தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்புவின், 'டபுள் ஆக் ஷன்!'

தன், 48வது படத்தில், 'ஹீரோ - -வில்லன்' என, 'டபுள் ஆக் ஷன்' கொடுக்கப் போகிறார், சிம்பு.

'ஹீரோ - ஒல்லியாகவும், வில்லன் வேடம், பருமனான கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால், எடை குறைத்து, எடை அதிகப்படுத்தி என, இரண்டு விதமாக நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். இதுவரை, நான் நடித்ததில், இந்த படத்தின், 'ஆக் ஷன்' காட்சிகள் வித்தியாசமாக இருக்கும்.

'அதற்காகவே லண்டன் சென்று, புது வகை சண்டை பயிற்சியை கற்று வந்துள்ளேன். அந்த சண்டை காட்சியை பார்த்து, 'தமிழ் சினிமாவில், சிம்பு, 'ட்ரெண்ட் செட்டர்' ஆகி விட்டார்...' என்று அனைவரும் கூறுவர்.

'அந்த அளவுக்கு தமிழ் சினிமா பார்த்திராத மாறுபட்ட, 'ஆக் ஷன்' அடி முறையை அமல்படுத்தப் போகிறேன்...' என்று, கூறி வருகிறார், சிம்பு.

சினிமா பொன்னையா

ரூ. 2 கோடி வைர மோதிரத்துடன் வலம் வரும், தமன்னா!

கடந்த 2019ல், சிரஞ்சீவி நடித்த, சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார், தமன்னா. அந்த படம், 'ஹிட்' அடித்ததை அடுத்து, சிரஞ்சீவியின் மருமகளும், நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா, தமன்னாவுக்கு, ஒரு வைரக்கல் மோதிரத்தை பரிசாக கொடுத்தார்.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை, இப்போதும் முக்கிய பட விழாக்களுக்கு அணிந்து வருகிறார், தமன்னா. அது குறித்து கேட்பவர்களிடம், 'நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, எனக்கு பரிசாக கொடுத்த மோதிரம் இது...' என்று, பெருமையாக சொல்கிறார்.

ராம்சரணின் மனைவி மட்டுமின்றி, தான் ஜோடியாக நடிக்கும் மற்ற, 'ஹீரோ'களின் மனைவியரிடமும் நெருக்கமான தோழியாக பழகி வருகிறார், தமன்னா.

எலீசா

படக்கூலியை உயர்த்திய, கீர்த்தி சுரேஷ்!

தெலுங்கு சினிமாவில், மூன்று கோடி சம்பளம் வாங்கி வரும், கீர்த்தி சுரேஷுக்கு, தமிழில், 1.5 கோடி ரூபாய் தான் கொடுத்து வந்தனர். தற்போது, திரைக்கு வந்திருக்கும், மாமன்னன் படத்தில் நடிக்க, இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

அதோடு, நீண்ட இடைவெளிக்கு பிறகு அது, 'மெகா ஹிட்' படமாக அமைந்திருப்பதால், தற்போது, படக்கூலியை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். மேலும், தெலுங்கில் அவர் நடித்த, சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தசரா போன்ற படங்கள், 'பிளாக்பஸ்டர், ஹிட்' அடித்ததால், அங்கு, சம்பளத்தை நான்கு கோடியாக உயர்த்தியுள்ளார்.

எலீசா

மெகா வில்லன்களை தேடும், சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, தன் படங்களில், பாலிவுட் வில்லன்களை இணைப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், மாவீரன் படத்தை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், 'கமலின், விஸ்வரூபம் படத்தில், வில்லனாக நடித்த, பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் என்பவரை இணைத்து இருக்கிறேன்.

'அது மட்டுமின்றி, விஜயின், சர்க்கார் மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த, மாற்று மொழி வில்லன்களையும் இப்படத்தில் இணைத்து, என்னையும் முதல் தர, 'ஹீரோ' ஆக எடுத்து செல்லும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

உச்ச நடிகர் நடித்த, 'ஹிட்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும், காஞ்சனா நாயகனை, உச்ச நடிகர் பாணியில் நடிக்குமாறு, அப்பட இயக்குனர் கேட்டுக் கொண்டதற்கு, மறுப்பு தெரிவித்து விட்டார்.

'ஒரு நடிகர், சினிமாவை விட்டு வெளியேறி விட்டால், அவர்களைப் போன்று நடிப்பதில் தவறில்லை.ஆனால், சினிமாவில் அவர் நடித்து வரும் நிலையில், அதே பாணியில் நாம் நடிப்பது அவர்களுக்கு எதிரான செயலாகும்.

'அதோடு, அவர் என் குருநாதர். அவருக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன்...' என்று சொல்லி மறுத்து விட்டார், காஞ்சனா நாயகன்.

சினி துளிகள்!

* பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்துள்ள, சந்திரமுகி - -2 படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வர உள்ளது.

* ஜெயம் ரவி நடிக்கும், சீனி என்ற படத்தில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி என, மூன்று நடிகையர் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us