்கு உரிமை இல்லை.

'ஆனால், போலீசுக்கு கையில் பிரம்பு தந்துள்ளது, ஜனநாயகம். பெற்றோரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் போலீஸ்...' என்று, போலீசின் பெருமைகளை பட்டியலிடுகிறார், சூரி.

சினிமா பொன்னையா

ஐஸ்வர்யா ராஜேஷ், புது, 'ரூட்!'

கனா படத்திற்கு பிறகு, டோலிவுட்டிலும் கால் பதிக்க சென்ற, ஐஸ்வர்யா ராஜேஷை அங்குள்ள, 'கமர்ஷியல்' இயக்குனர்கள் தோலுரிக்க வரிந்து கட்டியதால், மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார். மேலும், தமிழில், நயன்தாரா போன்று, தானும் கதையின் நாயகியாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, சீரியசாக கதை கேட்டு வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

கதை கேட்கும் போதே, அதில் பலதரப்பட்ட மாற்றங்களை சொல்லி, தன் சார்பிலும் சில காட்சிகளை வைக்குமாறு ஐடியா கொடுப்பவர், ஒரு கட்டத்தில், 'நயன்தாரா பாணியில், எனக்கும் கதை தயார் பண்ணுங்கள். அடுத்த நயன்தாரா ஆக வேண்டும்...' என்று, 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்' கொடுக்கிறார்.

எலீசா

'கியூட்'டாக மாறும், அனுஷ்கா!

சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த, அனுஷ்கா, பிரபாசுடன் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனால், தன் உடல்கட்டை, 'ஸ்லிம்' ஆக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருபவர், 'இந்த படத்தில், பிரபாசுடன் கெமிஸ்ட்ரியை பெரிய அளவில், 'ஒர்க் - அவுட்' பண்ணி, விட்ட இடத்தை கைப்பற்ற தயாராகி வருகிறேன்...' என்கிறார்.

எலீசா

சினிமா வாசனை இல்லாத, சாய் பல்லவி!

தமிழகத்தைச் சேர்ந்த நடிகையான, சாய் பல்லவி, தற்போது, தெலுங்கில், 'டாப்'பில் இருக்கிறார். தென் மாநில சினிமாவில், உச்ச நடிகையாகி விட்டபோதும், திரைக்குப் பின்னால் மிக சாதாரணமான பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சொந்த ஊரில், தன் தங்கையுடன் ஆறு, குளங்களில் நீராடி மகிழும், சாய் பல்லவி, தனக்கு சொந்தமான வயல்வெளிகளிலும் வேலை செய்கிறார். இதுகுறித்த புகைப்படங்களை சினிமா நண்பர்களின், 'வாட்ஸ் ஆப்'புக்கு அனுப்பி, திரைக்கு பின்னால் தான் ரொம்ப சாதாரணமான, எளிமையான பெண் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

எலீசா

'நோ என்ட்ரி' போட்ட, விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின், 'ஹீரோ' மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்தபோது, திடீரென்று, ரஜினி, விஜய் மற்றும் கமல் என, முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க துவங்கினார். அப்படி வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்றபோதும், அவர், 'ஹீரோ'வாக நடித்தவை அடுத்தடுத்து அதலபாதாளத்தில் விழுந்து விட்டன.

இதன் காரணமாக தற்போது, விஜய் சேதுபதியின், 'ஹீரோ' மார்க்கெட் இறங்குமுகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதனால், வில்லனாக நடிப்பது தான், 'ஹீரோ' மார்க்கெட்டுக்கு உலை வைத்து விட்டதாக நினைக்கும் விஜய் சேதுபதி, 'இனிமேல், தொடர்ந்து, 'ஹீரோ' ஆக மட்டுமே நடிக்கப் போகிறேன். அதனால், வில்லன் வேடத்தில் நடிக்க கேட்கும் இயக்குனர்களுக்கு, 'நோ என்ட்ரி' போர்டை காட்டுவேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிக்கும், 62வது படத்தில், தமிழகம் முழுக்க உணவு நிறுவனங்கள் நடத்துபவராக நடிக்கிறார், அஜித்குமார்.

* கிடப்பில் போடப்பட்ட, தலைவன் இருக்கிறான் படத்தை, மீண்டும் துாசு தட்டுகிறார், கமலஹாசன். தமிழ், ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர், சைப் அலி கானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us