தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் சேதுபதியின், திடீர் முடிவு!

ஆரம்பத்தில் கதையின் நாயகனாக நடித்து பல, 'ஹிட்' படங்களை கொடுத்தவர், விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில், விஜய், அஜித் போன்று, 'மாஸ் ஹீரோ' ஆக வேண்டும் என்று, தன்னை மையமாக வைத்து கதைகளை உருவாக்கி நடித்தார். ஆனால், அப்படி அவர் நடித்த பல படங்கள், அதிர்ச்சி தோல்விகளை கொடுத்தன.

இதையடுத்து, வெற்றிமாறனின், விடுதலை படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விஜய் சேதுபதி, 'இனிமேல் ஆரம்ப காலத்தில் நடித்தது போன்று, மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கப் போகிறேன்.

'அதனால், ஏற்கனவே நான் கேட்டு வைத்துள்ள, 'மாஸ் ஹீரோ' கதைகளை ஓரம் கட்டி விட்டு, எதார்த்தமான மற்றும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளுடன் வாருங்கள். மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்...' என்று, இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சினிமா பொன்னையா

இளவட்ட, 'ஹீரோ'களுக்கு நுால் விடும், நயன்தாரா!

திருமணத்திற்கு முன், இளவட்ட, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து வந்த நயன்தாரா, இப்போது, மேல் தட்டு, 'ஹீரோ'கள் தன்னை ஏறக்கட்டி விட்டதால், இளவட்ட, 'ஹீரோ'களுக்கு, 'கிரீன் சிக்னல்' கொடுக்க துவங்கி இருக்கிறார்.

அந்த வகையில், லவ் டுடே படத்தை இயக்கி, நடித்த, பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்கும் ஒரு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார், நயன்தாரா. இந்த படத்தை அவரது கணவரான, விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார். தன்னைவிட, 10 வயது குறைவான, 'ஹீரோ'வுடன், 'டூயட்' பாட தயாராகி விட்டார், நயன்தாரா.

எலீசா

மகனுக்காக வரிந்து கட்டும், பாரதிராஜா!

தன் மகன் மனோஜை வைத்து, தாஜ்மஹால் என்ற படத்தை இயக்கினார், இயக்குனர் பாரதிராஜா. அதன்பின், சில படங்களில் நடித்த மனோஜுக்கு, எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை.

இதனால், கமலை வைத்து, தன் தந்தை பாரதிராஜா இயக்கிய, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக கூறி சில, 'ஹீரோ'களிடம், 'கால்ஷீட்' கேட்டு வந்தார். ஆனால், அவரை நம்பி, 'மெகா ஹீரோ'கள் யாரும், 'கால்ஷீட்' கொடுக்காததால், அந்த முயற்சியை கிடப்பில் போட்டார்.

இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும், தாய் மெய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார், மனோஜ் பாரதிராஜா. அதோடு இந்த படத்தில், தன் தந்தை பாரதிராஜாவையே, 'லீடு ரோலில்' நடிக்க வைக்கிறார்.

அந்த வகையில், தன் மகனை நம்பி யாரும், 'கால்ஷீட்' கொடுக்காத நிலையில், தற்போது அவர் இயக்கும், 'சென்டிமென்ட்' ஆன கதையில், தானே வரிந்து கட்டி களமிறங்குகிறார், பாரதிராஜா. 80 வயதில், மகனுக்காக, பாரதிராஜா எடுக்கும் இந்த முயற்சி, கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

புயல் காமெடியன் நடித்து, சமீபத்தில் வெளியான படம், அட்டர் பிளாப் ஆன போதும், ஓரிரு இயக்குனர்கள், மீண்டும் அவரை வைத்து, காமெடி கதைகளை படமாக்க திட்டமிட்டனர். ஆனால், இந்த நேரம் பார்த்து, புரோட்டா காமெடியன் தொடர்ந்து, 'ஹீரோ'வாக நடிப்பதற்கு முடிவெடுத்து விட்டதால், புயல் காமெடியனிடம் கதை சொல்லிய இரண்டு இயக்குனர்கள், அதே கதையை, புரோட்டா காமெடியனிடம் சொல்லி, ஓ.கே., பண்ணி விட்டனர்.

இதனால், செம கடுப்பான புயல் காமெடியன், புரோட்டாவுக்கு கால் பண்ணி, 'என்னிடம் மோதினால் பீல்டிலேயே இல்லாமல் செய்து விடுவேன்...' என்று, செம மிரட்டு மிரட்டினாராம்.

ஆனபோதும் புரோட்டா அசராமல், 'உங்கள் ரவுண்டு முடிஞ்சு போச்சு. இது, என்னோட ரவுண்டு. அதனால், எங்கிட்ட வம்பு வேண்டாம்...' என்று பதிலடி கொடுக்க, இரண்டு காமெடியன்களுக்கிடையே, தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது.

தளபதி நடிகருடன் மீண்டும் இணைந்திருக்கும், மூனுஷா நடிகை, அதற்கு முன்பு வரை, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களின் படங்களில் நடிப்பதற்கே, நடையாய் நடந்து வந்தார். ஆனால், தளபதி படம் கிடைத்ததும், அவர்களை அப்படியே கத்தரித்து விட்டு விட்டார். போன் செய்தாலும், பேசாமல் தவிர்க்கிறார்.

இதன் காரணமாக, அவரால், 'டீலில்' விடப்பட்ட அத்தனை நடிகர்களும் செம காண்டாகி விட்டதுடன், 'தளபதி படம் முடிந்த கையோடு நம்மிடம் வந்துதானே ஆக வேண்டும். அப்போது, மூனுஷாவை ஒரு கை பார்த்து விடலாம்...' என்று, நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சினி துளிகள்!

* 'ஹாரர்' அல்லாத, 'ஆக் ஷன்' கதைகளில், கதையின் நாயகியாக நடிப்பதில், அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறார், த்ரிஷா.

* சந்திரமுகி - 2 படத்தில் காமெடியனாக வடிவேலுவும், நாயகனாக லாரன்ஸ்சும், 'ரொமான்ஸ்' செய்யும் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

* விருமன், மாவீரன் படங்களில் நடித்துள்ள, இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர், தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க, ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us